75 வருடமாக உணவு, நீர் அருந்தாமல் வாழ்ந்துவரும் பிரகலாத் ஜானி!

Posted By:
Subscribe to Boldsky

பிரகலாத் ஜானி, மாதாஜி என்றும் பிரபலமாக அழைக்கப்படும் இந்திய சாமியார். இவர் பிறந்தது மேஹ்சனா எனும் கிராமத்தில். தனது 7 வயதிலேயே ராஜஸ்தானில் தனது வீட்டில் இருந்து வெளியேறி, காட்டில் வாழ ஆரம்பித்தார்.

பிரகலாத் ஜானி தனது 11வது வயதில் அம்பாள் தன் முன் தோன்றியதாகவும், இனிமேல், நீர், உணவு அருந்த வேண்டாம் என கூறியதாகவும், அதன் பேரில் இவர் தொடர்ந்து உணவருந்தாமல் இருப்பதாகவும் கூறப்படுகின்றன.

1940-ல் இருந்து இவர் அம்பாளை போல சிவப்பு நிற உடை உடுத்திக் கொள்வதும், நகை, ஆபரணங்கள் அணிந்துக் கொள்வதும். மற்றும் அம்பாள் கூறியதாக இவர் நீர், உணவு உட்கொள்ளாமலும் வாழ்ந்து வருகிறார். இவர், அம்பாளே தன்னை வாழ வைப்பதாகவும் கருதுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குஜராத் குகை!

குஜராத் குகை!

1970-ல் இருந்து பிரகலாத் ஜானி குஜராத்தில் இருக்கும் மழைக்காட்டின் குகையில் தான் வாழ்ந்து வருகிறார். தினமும் காலை நான்கு மணிக்கு எழுந்து தியானம் செய்ய துவங்கிவிடுகிறார் பிரகலாத் ஜானி.

Image Courtesy

விசாரணைகள்!

விசாரணைகள்!

மெல்ல, மெல்ல பிரகலாத் ஜானி உணவு, நீர் அருந்தாமல் உயிர் வாழ்ந்து வருகிறார் என்பது பரவ ஆரம்பித்து, இதுக்குறித்து சில விசாரணைகளும் நடத்தப்பட்டன. 2003 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.

2003 மருத்துவ பரிசோதனை!

2003 மருத்துவ பரிசோதனை!

முதலில் சுதிர் ஷா எனும் மருத்துவரால் பிரகலாத் ஜானி 2003-ம் ஆண்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டார். அகமதாபாத் மருத்துவமனையில் இவரை பத்து நாட்கள் வைத்து பரிசோதனை செய்தனர்.

மலம் / சிறுநீர்!

மலம் / சிறுநீர்!

பரிசோதனை செய்த இவர் பத்து நாட்கள் மலம், சிறுநீர் கழிக்கவே இல்லை. ஆனால், இவரது சிறுநீர் பையில் சிறுநீர் உருவாவது தெரிகிறது என தெரிவித்தனர்.

மேலும், பரிசோதனை செய்து பத்து நாட்களில் இவரிடம் உடல் எடையில் மாற்றம் தெரிகிறது என்றும் கூறினார். இந்த காரணத்தால், இவர் உணவு அருந்தாமல் உயிர் வாழ்கிறார் என்பது பொய்யாக இருக்குமோ என சந்தேகித்தனர்.

2010 மருத்துவ பரிசோதனைகள்!

2010 மருத்துவ பரிசோதனைகள்!

மீண்டும் மருத்துவர் சுதிர் ஷா மற்றும் அவரது டீம் மற்றும் 35 ஆராய்ச்சியாளர்கள் , இதர நிறுவனங்கள் சேர்ந்து இராண்டாவது முறையாக பிரகலாத் ஜானியை பரிசோதனை செய்தனர்.

பிரகலாத் ஜானி கூறியதன் பேரில், கழிவறைகள் பூட்டப்பட்டன, சூரிய ஒளி மட்டும் இருக்கும் அறையில் அவர் அடைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வுகள்!

ஆய்வுகள்!

இரத்த, சிறுநீர் போன்ற பல பரிசோதனைகளில் பிரகலாத் ஜானி நார்மலாக இருப்பது தெரிய வந்தது. அவர் தனது சிறுநீர் பையில் உருவாகும் சிறுநீரை மறுசுழற்சி செய்கிறார் எனவும் கூறப்பட்டது.

குளிப்பதற்கு மட்டும் இவர் அனுமதிக்கப்பட்டார். சிசிடிவி கேமரா மூலமும் இவரை 15 நாட்கள் தொடர்ந்து கண்காணிப்பு செய்தனர்.

பசி?

பசி?

உடலில் பசி சார்ந்து சுரக்கும் லெப்டின் மற்றும் க்ரெலின் எனும் இரண்டு சுரப்பிகளும் கூட இயல்பாக தான் இருந்தன என மருத்துவர்கள் கூறினார்.

நீர் அருந்தாமலே இவர் தனது உடலில் நீர் வறட்சி உண்டாகாமல் எப்படி பாதுகாக்கிறார் என்பது விசித்திரமாக இருந்தது.

ஹார்வர்ட் மருத்துவர்!

ஹார்வர்ட் மருத்துவர்!

ஹார்வர்ட் மருத்துவரான மைக்கல் வான், பிரகலாத் ஜானியின் ரிபோர்ட்டை டிஸ்மிஸ் செய்தார். இது நம்பதக்கதே இல்லை என்றார். இவ்வாறு இருந்தால் கல்லீரல் செயலிழப்பு, இதய பாதிப்புகள் உண்டாகும் என கூறினார்.

அமெரிக்கன் டயட் அமைப்பு!

அமெரிக்கன் டயட் அமைப்பு!

அமெரிக்க டயட் அமைப்பு ஒரு நாளுக்கு மேல் நீர் அருந்தாமல் இருந்தாலே உடலில் அபாயமான தாக்கங்கள் உண்டாகும் என்றனர்.

மேலும், பீட்டர் என்ற ஊட்டச்சத்து நிபுணர் பிரகலாத் ஜானியின் ரிபோர்ட் டீம் ஏதோ ஏமாற்றியுள்ளனர். இதை ஏற்க முடியாது என்றும் கூறினார்.

இறப்பு!

இறப்பு!

15 - 20 நாட்கள் ஒரு நபர் நீர் குடிக்காமல் இருப்பதே மிக கடினம். கண்டிப்பாக இறந்துவிடுவார்கள் என்றார். இவரை பரிசோதனை செய்த டாக்டார் சுதிர் ஷா, ஆஸ்திரேலிய, அமெரிக்க நிபுணர்கள் இவரை ஆய்வு செய்ய ஆர்வம் காட்டியுள்ளதாக கூறினார்.

டிஸ்கவரி!

டிஸ்கவரி!

கடந்த 2006-ம் ஆண்டு இவரைடிஸ்கவரி சேனல் பேட்டி கண்டது. மேலும், 2010-ம் ஆண்டு இன்டிபென்டன்ட் டெலிவிஷன் நெட்வர்க் பிரகலாத் ஜானி பற்றிய சிறப்பு காணொளி தொகுப்பு வெளியிட்டது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Man Who Lives Without Food And Water For More Than 75 Years

The Man Who Lives Without Food And Water For More Than 75 Years
Subscribe Newsletter