உலகின் பழமையான பத்து நகரங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

மனித இனம் என்பது மிக எளிமையாக தோன்றிய இனம் அல்ல. கற்காலம் முதல் இந்த கணினி யுகம் வரையிலான வளர்ச்சிக்கு இடைப்பட்ட பல ஆயிர வருடங்கள் இருக்கின்றன. உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து, மிக வேகமாக அழியப் போகும் இனம் மனித இனம் தான்.

இயற்கை சீற்றத்தினால் அழிந்த உலக நகரங்கள்!!!

மனித இனத்தின் தனித்தன்மை ஆறாம் அறிவு. அதை வைத்து தான் நாம் இவ்வளவு அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிந்து வருகிறோம். இதனால் கிடைத்த நன்மைகளை விட, தீமைகள் தான் அதிகம் என்பது யாராலும் மறுக்க முடியாத. ஆரம்பக் காலாத்தில் மனிதன் மிகவும் கடினப்பட்டு உருவாக்கியது சமூகமாக ஒன்றுகூடி வாழ்வது தான்.

ஆழ்கடலில் மூழ்கிய பண்டையக் காலத்து அற்புத நகரங்கள்!!!

இதற்கான முதல் படியாக இருந்தது தான் நகர கட்டமைப்பு. இந்த வகையில் உலகின் பழமையான நகரங்கள் என்று கூறப்படும் பத்து நகரங்களை பற்றி இனிக் காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெய்ருட், லெபனான்

பெய்ருட், லெபனான்

லெபனானின் தலைநகர் தான் பெய்ருட். இது ஏறத்தாழ 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டமைக்கப்பட்ட நகராகும். இது வர்த்தகத்திற்கு பெயர்போன இடமாக இருந்தது என வரலாற்று கூற்றுகள் கூறுகின்றன.

காஜியண்டெப், துருக்கி

காஜியண்டெப், துருக்கி

துருக்கி நாட்டில் இருக்கும் ஓர் முக்கிய நகரம் இந்த காஜியண்டெப். இந்நகர் இதற்கு முன்பும், இப்போதும் பேச்சுவழக்கில் அன்டேப் என அழைக்கப்படுகிறது.

பிளோவிடிவ், பல்கேரியா

பிளோவிடிவ், பல்கேரியா

பிளோவிடிவ், பல்கேரியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். இது ரோமர்கள் ஆட்சியில் மிக முக்கிய நகர்களில் ஒன்றாக திகழ்ந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சீதோன், லெபனான்

சீதோன், லெபனான்

லெபனான் நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய நகரம் இந்த சீதோன். இந்நகரம் ஏறத்தாழ 6,000 ஆண்டுகளுக்கு முன்னராக கட்டமைக்கப்பட்ட நகராகும்.

ஃபயும், எகிப்து

ஃபயும், எகிப்து

எகிப்தின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் நகர் தான் இந்த ஃபயும் (fayum). பண்டைய காலத்தில் இந்த நகரம் ஷீதேட் என அழைக்கப்பட்டு வந்துள்ளது. எகிப்தின் பழமையான நகரங்களில் இதுவும் ஒன்று.

சுசா, ஈரான்

சுசா, ஈரான்

எலமைட் பேரரசின் தலைநகராக இருந்துள்ளது சுசா எனும் இந்த நகரம். பிறகு முதல் பெர்ஷியன் பேரரசால் இது கையகப்படுத்தப்பட்டது.

டமாஸ்கஸ், சிரியா

டமாஸ்கஸ், சிரியா

டமாஸ்கஸ் சிரியாவின் இரண்டாவது பெரும் நகர் மற்றும் தலைநகராக திகழ்ந்து வருகிறது.

அலெப்போ, சிரியா

அலெப்போ, சிரியா

அலெப்போ தான் சிரியாவின் மிகப்பெரியா நகராகும். மேலும், இது தான் மக்கள் தொகை அளவிலும் சிரியாவில் முதல் இடத்தில் இருக்கிறது.

பைப்லோஸ், லெபனான்

பைப்லோஸ், லெபனான்

பைப்லோஸ் எனும் இந்நகரம் 8800 பி.சி-யிலேயே கட்டமைக்கப்பட நகரம் என கூறப்படுகிறது. இது யுனெஸ்கோவினால் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எரிகோ, பாலஸ்தீனம்

எரிகோ, பாலஸ்தீனம்

பாலஸ்தீனத்தில் இருக்கும் எரிகோ எனும் இந்நகரம் ஏறத்தாழ 11,000 ஆண்டுகள் பழமையான என அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image Courtesy

English summary

Ten Worlds Oldest Cities

Ten Worlds Oldest Cities, read here in tamil.
Story first published: Wednesday, March 16, 2016, 15:27 [IST]