For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிறுக்குத்தனமான பத்து உலக சாதனைகள்!

|

நேற்று தான் பிரபல பின்னணி பாடகி சுசிலா அவர்கள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். இவர் 9 மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். இதில் 17,695 பாடல்களை தனியாக பாடியதற்காக இவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தியர்கள் செய்த டாப் 10 விசித்திரமான கின்னஸ் சாதனைகள்!!!

இதுப் போல பலர் தங்களது திறமையை சிறப்பான முறையில் நிரூபித்து கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தி, அப்புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். ஆனால், சிலரோ கிறுக்குத்தனமான கண்டைதை செய்தும் உலக சாதனை நிகழத்தியுள்ளனர்.

உலகில் உள்ள மிகவும் விசித்திரமான சில கின்னஸ் சாதனைகள்!!!

வாயு மூலமாக மெழுகுவர்த்தியை அணைப்பது, விமானத்தை உண்பது என பல சாதனைகள் இப்படி நிகழ்த்தப்பட்டுள்ளன. அவற்றில் சிறந்த பத்து கிறுக்குத்தனமான உலக சாதனைகள் பற்றி இங்கு காண்போம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாயு

வாயு

தான் "குஷ்" மூலம் ஐந்து மெழுகுவர்த்திகளை "புஷ்" ஆக்கி பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மிஸ்டர்.ஜெஸ்சி என்பவர் உலக சாதனை செய்துள்ளார். மெய்யாலுமே இதுக்கு நெஞ்சுல மஞ்சா சோறு வேணும் பாஸு.

Image Courtesy

கும்மாகுத்து

கும்மாகுத்து

இடுப்பும், தொடையும் சேரும் இடத்தில் 22 Mph வேகத்தில் குத்து வாங்கி அசராமல் நின்று கிர்பி ராய் என்பவர் வலிமிகுந்த உலக சாதனையை செய்துள்ளார். இவர் அமெரிக்காவை சேர்ந்தவர்.

Image Courtesy

கத்து

கத்து

வடக்கு அயர்லாந்தை சேர்ந்த அன்னாலிசா (Annalisa Flannagan) எனும் ஆசிரியர் பெரும் கூச்சலிட்டு கத்தி கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார். இவர் கத்தியதில் ஒலியளவு 120.7 டெசிபல்கள் ஆகும். இவரது சாதனையை ஜில் ட்ரேக் எனும் பிரிட்டிஷ் ஆசிரியர் 129 டெசிபல் அளவு கத்தி 2000-ம் ஆண்டு சாதனையை முறியடித்தார்.

Image Courtesy

மெத்தை ஒழுங்கு செய்தல்

மெத்தை ஒழுங்கு செய்தல்

ஆண்ட்ரியா வார்னர் எனும் ஆங்கிலேயே ஹோட்டல் மேலாளர், தான் கத்திக்கிட்ட மொத்த வித்தையையும் மெத்தை விரிப்புகள் ஒழுங்கு செய்வதில் இறக்கி சாதனை செய்துள்ளார். இவர் ஓர் செட் மெத்தை, விரிப்பு, தலையணை, போர்வை போன்றவற்றை வெறும் 74 நொடிகளில் ஒழுங்குபடுத்தி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Image Courtesy

நத்தை

நத்தை

11 வயது நிரம்பிய சிறுவன் தனது 11வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது 43 நத்தைகளை தனது முகத்தில் பரவவிட்டு உலக சாதனை படைத்துள்ளார். (ஏம்மா ஒத்தரோசா உன் புள்ளையா நல்லா வளத்திருக்க-மா)

Image Courtesy

தர்பூசணி அறுத்தல்

தர்பூசணி அறுத்தல்

ஓர் நபரின் வயிற்றில் அதிக தர்பூசணிகளை அறுத்தல் தான் இந்த சாதனை. கடந்த 2012-ம் ஆண்டு பிபின் லார்கின் மற்றும் அஸ்ரிதா ஃபர்மன் என்ற நியூயார்க்கை சேர்ந்த இருவர் இந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். ஒரு நிமிடத்தில் 48 தர்பூசணிகளை ஒரே வெட்டில் அறுத்து இந்த சாதனையை இவர்கள் செய்துள்ளனர்.

Image Courtesy

விமானத்தை உண்டு சாதனை

விமானத்தை உண்டு சாதனை

மைக்கல் லோட்டிடோ என்பவருக்கு சிறு வயது முதலே செரிமானம் ஆகாதா பொருட்களை தேடி உண்பதை வழக்கமாக வைத்துள்ளார். சைக்கிள், டிவி, வாஷிங் டியூப் போன்றவற்றை எல்லாம் இவர் உண்டுள்ளார். 1978-1980-ல் இவர் ஓர் விமானத்தை முழுவதுமாக 150 துண்டுகளாக வெட்டி உண்டு சாதனை செய்துள்ளார்.

Image Courtesy

நாய்கள் திருமணம்

நாய்கள் திருமணம்

கடந்த 2007-ம் ஆண்டு ஜில் கோப் என்பவர் தனது தலைமையில் 178 ஜோடி நாய்களுக்கு திருமணம் செய்து வைத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

Image Courtesy

எண்

எண்

லெஸ் ஸ்டீவர்ட் என்பவர் 16 வருடங்கள் உழைத்து செய்த சாதனை எந்த பயனும் அற்றது. ஆம், 16 வருடங்கள் இவர் டைப் ரைட்டிங் மெஷினில் 1 முதல் 1 மில்லியன் வரையிலான எண்களை வரிசையாக அடித்து சாதனை செய்துள்ளார் அதாவது "one; two; three; four; five; six; seven; eight; nine...." முதல் "Nine hundred and ninety-nine thousand, nine hundred and ninety-nine; one million." வரை.

Image Courtesy

சாதனைகளில் சாதனை

சாதனைகளில் சாதனை

மோசமான, கிறுக்குத்தனமான சாதனைகளை அதிகளவு செய்ததில் இவர் சாதனை செய்துள்ளார். அஸ்ரிதா ஃபர்மன். 27,000 முறை குதித்தது, ஒரு மைல் தூரம் பாஸ்கெட் பாலை கையில் ஏந்தியபடி வேகமாக ஓடியது என 551 சாதனைகளை இவர் நிகழ்த்தியுள்ளார். என்னவாக இருந்தாலும் 551-க்காகவே ஒரு சல்யூட் வைக்க தான் வேண்டும்!

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Stupidest World Records

Do you know about these Ten Stupidest World Records? take a look.
Story first published: Wednesday, March 30, 2016, 11:42 [IST]
Desktop Bottom Promotion