பரபரப்பான உண்மை சம்பவங்களை கொண்டு உருவாக்கப்பட்ட 22 தமிழ் சினிமாக்கள்!

By: Staff
Subscribe to Boldsky

எந்த ஒரு கதையும் நம் வாழ்க்கையில் நடந்த அல்லது நேரில் கண்ட காதுப்பட கேட்ட ஏதேனும் ஓர் சம்பவம் அல்லது அந்த சம்பவத்தினால் நம்முள் ஏற்பட்ட தாக்கத்தின் வெளிபாடு தான். கற்பனை கதையாக இருப்பினும் கூட, அந்த கற்பனை உருவாக ஏதேனும் ஓர் உண்மை சம்பவம் பின்னணி காரணியாக இருந்திருக்கும்.

அச்ச அசலாக... ஒரே மாதிரி இருக்கும் பிரபலங்கள்!!!

சில சமயங்களில் இயக்குனர்கள் சம்பவங்களினால் ஏற்பட்ட தாக்கம் என்றில்லாமல், அந்த உண்மை சம்பவத்தையே திரைப்படமாக எடுப்பதுமுண்டு. அவ்வாறு பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ளன. இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் உண்மை சம்பவங்களின் பின்னணி கொண்டவை தான்.

சில்க், ஜெமினி, கலாபவன்: சில பிரபலங்களின் பெயர் வினோதமாக அமைந்தது எப்படின்னு தெரியுமா?

இனி, உண்மை சம்பவங்களை கொண்டு உருவாக்கப்பட்ட 22 தமிழ் சினிமாக்கள்பற்றி பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நடுவல கொஞ்சம் பக்கத்த காணோம்!

நடுவல கொஞ்சம் பக்கத்த காணோம்!

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் என்பவற்றின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை தான் காமெடியாக இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கியிருந்தார்.

பம்பாய் (பாம்பே)

பம்பாய் (பாம்பே)

இந்த திரைப்படம் 1992-1993 வரை நடைபெற்ற கலவரங்கள் மற்றும் சம்பவங்களை கொண்டு கற்பனை கலந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கிய திரைப்படம் ஆகும்.

கல்லூரி

கல்லூரி

2000-ம் ஆண்டு தர்மபுரியில் நடந்த பேருந்து எரிப்பு சம்பவத்தை கருவாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

கழுகு

கழுகு

2012-ம் ஆண்டு வெளிவந்த கழுகு எனும் திரைப்படமும் உண்மை சம்பவத்தை கருவாய் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

இருவர்

இருவர்

மணிரத்னம் இயக்கிய இருவர், தமிழக அரசியலில் பெரும் புள்ளிகளாக திகழ்ந்த கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர் மத்தியிலான நட்புறவை கருவாய் கொண்டு இயக்கப்பட்ட திரைப்படமாகும்.

இரத்த சரித்திரம்

இரத்த சரித்திரம்

இத்திரைப்படம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பரிதாலா ரவிந்திரர் மற்றும் மத்தலசெருவு சூரி என்பவர்களிக்கு இடையே நடந்த மோதல் சம்பவத்தைச் சித்தரிக்கும் உண்மைக் கதைத் திரைப்படம் ஆகும்

வழக்கு எண் 18/9

வழக்கு எண் 18/9

2012-ல் வெளியான இந்த திரைப்படம் சமூகத்தில் நடந்த, நடந்துக் கொண்டிருக்கும் உண்மை சம்பவங்களின் தொகுப்பாக வெளிவந்தது. ரசிகர், விமர்சகர், ஊடகங்கள் என அனைத்து தரப்பிலும் பாராட்டப்பட்ட திரைப்படமாக இது அமைந்தது.

அரவான்

அரவான்

இந்த கதை சு. வெங்கடேசன் எழுதிய 2011 ஆண்டுக்கான இந்திய சாகித்திய அகாதமி விருது பெற்ற புதினமான காவல் கோட்டத்தில் வரும் ஒரு துணைக் கதை ஆகும். இது வரலாற்று உண்மை சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணை

விசாரணை

எம். சந்திரகுமார் என்பவர் எழுதிய உண்மை சம்பவமான லாக் அப் எனும் நாவலின் தழுவல் தான் விசாரணை திரைப்படம்.

நாயகன்

நாயகன்

மும்பையில் தாதாகவாக விளங்கிய வரதராஜன் முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

கப்பலோட்டிய தமிழன்

கப்பலோட்டிய தமிழன்

கப்பலோட்டிய வீரத்தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களது வாழ்க்கை சம்பவங்களை கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் இது.

குரு

குரு

அம்பானியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தொகுப்பாக கொண்டு தழுவி இப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியிருந்தார்.

குப்பி

குப்பி

"குப்பி" இது 1991 மே மாதம் 21 ஆம் நாள் தமிழ்நாடு ஸ்ரீபெரும்புதூர் எனும் இடத்தில் நிகழ்ந்த ராஜிவ் காந்தி படுகொலையின் பின்னனியை மையமாக வைத்து எடுக்கப்பட்டத் திரைப்படம்.

ஹரிதாஸ்

ஹரிதாஸ்

ஓர் போலிஸ் அதிகாரி மற்றும் மாற்றுதிறன் கொண்ட அவரது மகன் பற்றிய இந்த கதை ஓர் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

காதல்

காதல்

பாலாஜி சக்திவேல் ஒரு ரயில் பயணத்தின் போது பயணியிடம் கேட்டறிந்த அந்த நபரின் உண்மை வாழ்க்கை சம்பவம் தான் காதல் திரைப்படமாகும்.

ராமானுஜன்

ராமானுஜன்

கணித மேதை ராமானுஜன் அவரது வாழ்க்கை வரலாறு தான் இந்த திரைப்படம்.

வனயுத்தம்

வனயுத்தம்

சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவனை போலிஸ் பிடித்த சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் தான வணயுத்தம்.

பரதேசி

பரதேசி

ரெட் டீ எனும் எரியும் பனிக்காடு (தமிழில்) எழுதப்பட்ட நாவலின் திரைவடிவம் தான் இந்த திரைப்படம். இது 1930 ஆம் ஆண்டுகளில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகும்.

சத்தம் போடாதே

சத்தம் போடாதே

இயக்குனர் வசந்த் இயக்கி 2007-ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் ஓர் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

பெரியார்

பெரியார்

ஈ. வெ. இராமசாமி எனும் பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு தான் இந்த திரைப்படம்.

காமராஜ்

காமராஜ்

முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் இந்திய காங்கிரஸ் தலைவர் காமராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாறு தான் இந்த திரைப்படம்.

பாரதி

பாரதி

மகாக்கவி பாரதியாரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை கொண்டு உருவாக்கப்பட்ட வாழ்க்கை வரலாறு இந்த திரைப்படம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tamil Films Based On True Stories

Tamil Films Based On True Stories, take a look on here.
Subscribe Newsletter