For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சபரிமலையில் உள்ள 18 படிகளின் முக்கியத்துவம் குறித்து தெரியுமா?

By Ashok CR
|

மிகவும் அதிகமாக பக்தர்கள் குவியும் புனித ஸ்தலங்களில் ஒன்றான சபரிமலையில், ஐயப்பனின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக வருடந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் பக்தர்களின் எண்ணிக்கை பெருவாரியாக அதிகரித்து கொண்டே தான் உள்ளது. அதற்கு காரணம் அதிசயம் நிறைந்த இந்த தெய்வீக ஸ்தலத்தை நம்புபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதே.

ஐயப்பன்: விஷ்ணு மற்றும் சிவபெருமானின் புதிரான புதல்வன்

இக்கோவிலில் உள்ள முக்கியமான இடம் அங்குள்ள 18 படிகள். ஐயப்பனைக் காண வேண்டுமென்றால் உங்கள் தலையில் இருமுடி சுமந்து கொண்டு, இந்த 18 படிகளில் ஏறி தான் செல்ல வேண்டும். கோவிலுக்கு செல்லும் முன், சில விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விரதம் பொதுவாக 41 நாட்களுக்கு நீடிக்கும். அப்படி விரதம் இருக்கும் பக்தர் தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, குளிர்ந்த நீரில் குளித்து, ஐயப்பனைப் போற்றி பஜனைகளைப் பாட வேண்டும்.

ஐயப்ப பக்தர்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டிவைகள்!!!

41 ஆவது நாளன்று, பக்தரின் தலையின் இருமுடி ஏந்தப்படும். இருமுடி என்பது விரதத்தின் முக்கியமான அங்கம். தங்கள் தலையில் இருமுடியை வைத்துக் கொண்டு தான் பக்தர்கள் 18 படிகளை ஏறிச்செல்ல முடியும். ஒவ்வொரு படியும் தனித்துவ முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அந்த 18 படிகளின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் ஐந்து படிகள் - ஐம்புலன்கள்

முதல் ஐந்து படிகள் - ஐம்புலன்கள்

முதல் ஐந்து படிகளை ஐம்புலன்கள், அதாவது கண்கள், மூக்கு, காதுகள், வாய் மற்றும் உணர்வு என அழைக்கின்றனர்.

ஐம்புலன்கள்

ஐம்புலன்கள்

மனிதனின் கண்கள் எப்போதும் நல்லதை மட்டுமே பார்த்து, மோசமானவற்றை பார்க்காமல் தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிறது. அதேப்போல் நல்லதை மட்டுமே கேட்டு, வீண்பேச்சுக்களைப் பற்றி சிந்திக்கக்கூடாது. நல்லதை பேசுவதற்கு மட்டுமே நாவை பயன்படுத்த வேண்டும். எப்போதும் ஐயப்பன் பேரை ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் சுத்தமான காற்றை மட்டும் சுவாசிக்க வேண்டும். கடவுளுக்கு அர்பணிக்கப்படும் பூக்களின் நறுமணத்தை நுகர வேண்டும். ஸ்பரிசம் என வரும் போது, ஒருவர் எப்போதும் ஜப மாலையை மட்டுமே தொட வேண்டும். அப்படி செய்கையில் ஐயப்பனின் பெயரை உரைக்க வேண்டும்.

அடுத்த 8 படிகள் - அஷ்டரகஸ்

அடுத்த 8 படிகள் - அஷ்டரகஸ்

காமம், குரோதம், பேரார்வம், மோகம், கர்வம், ஆரோக்கியமற்ற போட்டி, பொறாமை மற்றும் தற்பெருமையை குறிப்பதே அஷ்டரகஸ்.

அஷ்டரகஸ்

அஷ்டரகஸ்

ஒருவர் எப்போதும் நான் என்னும் அகங்காரம் இல்லாமல், பொறாமையை விட்டொழிய வேண்டும் என அஷ்டரகஸ் கூறுகிறது. அவன் எப்போதும் ஐயப்பனின் பெயரை ஜெபிக்க வேண்டும். வாழ்க்கையில் எதன் மீதும் பேராசை படக்கூடாது. தீயவர்கள் தங்களின் வாழ்க்கையில் சரியான பாதையைப் பின்பற்ற உதவியும், வழிகாட்டலும் செய்திட வேண்டும்.

அடுத்த மூன்று படிகள் - மூன்று குணங்கள்

அடுத்த மூன்று படிகள் - மூன்று குணங்கள்

மனிதனுக்கு மனிதன் குணம் மாறுபடும். இவை அனைத்தும் சாத்வீகம், ரஜோ, தாமச குணங்கள் என்ற மூன்று வகைக்குள் அடங்கிவிடும். சோம்பலை விட்டு விட்டு, ஒருவர் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும் என்பதை இந்த மூன்று குணங்களும் குறிக்கிறது. நான் என்ற அகங்காரம் இல்லாமல் ஐயப்பா சுவாமியிடம் சரணடைய வேண்டும்.

கடைசி இரண்டு படிகள் - வித்யா மற்றும் அவித்யா

கடைசி இரண்டு படிகள் - வித்யா மற்றும் அவித்யா

கடைசி இரண்டு படிகளை வித்யா மற்றும் அவித்யா என அழைப்பார்கள். வித்யா என்றால் அறிவு. நான் என்ற அகங்காரத்தை (அவித்யா) விட்டு விட்டு, நாம் ஞானத்தை பெற வேண்டும். பின் மோட்சத்தைப் பெற வேண்டும்.

மெய்யாக உணர்தல்

மெய்யாக உணர்தல்

சபரிமலையில் உள்ள 18 படிகளில் ஏறிய பிறகு, ஒருவருக்கு வாழ்க்கையின் மீதான ஞானம் கிடைத்து, வாழ்க்கையின் நோக்கத்தை உணர்வார் என நம்பப்படுகிறது.

தேங்காய் உடைத்தல்

தேங்காய் உடைத்தல்

ஏற்கனவே கூறியதை போல், இருமுடி என்பது மிகவும் முக்கியமானதாகும். 18 படிகளில் ஏறும் போது அதனை தலையில் ஏந்திக் கொள்ள வேண்டும். இருமுடியில் உள்ள பொருட்கள் கோவிலில் அர்பணிக்கப்பட்டு, பின் வீட்டிற்கு பிரசாதத்தை எடுத்துச் செல்லலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Significance Of 18 Steps In Sabarimala Temple

Sabarimala is the one of the most visited pilgrimage places where lakhs of people visit the temple to take the blessings of the Lord Ayyappa. We know that to see the lord ayyappa we need to climb the 18 steps. But do you know what each steps signifies. This is a very interesting thing. Read to know more...
Desktop Bottom Promotion