ரஜினி - அஜித் மத்தியிலான வியக்க வைக்கும் 7 ஒற்றுமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

தலைவர் - தல, இருவருக்குமே தமிழகத்தில் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டுள்ளவர்கள். ரசிகர்கள் எண்ணிக்கையை விட, வெறியர்கள் எண்ணிக்கை ரஜினி, அஜித்திற்கு அதிகம்.

திரையில் பார்த்தாலே போதும் என காத்திருந்து இவர்கள் இருவரையும் ரசிக்க பெரும் கூட்டமே இருக்கிறது. இதற்கு காரணம் இவர்களது உண்மையான சுபாவம், திரையில் மட்டுமே நடிக்க தெரிந்த இவர்களது பண்பு. யாருக்கும் தெரியாமல் உதவி செய்யும் இவர்களது குணாதிசயம்.

மக்கள் மத்தியில் நடிகன் என்பதை தாண்டி நல்ல மனிதன் என இவர்கள் பெற்ற பெயர். இதுப்போல ரஜினி, அஜித் மத்தியில் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அதில், மேலோங்கி காணப்படும் 7 ஒற்றுமைகள் பற்றி இனிக் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒற்றுமை #1

ஒற்றுமை #1

பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டு கோலிவுட்டை கலக்கும் ரஜினி, அஜித் இருவரும் பிறப்பால் தமிழர்கள் அல்ல. ரஜினி (எ) சிவாஜி ராவ் மராத்தி குடும்பத்தை சேர்ந்தவர்.

அஜித் செகந்திராபாத், தெலுங்கான பகுதியை சேர்ந்தவர்.

அஜித்திற்கு தமிழ் திரையுலகின் நடிகராகும் வரை தமிழ் சரியாக தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. நடிக்க வந்த பிறகு தான் தமிழ் மொழி பேசும் ஆளுமை கொண்டார்.

ஒற்றுமை #2

ஒற்றுமை #2

இருவருக்குமே திரையுலகில் பின்புலம் ஏதும் இல்லை. தானாக தங்கள் முயற்சி மற்றும் திறமையால் முன்னேறியவர்கள்.

இருவருமே நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். தங்களுக்கான தனி பாணியின் மூலமாக இந்தியாவின் முன்னணி நட்ச்சத்திர அந்தஸ்து பெற்றவர்கள்.

ஒற்றுமை #3

ஒற்றுமை #3

தங்கள் சுய வாழ்க்கை தனிப்பட்டது என்பதில் மிக கவனமாக இருந்தவர்கள். தங்கள் குழந்தைகள், பெற்றோர், மனைவி என யார் மீதும் அதிக ஊடக வெளிச்சம் படாமலும்.

தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதிலும் கவனமாக இருப்பவர்கள். ரியல் லைப், ரீல் லைப் என இரண்டையும் பிரித்து வாழ்பவர்கள் ரஜினி மற்றும் அஜித்.

ஒற்றுமை #4

ஒற்றுமை #4

சேவை செய்யும் மனப்பான்மை கொண்ட இவர்கள் அதை வெளியில் காட்டிக் கொண்டாதே இல்லை. தங்கள் வீட்டில் பணிபுரியும் நபர்களில் இருந்து, அவர்களுக்கு தெரிந்தவர்கள், ரசிகர்கள் என யாருக்கு உதவி என்றாலும், உதவி செய்வதை யாரும் அறியாதப்படி பார்த்துக் கொண்டனர். நிறைய அறப்பணிகளையும் செய்து வருகின்றனர்.

ஒற்றுமை #5

ஒற்றுமை #5

ரசிகர்கள் மீது அதீத அன்பு கொண்டுள்ளவர்கள். மற்ற நடிகர்கள் தங்கள் ரசிகர்கள் தங்கள் படத்தை கண்டு ஓடவைக்க வேண்டும் என எண்ணும் போது.

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை முக்கியம். படத்தை சாதாரணமாக பாருங்கள், அதிக செலவழிக்க வேண்டாம் என நேரடியாக அறிவுறுத்தியவர்கள் இவர்கள் இருவரும்.

ஒற்றுமை #6

ஒற்றுமை #6

மாஸ், கிளாஸ் இரண்டையும் கலந்தடிக்க தெரிந்த கில்லாடிகள் ரஜினியும், அஜித்தும். இவர்களால் உணர்வு ரீதியாக பார்வையாளர்களை கதையோடு ஒன்றவைக்கவும் முடியும். விசிலடித்து ஆர்ப்பரிக்க வைக்கவும் முடியும்.

ஒற்றுமை #7

ஒற்றுமை #7

தனிப்பட்ட பாணியில் ஸ்டைல் காட்டுவதில் இருவரும் வல்லவர்கள். ரஜினி அளவுக்கு அஜித் பெரிதாக எல்லா படங்களிலும் ஸ்டைல் காட்டியதில்லை என்றாலும், அவருக்கு அடுத்து எந்த மாதிரியான ஆடையில் தோன்றினாலும், அதற்கு ஏற்ப ஸ்டைல் காட்டுவதில், அதற்கு ஒத்துப்போவது அஜித் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Similarities Between Ajith and Rajinikanth

Seven Similarities Between Ajith and Rajinikanth, take a look on here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter