For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

M.S.டோனி - தி அன்டோல்ட் ஸ்டோரியின் ரீல் மற்றும் ரியல் கதாபாத்திரங்கள்!

|

M.S.டோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி, ரசிகர்களின் பேராதரவில் அமோகமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. தியேட்டரில் தான் பார்க்கிறோமா, கிரிக்கெட் மைதானத்தில் அமர்ந்து பார்க்கிறோமா என வியக்கும் அளவிற்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்தபடி டோனியின் சுயசரிதை படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.

இப்படத்தின் கதாப்பாத்திர தேர்வை பற்றி பாராட்டியே ஆகவேண்டும். மிக கட்சிதமாக தேர்வு செய்திருந்தனர். M.S. டோனியின் வாழ்க்கையில் நீங்கா இடம் பிடித்தவர்கள். இந்த கதாப்பாத்திரங்கள் வாயிலாக ரசிகர்கள் மனதிலும் அதே இடத்தை பிடித்துள்ளனர் என்று தான் கூட வேண்டும்.

M.S.டோனி ரியல் மற்றும் ரீல் வாழ்க்கையில் முக்கிய இடம் பிடித்தவர்கள் பார்க்கலாமா இனி...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோச்!

கோச்!

கால்பந்தாட்டம் ஆடிக்கொண்டிருந்த நபரை கிரிக்கெட் உள்ளே கொண்டுவந்து, அவரை சிறந்த கீப்பராய் மாற்றி. உலக கோப்போ வென்ற வெற்றி கேப்டன் ஆக்கிய அவரது கோச் அந்த பள்ளி நாட்களில் அந்த முடிவை எடுக்காமல் அல்லது டோனியை தேர்வு செய்யாமல் இருந்திருந்தால் இந்திய அணி இரண்டு உலக கோப்பைகளை இழந்திருக்கும்.

Image Source

சகோதரி!

சகோதரி!

டோனியின் சகோதரி சிறுவயது முதலே, டோனி எடுக்கும் முடிவுகளில் துணையாய் இருந்து, அவருக்கு உத்வேகம் மற்றும் உறுதுணையாய் இருந்தவர். டோனியின் வெற்றியில் பெரும் பங்கு இவரது சகோதரிக்கும் இருக்கிறது.

தந்தை!

தந்தை!

எல்லா தந்தையும் தனது மகன் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார். விளையாட்டில் மட்டுமின்றி, படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் எடுத்துக் கொண்ட அக்கறை. டோனி மீண்டும் விளையாட்டில் கால்பதிக்க வேலையை விட்டுவந்த போது அவரை தடுக்காமல் இருந்த நிலை போன்றவை தான் டோனியை கிரிக்கெட்டில் சிறக்க வைத்தது.

சாக்ஷி!

சாக்ஷி!

எல்லா வெற்றி ஆணுக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது கூற்று. அதற்கு சாக்ஷியும் ஒரு சான்று. சாக்ஷியை மணந்த பிறகு தான் டோனி இந்தியாவுக்கு ஒருநாள் போட்டி உலக கோப்பை பெற்று தந்தார். டோனியின் வெற்றி மட்டுமின்றி, தோல்வியின் போதும் பக்கபலமாய் இருந்து அவரை கூலாக வைத்திருப்பவர் சாக்ஷி தான்.

யுவராஜ் சிங்!

யுவராஜ் சிங்!

ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே யுவராஜ் மற்றும் டோனி ஒரு நல்ல நண்பர்கள் தான். ஆனால், இடையிடையே யுவராஜ்-ன் தந்தையின் சர்ச்சைக்குரிய பேச்சு, பேட்டிகள் தான் சில கசப்பான நிகழ்வுகள் உண்டாக காரணி ஆகிவிட்டது.

டால்மியா!

டால்மியா!

ரியல் டால்மியா மற்றும் M.S.டோனி - தி அன்டோல்ட் ஸ்டோரியில் நடித்த ரவீந்திரா.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reel and Real Characters of MS Dhoni The Untold Story

Image Source
Desktop Bottom Promotion