உலகில் பல நூற்றாண்டுகளாக விடைக் கிடைக்காமல் புதிராக நீடித்து வரும் 9 கேள்விகள்!

Posted By:
Subscribe to Boldsky

கடவுள் இருக்கிறாரா இல்லையா? பேய் இருக்கா, அது இருக்குறதுக்கான அறிகுறி ஏதாவது இருக்கா? பிரபஞ்சம் எப்படி உருவானது? யாரால் உருவாக்கப்பட்டது? ப்ளேக் ஹோல்-ன் அடிப்படை என்ன? இப்படி பல கேள்விகள் பல நூற்றாண்டுகளாக ஆராய்ச்சியார்கள், ஆன்மீகவாதிகள், பொதுஜனம் என பலதரப்பட்ட மக்களும் மண்டையை குழப்பிக் கொண்டு இருக்கும் கேள்விகள் நிறைய இருக்கின்றன.

மனித வரலாற்றில் மர்மம் விலகாமல் நீடிக்கும் தற்செயலாக நடந்த சில சுவாரஸ்யங்கள்!

இதற்கான பதில் என ஆய்வாளர்கள் கருதும் விஷயங்கள் தான் இருக்கின்றனவே தவிர அறிவியல் ரீதியாக ஊர்ஜிதம் செய்யப்பட்ட பதில்கள் ஏதும் இல்லை. புதிராக நீடிக்கும் இந்த கேள்விகளுக்கு பின்னணியில் வெறும் கருத்துக்களும், அப்படி இருக்கலாம், இப்படி இருக்கலாம் என்ற புனைவுகளும் மட்டுமே நிலைத்து இருக்கின்றன.

தற்கொலை செய்து கொண்டவர்களின் ஆன்மாவிற்கு என்ன நடக்கிறது என்று தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேள்வி 1

கேள்வி 1

உண்மையிலேயே கடவுள் என்பவர் இருக்கிறாரா?

13 பில்லியன் வருடங்களுக்கு முன்பு பிக் பேங் காரணத்தால் பிரபஞ்சம் உருவாகி இருக்கலாம் என்றும். ஆனால், அந்த செயல் ஏன் ஏற்பட்டது என தெரியவில்லை என்றும் தான் இதுவரை கூறியிருக்கிறார்கள். மேலும் முதல் உயிரினம் எப்படி தோன்றியதற்கான பதிலும் இதுவரை கண்டறியப்படவில்லை.

கேள்வி 1

கேள்வி 1

இதனால் அறிவியலையும் தாண்டி ஏதேனும் சக்தி இருக்கிறதா? என்ற கேள்வு பல ஆண்டுகளாக உலகில் பதில் ஏதும் கிடைக்காமல் நிலவி வருகிறது.

கேள்வி 2

கேள்வி 2

நினைவுகள் எப்படி சேமிக்கப்படுகிறது, எப்படி மீட்டு பெறப்படுகிறது?

மூளையில் ஏற்படும் செயலாற்றலின் போது உண்டாகும் நியூரான்களால் உண்டாகும் நெட்வர்க் தான் காரணம். ஒவ்வொரு முறையும் நமது மூளையில் நினைவுகள் சேமிப்பு ஆகும் போது, ஓர் நுண்ணிய இழை ஒரு நியூரானில் இருந்து எலெக்ட்ரோக் கெமிக்கலாக மாறி மற்றொரு அண்டை நியூரானுடன் இணைய வைக்கிறது.

கேள்வி 2

கேள்வி 2

இந்த செயல்பாடில் தான் நினைவுகள் சேமிக்கப்படுகின்றன என சென்ற வருட ஆய்வில் கண்டறியப்பட்டது. ஆனால், எப்போதோ நடந்த செயலை எவ்வாறு நொடிகளில் மீட்டெடுக்கப்படுகிறது என்பது இன்று வரையிலும் பெரும் புதிராகவே திகழ்கிறது.

கேள்வி 3

கேள்வி 3

கனவு எதனால் வருகிறது?

பண்டையக் காலத்தில் கனவு என்பது கடவுளின் தொடர்ப்பு என்றும், எதிர்காலத்தின் வாக்கு என்றும் கூறப்பட்டது. ஆனால், அறிவியலில் ஆழ்மனதில் தேங்கும் எண்ணங்களில் வெளிப்பாடு என்றும் கூறுகின்றனர். ஆனால், இதுநாள் வரை கனவுகள் ஏன் வருகிறது என்பதற்கான உண்மையான பதில் கிடைக்கவில்லை.

கேள்வி 4

கேள்வி 4

கொட்டாவி ஏன் வருகிறது?

அறிவுசார்ந்த ஊக்குவிப்பின் போது மூளையின் செயலாற்றலின் காரணமாக வெளிப்படுவது தான் கொட்டாவி என ஓர் ஆய்வில் கூறப்பட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது. ஆனால், எதிரே இருக்கும் நபர் கொட்டாவி விட்டாலோ, அல்லது யான் (Yawn) என்று கூறினாலே கூட சில சமயங்களில் கொட்டாவி வருவருவது ஏன் என்பதற்கான விடை இன்று வரை கேள்வி குறி தான்.

கேள்வி 5

கேள்வி 5

பிரபஞ்சம் எதனால் தயாரிக்கப்பட்டது / உருவாக்கப்பட்டது?

5% பிரபஞ்சம் அணுக்களால் உருவாகியிருக்கிறது என கூறுகிறார்கள். ஆனால், மீதி 95% பிரபஞ்சம் டார்க் மேட்டர் மற்றும் டார்க் எனர்ஜியால் நிரம்பியுள்ளது என கூறப்படுகிறது.

கேள்வி 5

கேள்வி 5

டார்க் மேட்டர் பால்வெளி மண்டலங்களை இணைக்கவும், டார்க் எனர்ஜி பிரபஞ்சத்த்தின் விரிவாக்கத்திற்கு ஊந்து சக்தி அளிப்பதாகவும் கருதப்படுகிறது. ஆனால், இன்று வரை அறிவியல் ஆராய்ச்சியாளர்களால் இதற்கான தெளிவான பதில், கண்டுபிடிக்க முடியாத ஒன்றாகவே திகழ்கிறது.

கேள்வி 6

கேள்வி 6

நாம் இறந்த பிறகு என்ன நடக்கும்?

மரணத்தை ஆய்வாளர்கள் இரண்டு வகையாக கூறுகின்றனர். கிளினிக்கல் டெத் என்பது இதய செயல் நிற்பது, பயோலாஜிக்கல் டெத் என்பது மற்ற உடலுறுப்புகள் செயல் நிற்பதால் ஏற்படுவது என கூறுகின்றனர்.

கேள்வி 6

கேள்வி 6

ஆனால், இறந்ததற்கு பிறகு உயிருக்கு என்ன நிகழ்கிறது என்பதோ, ஆன்மா எங்கு செல்கிறது என்பதற்கான விடையோ யாரிடமும் இல்லை.

கேள்வி 7

கேள்வி 7

உடலை பதப்படுத்தி, நூறு ஆண்டுகள் கழித்து உயிர்பிக்க முடியுமா?

இதுவரை சின்ன, சின்ன உடல் பாகங்களை பதப்படுத்தி, மற்றவர்களுக்கு பயன்படுத்திவரப்படுகிறது. ஆனால், முழு மனித உடலை இது போன்று பதபடுத்தி பல ஆண்டுகள் கழித்து உயிர்பிக்க முடியுமா என்பதற்கான பதில் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

கேள்வி 8

கேள்வி 8

ப்ளேக் ஹோல் அடிப்படை என்ன?

பல ஆய்வுகள் நடத்தியும் கூட இன்றுவரை ப்ளேக் ஹோல் அடிப்படை என்ன? என்பதை முழுமையாக கண்டறிய முடியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கேள்வி 9

கேள்வி 9

பேய்கள் நிஜமாகவே இருக்கின்றனவா?

பேய்கள் இருக்கிறதா? இல்லையா என்பது குறித்த விவாதம் பல நூற்றாண்டுகளாக நடந்து வருதுகிறது. ஆனால், உண்மையில் அறிவியல் ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் இதற்கான பதில் புதிராகவே நீடிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Questions Science Still Can’t Answer

Questions Science Still Can’t Answer, read here in tamil.