இதுக்கெல்லாமா ஒரு பொம்பள புள்ளைய அரஸ்ட் பண்ணுவாங்க...???

Posted By:
Subscribe to Boldsky

போலீஸி காரர்களை நல்லவர்கள், கெட்டவர்கள் என இரண்டு வகையாக பிரித்தாளும். அதன் உட்பிரிவு பெரியது. இறக்கம் காட்டும் போலீஸ், விறைப்பாக இருக்கும் போலீஸ், லஞ்சம் வாங்கும் போலீஸ், லஞ்சம் வாங்கினால் கைது செய்யும் போலீஸ், மக்களை அதட்டும் போலீஸ், மக்களிடம் அன்புக் காட்டும் போலீஸ்.

Maryland Woman Arrested For Stealing 3 French Fries From A Police Officer

ஆனால், உலக போலீஸ்காரர்களே வியக்கும் அளவிற்கு மேரிலாந்து போலீஸ் சற்று வினோதமாக செயல்பட்டிருக்கிறார். ஆம்! கடந்த மாதம், தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஃப்ரெஞ்ச ஃப்ரைஸ்-ல் மூன்றை சொல்ல, சொல்ல எடுத்து சாப்பிட்ட பெண்ணை குண்டுக்கட்டாக கைது செய்திருக்கிறார் மேரிலாந்து போலீஸ் ஒருவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாஷிங்டன் டிசி!

வாஷிங்டன் டிசி!

வாஷிங்டன் டிசி-ல் உள்ள இத்தாலியன் பிட்சா கிச்சன்-ல் போலீஸ் அதிகாரி ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு பெண் அந்த போலீஸ் எதிரே அமர்ந்து பேச துவங்கியுள்ளார்.

3 ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்!

3 ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்!

பேசிக் கொண்டிருந்த சமயம், அந்த பெண்மணி போலீஸ்காரர் ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்த ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்-ல் ஒன்றை போலீஸ் எடுக்க வேண்டாம் என கூற கூற எடுத்து சாப்பிட்டுள்ளார்.

கோபமடைந்த போலீஸ்காரர்!

கோபமடைந்த போலீஸ்காரர்!

இதை கண்டு கோபமடைந்த போலீஸ்காரர், அந்த பெண்ணை மீண்டும் இப்படி செய்யாதே என எச்சரித்துள்ளார். ஆனால், அந்த பெண் கேட்டப்படி இல்லை. மீண்டும் இரண்டாவதாக ஒரு ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்-ஐ வேண்டுமென்றே எடுத்து சாப்பிட்டுள்ளார்.

கைது செய்வேன் என மிரட்டல்!

கைது செய்வேன் என மிரட்டல்!

இரண்டாவது முறையும் அந்த பெண் தன் சொல்ல கேட்காததால், மீண்டும் ஒன்றை எடுத்தால், உன்னை திருட்டின் பேரில் கைது செய்வேன் என அந்த போலீஸ்காரர் எதிரே அமர்ந்திருந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.

விளையாட்டு, வினையானது!

விளையாட்டு, வினையானது!

விளையாட்டாக கூறுகிறார் என அந்த பெண் மீண்டும் அவரை சீண்டிப் பார்க்கும் முயற்சியில் மூன்றாவது ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்-ஐ எடுத்து சாப்பிட்ட மறுநொடி, அந்த கோபக்கார போலீஸ்காரர், அந்த பெண்ணை சம்பவ இடத்திலேயே வைத்து சென்கன்ட் கிரேடு திருட்டு என கூறி கைது செய்தார்.

ரிபோர்ட்!

ரிபோர்ட்!

போலீஸ் ரிப்போர்ட்டில் அந்த பெண் மூன்று ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்-ஐ திருடியதற்காக செகன்ட் கிரேடு திருட்டுக்கு கீழ் அந்த பெண் கைது செய்யப்பட்டதாக மேரிலாந்து போலீஸ் பதிவு செய்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Maryland Woman Arrested For Stealing 3 French Fries From A Police Officer

Maryland Woman Arrested For Stealing 3 French Fries From A Police Officer
Please Wait while comments are loading...
Subscribe Newsletter