For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விராட் கோலி பற்றி இதுவரை நீங்கள் அறியாத 9 உண்மைகள்!

ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய இந்திய டெஸ்ட் அணி கேப்டன் வீராட் கோலி பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்

|

இளம் வயதில் அல்லது குறுகிய காலகட்டத்தில் ஒருவர் முன்னேறினால் அவர் மீது பலருக்கு பொறாமை உண்டாகும். அப்படி தான் வீராட் கோலியின் வளர்ச்சியின் போதும் பலர் பொறாமை பட்டனர்.

அவரது முன்கோபத்தை சுட்டிக்காட்டி அவரை மட்டம்தட்ட பார்த்தனர். ஆனால், உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் அது கோபம் அல்ல, வெற்றிபெற வேண்டும் என்ற வீராட்டின் ஆக்ரோஷம் என கூறி பாராட்டினர்.

குறுகிய வயதில் சாதிக்க, ஒருவர் எவ்வளவு கடினமாக போராடியிருப்பார், எதை எல்லாம் இழந்திருப்பார் என்பதை நாம் அறிவதில்லை. வீராட் கோலியின் உழைப்பும், முன்னேற்றமும் எளிதானது அல்ல...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் க்ரஷ்!

முதல் க்ரஷ்!

விராட் கோலியின் முதல் க்ரஷ் அபிஷேக் பச்சனுடன் நிச்சயம் செய்து தடைப்பட்டு போன கரிஷ்மா கபூர். இவரிடம் தான் தன் இதயத்தை முதன்முதலில் இளம் வயதில் பரிக்கொடுத்துள்ளார் விராட்.

நிக்நேம்!

நிக்நேம்!

விராட் கோலியின் நிக் நேம் "சீக்கு". இந்த பெயர் இவர் டெல்லி ரஞ்சி அணியில் சேர்ந்த போது, இவரது டெல்லி கோச் அஜித் சவுத்திரியால் வைக்கப்பட்டது.

டாட்டூ!

டாட்டூ!

டாட்டூ குத்துவதில் வீராட் கோலிக்கு பிரியம் அதிகம். அவரது கைகளில் இருக்கும் கோல்டன் டிராகன் மற்றும் சாமுராய் வாரியார் டாட்டூக்களை அவர் குட்லக் என நம்புகிறார்.

அப்பாவின் மரணம்...

அப்பாவின் மரணம்...

கோலி டெல்லி அணிக்காக ரஞ்சி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது அவரது அப்பா மரணம் அடைந்திருந்தார். செய்தி அறிந்தும் கூட அணிக்காக 90 விளையாடி அடித்துவிட்டு தான் சென்றார்.

இந்தியாவின் ரன் மெஷின்!

இந்தியாவின் ரன் மெஷின்!

கோலியை இந்தியாவின் ரன் மெஷின் என கூறுவதில் தவறே இல்லை. அதிகவேகமாக சதங்களும், ரன்களும் சேகரித்து வரும் இவர் தான் இந்தியாவின் அதிவேக சதமடித்த நபரும் கூட. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 52 பந்திகளில் சதம் அடித்தார்.

டோனிக்கு அடுத்து...

டோனிக்கு அடுத்து...

கிரிக்கெட்டில் இருந்து வந்து மாடலிங்கிலும் அசத்தி வருபவர் கோலி. டோனிக்கு அடுத்து பெரும்பாலான பிராண்டுகள்வீராட் கோலியை தான் தேர்வு செய்கின்றனர். வரும் காலத்தில் இவர் முதல் இடத்தை பிடித்துவிடுவார்.

முதல் சதம்!

முதல் சதம்!

உலக கோப்பை தொடரில் பங்கேற்ற முதல் போட்டியில் சதம் அடித்த ஒரே இந்திய வீரர் கோலி தான். இவர் 2011-ம் ஆண்டு உலக கோப்பையில் வங்காளதேச அணிக்கு எதிராக இந்த சதத்தை பதிவு செய்தார்.

சச்சின், சுரேஷ் ரெய்னாக்கு அடுத்து...

சச்சின், சுரேஷ் ரெய்னாக்கு அடுத்து...

சச்சின், சுரேஷ் ரெய்னாக்கு அடுத்து 22 வயதுக்குள் இரண்டு ஒருநாள் போட்டி சதம் அடித்த வீரர் என்ற பெருமை மற்றும் சாதனை வீராட் கோலிக்கு இருக்கிறது.

உடை அணிவதில் நேர்த்தி!

உடை அணிவதில் நேர்த்தி!

சிறப்பாக, நேர்த்தியாக உடை அணியும் பிரபலங்கள் என்ற பட்டியலில் வீராட் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் பாரக் ஒபாமாவின் பெயரும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Facts About Virat Kohli

Interesting Facts About Indian Tests Team Skipper Virat Kohli, very indian cricket fan should know.
Desktop Bottom Promotion