கீர்த்தி சுரேஷ் பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

கோலிவுட்டில் சில நடிகைகள் தான் ஒருசில படங்களிலேயே டாப் லெவலுக்கு சென்று விடுவார்கள். அதில் இப்போது இடம் பெற்றிருப்பவர் நடிகை கீர்த்தி. இவரது தாயும் நடிகை தான். ஆம், சூப்பர்ஸ்டார் ரஜினியின் கிளாஸ் படமான நெற்றிக்கண் படத்தில் நடித்த மேனகாவின் மகள் தான் கீர்த்தி.

பிரியதர்ஷன் இயக்கத்தில் கீதாஞ்சலி எனும் படத்தின் மூலமாக கீர்த்தி அறிமுகமானார். ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், ப்ரியதர்ஷன் இயக்கிய முதல் படத்தை தயாரித்தவர் கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் அவர்கள் என்பது.

இவர் நடித்த முதல் படத்தின் நடிகர் (மோகன்லால்), இயக்குனர் (ப்ரியதர்ஷன்) இருவருமே கீர்த்தி எங்களது மகள் போன்றவர் என ஒரு பேட்டியில் கூறியிருந்தனர். காரணம் இவர்கள் இருவருக்குமே கீர்த்தியின் தந்தை சுரேஷ் மிகவும் நெருக்கமான நண்பர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீச்சல் சாம்பியன்!

நீச்சல் சாம்பியன்!

குழந்தை பருவத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு நீச்சல் சாம்பியனாக இருந்தால். கீர்த்தி சுட்டியான செயற்திறன் மிக்க மாணவியாக இருந்தார்.

ஃபேஷன் ஸ்டோர்!

ஃபேஷன் ஸ்டோர்!

நடிப்பை விட கீர்த்தி ஃபேஷனில் அதிக ஆர்வமும், ஈர்ப்பும் கொண்டிருந்தார். மேலும், இவர் ஸ்காட்லாந்தில் ஃபேஷன் துறை படித்த மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. லண்டனில் இன்டர்ன்ஷிப்பும் சென்றுள்ளார்.

எதிர்காலத்தில் ஒரு ஃபேஷன் ஸ்ட்ரோ துவங்க வேண்டும் எனும் ஆர்வம் கொண்டிருந்தார் கீர்த்தி.

விஜய் - சூர்யா!

விஜய் - சூர்யா!

கீர்த்தி சுரேஷ் ஒரு மிகப்பெரிய விஜய் - சூர்யா ரசிகை. ஒருமுறை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சிறுவயதில் நான் பெரிய விஜய் ரசிகையாக இருந்தேன் என்றும், இப்போது விஜய்யுடன் சேர்ந்து நடிப்பது ஆச்சரியமளிக்கிறது என்றும் கூறி இருந்தார்.

நாடகம், நடனம்!

நாடகம், நடனம்!

பள்ளி கல்லூரி காலக்கட்டத்தில் இவர் பல நாடகங்கள், நடனம் போன்றவற்றிலும் பங்கேபெற்றுள்ளார்.

குழந்தை நட்சத்திரம்!

குழந்தை நட்சத்திரம்!

தனது எட்டு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கிவிட்டார். "குபேரன்", "அச்சனேயானு எனக்கி இஷ்டம்" போன்ற படங்களில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

சீரியல்!

சீரியல்!

மேலும், கீர்த்தி கிருஷ்ணாகிருபா, சந்தான கோபாலம் போன்ற டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

டயட்!

டயட்!

கீர்த்தி சுரேஷ் சுத்த சைவம். தினமும் கார்டியோ பயிற்சிகள் செய்வதில் ஈடுபாடு கொண்டவர். யோகா பயிற்சிகளிலும் ஈடுபடுகிறார். பெரும்பாலும் தனது உணவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்வதில் நிறைய விருப்பம் காட்டுவார் கீர்த்தி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Interesting Facts About Keerthy Suresh You Would Love To Know

Interesting Facts About Keerthy Suresh You Would Love To Know
Story first published: Friday, September 23, 2016, 12:10 [IST]
Subscribe Newsletter