500 கோடி செலவில் நடந்த ஆடம்பர திருமணத்தை பற்றிய வியக்க வைக்கும் உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

இன்று 500 ரூபாய்க்கே வழியில்லாமல் ஆங்காங்கே மக்கள் திண்டாடி வர, கர்நாடக தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய மகளின் திருமணத்தை 500 கோடி ரூபாய் செலவில் நடத்தியுள்ளார். இயக்குனர் ராஜ் மௌலி, ஷங்கருக்கே சவால்விடும் அளவிற்கு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

சிம்பிள் என்ற வார்த்தைக்கே இடமின்றி வந்திருந்த அனைவரின் வாயும் பிளக்கும் படி ஒட்டுமொத்த திருமணமும் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது. உணவு உண்ணும் இடம் கூட கிராமம் போன்ற செட்டில் தான் அமைக்கப்பட்டிருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

ஏறத்தாழ 36 ஏக்கர் நிலப்பரப்பில், 14-ம் நூற்றாண்டின் விஜயநகரம் பேரரசின் அரண்மைனை அமைப்பு உருவாக்கப்பட்டது. இது பெங்களூர் பேலஸ் கிரவுண்டில் போடப்பட்ட செட் ஆகும்.

உண்மை #2

உண்மை #2

மணமகன் ராஜீவ் ரெட்டி ஐதராபாத் தொழிலதிபர்-ன் மகன். முகூர்த்தத்திற்கு மட்டும் தனியாக ஹம்பி விட்டலர் கோயில் செட் போடப்பட்டது. திருப்பதி தேவஸ்தான ஆசாரியர்கள் எட்டு பேர் சடங்குகளை நடத்த வந்திருந்தனர்.

உண்மை #3

உண்மை #3

அரசர் கிருஷ்ணதேவராயர் அரண்மனை, தாமரை மண்டபம் போன்ற செட் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றை நூற்றுக்கும் மேற்பட்ட வேலையாட்கள் பாலிவுட்-ன் பெரிய பெரிய கலை இயக்குனர்கள் சொல்படி அமைத்தனர்.

உண்மை #4

உண்மை #4

சிம்பிள் என்ற சொல்லுக்கே இடம் இல்லாத வகையில், இந்த திருமணம் ஆடம்பரமாக நடந்தது. யானை, ஒட்டகங்கள் போன்ற ரதங்கள் இடம் பெற்றிருந்தன. உணவு கிராமம் போன்ற செட்டில் அமைக்கப்பட்டிருந்தது.

உண்மை #5

உண்மை #5

ஷாருக்கான், பிரபுதேவா இந்த திருமணத்தில் நடனம் ஆடுவார்கள் என்ற புரளிகள் எல்லாம் கிளம்பின.

* இந்த திருமணத்தில் 30 ஆயிரம் விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

* 1500 ஹோட்டல் அறைகள் புக் செய்யப்பட்டன.

* 2000 கேப்கள் ஹோட்டல் மற்றும் திருமண இடத்திற்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

* சிறப்பு விருந்தினர்களுக்காக 15 ஹெலிகாப்டர் நிற்க வைக்கும் தளம் அமைக்கப்பட்டன.

உண்மை #6

உண்மை #6

மணமகள் உடுத்தியிருந்த புடவை மட்டுமே 17 கோடி ரூபாய் ஆகும். நகைகளின் மதிப்பு 90 கோடி ரூபாய்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Grandeur 500 Crore Wedding of Karnataka Billionaire's Daughter

A Grandeur 500 Crore Wedding of Karnataka Billionaire's Daughter
Please Wait while comments are loading...
Subscribe Newsletter