தல அஜித்தை பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

"தல" என்றாலே தமிழகமே தெறிக்கும். தனது நடிப்பினால் மட்டும் இல்லாது பண்பினாலும் தமிழக மக்களின் மனதை கவர்ந்தவர் அஜித். என்ன தான் பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் வரிசையில் நின்று ஓட்டு போடுவது. அனைவருக்கும் உதவுவது, உதவியதை வெளிகாட்டிக் கொள்ளாமல் இருப்பது என்று அஜித் திரையுலகில் தனித்தன்மையோடு திகழ்கிறார்.

சச்சினின் பிறந்தநாள், தல அஜித்தின் திருமண நாள்!! வேற என்னெல்லா இன்னிக்கு ஸ்பெஷல்'னு தெரியுமா!!!

அனைவருக்கும் அஜித்தைப் போல ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அவர்களுக்கு அஜித் கூறுவது," வேண்டாம், நான் கடந்து வந்த பாதை, மற்றும் வலிகள் எல்லாம் என்னவென்று இந்த அஜித்திற்கு மட்டும் தான் தெரியும். உங்களுக்கும் அந்த சிரமங்கள் வேண்டாம்" என்று கூறுவார்.

அழகை அதிகரிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்ட நடிகர் நடிகைகள்!!!

எந்த பின்புலமும் இன்றி வந்து, சொந்த திறமையின் காரணமாக உழைத்து முன்னேறிய "தல", நடிகராக இருந்தார், ரேசராக இருந்தார் என்று தெரியும். வேறு எந்தெந்த துறையில் எல்லாம் அவர் வேலை செய்தார் என்று உங்களுக்கு தெரியுமா...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டூ வீலர் மெக்கானிக்

டூ வீலர் மெக்கானிக்

பள்ளியில் இருந்து ட்ரோப் அவுட் ஆகி வெளிவந்த அஜித். டூ வீலர் மெக்கானிக்காக பணியாற்றினார். இது தான் இவரது முதல் வேலை ஆகும்.

பைக் ரேஸ்

பைக் ரேஸ்

பின் தானே சொந்த செலவில் பைக் ரேஸருக்கான லைசன்ஸ் பெற்று, ரேஸ்களில் பங்கேற்று வந்தார். இதில் பலமுறை விபத்துகளில் சிக்கியுள்ளார் அஜித்.

மாடல்

மாடல்

பின் அவ்வப்போது பிரிண்ட் மற்றும் சிறு, சிறு விளம்பரங்களில் நடித்து வந்தார். ஆனாலும், ரேஸில் தான் அதீத கவனம் செலுத்தி வந்தார் தல. பின் சில விபத்துகள் அவரை ரேஸை விட்டு சிறுது காலம் ஒதுங்கி இருக்க வைத்தது. அப்போது தான் மீண்டும் மாடலிங் செய்ய ஆரம்பித்தாராம் அஜித்.

கார்மென்ட்ஸில் வேலை

கார்மென்ட்ஸில் வேலை

இதற்கு இடையே அஜித் ஓர் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில், வாணிகச் சரக்கு விற்பனையாளராகவும் பணியாற்றியுள்ளார் தல அஜித்.

நடிப்பு

நடிப்பு

இதற்கெல்லாம் பிறகு தான் கடந்த 1990 ஆண்டு "என் வீடு என் கணவர்" என்ற படத்தில் பள்ளி மாணவராக ஓர் சிறிய வேடத்தில் நடித்தார். இப்படி தான் தொடங்கியது அஜித்தின் திரையுலக பயணம்.

கார் ரேஸ்

கார் ரேஸ்

நடிக்க வந்த பிறகும் கூட ரேசிங்கில் மிகவும் ஈடுபாடு காட்டினார் அஜித். ஃபார்முலா 2 ரேஸில் பங்குபெற்ற ஒரே இந்திய நடிகர் அஜித் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏரோ மாடலிங்

ஏரோ மாடலிங்

ஏரோ மாடலிங் (Aero Modeling), சிறிய வகை ஹெலிகாப்டர்களை வடிவமைக்க தெரிந்தவர் அஜித். இதுமட்டுமில்லாது இராணுவத்தில் உபயோகிக்கப்படும் ஹெலிகாப்டர்களை கூட அஜித்திற்கு பிரித்து மேய்ந்து மீண்டும் இணைக்க தெரியும் என, சமீபத்தில் ஓர் தனியார் தொலைகாட்சியின் அஜித் பற்றிய பேட்டியில் கூறப்பட்டிருந்தது.

புகைப்பட கலைஞர்

புகைப்பட கலைஞர்

புகைப்படம் எடுப்பது அஜித்திற்கு பிடித்தமான பொழுதுபோக்கு. ஆனால், அதைபற்றிய நுணுக்கங்கள் எல்லாம் அறிந்துவைத்திருக்கிறார் அஜித். இவருக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும், அஜித் ஒரு சிறந்த புகைப்பட கலைஞர் என்று.

சமையல் பிரியர்

சமையல் பிரியர்

சமைப்பது என்பது அஜித்திற்கு பிடித்த விஷயம் என்று அனைவர்க்கும் தெரியும். ஆனால், வீட்டிற்கு யாராவது வந்தால் அவர்களை வரவேற்ப்பது முதல் உணவு சமைத்து பரிமாறுவது வரை அணைத்து சகல வேலைகளையும் அஜித் தனி ஆளாக செய்வார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Various Profession Of Thala Ajith Before Acting

Do you know about the various professions of "Thala" Ajith kumar? Check it out here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter