பலருக்கு தெரியாத வரலாற்றில் உள்ள மறக்க முடியாத உண்மையான காதல் கதைகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

நம் வரலாற்றைப் பார்த்தோமானால் காலத்தால் அழிக்க முடியாத பழமையான காதல் கதைகள் எண்ணிலடங்கா வகையில் உள்ளது. ஆச்சரியப்படும் வகையில் இவற்றில் பெரிதாக எதுவுமே மாறி விடவில்லை. இந்த காதலர்கள் கொண்டிருந்த காதல், அக்காலத்தின் கிசுகிசுக்களாக கூட இருக்கலாம்.

மகாபாரதத்தில் வரும் மிகவும் புகழ்பெற்ற காதல் கதைகள்!!!

ஆனால் எவ்வளவு காலம் கடந்து சென்றாலும், இவையாவும் அழிக்க முடியாத காவியமாக திகழ்கிறது. அதனை குறிக்கும் பரிசுகளை இன்றளவும் கூட காதலர்கள் பயன்படுத்துகிறார்கள்.

காதல் மற்றும் துயரம் நிறைந்த கதை: தேவலோக அழகி ஊர்வசியும்... புருரவாவும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாஜி ராவ் மற்றும் மஸ்தானி

பாஜி ராவ் மற்றும் மஸ்தானி

ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே நடித்து வரவுள்ள ஒரு படம், பேஷ்வா பாஜி ராவின் கதையால் ஈர்க்கப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது. மஸ்தானியின் மாய மந்திரங்கள் (நல்ல விதத்தில்) இல்லாமல் இவர்களின் கதை முழுமை பெறாது. இந்திய வரலாற்றில் பல தகவல்கள் உறுதி செய்யப்படாத நிலையில் உள்ளதை போலவே, மஸ்தானியின் பிறப்பைப் பற்றியும் சரியாக தெரியவில்லை. சிலர் அவரை ஹைதராபாத்தை சேர்ந்த இளவரசியாக நம்புகின்றனர். சிலர் அவரை நடன கலைஞராகவும் நம்புகின்றனர். தன் குலத்தில் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்த போதிலும் கூட பாஜி ராவ் அவரை மணம் புரிந்தார். போர்களத்தில் பாஜி ராவ் மரணம் அடைந்த போது மஸ்தானியும் தற்கொலை செய்து கொண்டார்.

கிளியோபட்ரா மற்றும் மார்க் ஆண்டனி

கிளியோபட்ரா மற்றும் மார்க் ஆண்டனி

தன் ஆண் உறவினர்களுடன் கூட்டணி அடிப்படையில் ஆண்டு வந்தாலும் கூட, எகிப்தின் கடைசி பரோவாக அறியப்படுபவர் கிளியோபட்ரா. மிகவும் அழகிய பெண் என வரலாற்றால் கூறப்படும் இவர் உலகத்தில் உள்ள சக்தி வாய்ந்த இரு ஆண்களை வசீகரித்தார். ஜூலியஸ் சீஸரின் மறைவுக்கு பின்னர் மார்க் ஆண்டனியின் மீது காதலில் விழுந்தார் கிளியோபட்ரா. இவர்களின் உறவு 11 ஆண்டுகளுக்கு நீடித்தது. கி.பி.41-ல், கிளியோபட்ராவின் வசீகரத்திற்கு இரையாகாமல் எகிப்தை கைப்பற்றும் எண்ணத்தில் ரோமானிய படைக்கு ஆக்டேவியன் தலைமை தாங்கிய போது, கிளியோபட்ரா இறந்து விட்டார் என்ற பொய்யான செய்தி கேட்டு, ஆண்டனி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். கட்டுவிரியனை கடிக்கச் செய்து தன் உயிரையும் மாய்த்துக் கொண்டார் கிளியோபட்ரா.

போனி மற்றும் க்ளைடே

போனி மற்றும் க்ளைடே

பண்டி அவுர் பப்ளி படத்திற்கு எது தூண்டுகோலாக இருந்தது என உங்களுக்கு தெரியுமா? அது தான் போனி மற்றும் க்ளைடே. அமெரிக்காவில் கிரேட் டிப்ரஷன் என்ற மிகப்பெரிய பொருளாதார பின்னடைவு ஏற்பட்ட போது, அடுத்தவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்த திருடர்கள் இவர்கள். காவலாளிகளையே தள்ளாட வைத்தவர்கள் இவர்கள். கண்டிப்பாக அக்காலத்தில் காதலையும் தாண்டியதாக இருந்திருக்கும் இவர்களின் கதை. இவர்களின் கதையில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எத்தனை குற்றங்களை சேர்ந்து செய்திருந்தாலும் போனி எப்போதுமே க்ளைடே பக்கமாக தான் நின்றார்.

அவர்களின் குழு உறுப்பினர்களால் அவர்கள் ஏமாற்றப்பட்ட போது, ஒரு வழியாக அவர்களை காவல் துறை அதிகாரிகள் கைது செய்தனர். தன் துணையின் உயிரற்ற சடலத்தின் முன்பு தன் கடைசி ஆசையாக மரணத்தை தழுவினார் போனி.

ஷாஜகான் மற்றும் மும்தாஜ்

ஷாஜகான் மற்றும் மும்தாஜ்

தன் தாத்தா அக்பருக்கு பின் நன்றாக அறியப்பட்ட முகலாய பேரரசர்களில் ஒருவர் தான் ஷாஜகான். இவருக்கு மூன்று மனைவிகள். அவர்களில் இவருக்கு மிகவும் பிடித்தவராக இருந்தவர் மும்தாஜ். தங்களின் 14 ஆவது குழந்தையைப் பெற்றெடுக்கும் போது உயிரை இழந்தார் மும்தாஜ். அவரின் கடைசி வார்த்தைகளின் நினைவாக, தங்கள் காதல் என்றென்றும் வாழ்ந்திட, அவர் கம்பீரமான கல்லறை மாடத்தை கட்டினார். ஒரு கணவனின் காதலை நமக்கு ஞாபகப்படுத்தும் விதமாக இன்றளவும் தாஜ் மஹால் நிற்கிறது.

எட்வர்ட் VIII மற்றும் வாலிஸ் சிம்ப்சன்

எட்வர்ட் VIII மற்றும் வாலிஸ் சிம்ப்சன்

1931-ல், ஆங்கிலேய அரியணைக்கு வாரிசான, வேல்ஸை சேர்ந்த எட்வர்ட் விவாகரத்து பெற்ற அமெரிக்க பெண்ணான வாலிஸ் சிம்ப்சனை சந்தித்து, முதல் பார்வையிலேயே காதலில் விழுந்தார். 1936-ல் தன் தந்தை இறந்தவுடன், எட்வர்ட் அரசனானார். சிம்ப்சனை திருமணம் செய்யும் திட்டத்தால் அவரால் தன் கடமைகளை சரியாக புரிய முடியாமல் போனது. முடியாட்சி, தேவாலயம் மற்றும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் அடிப்படையையே இது உலுக்கியது. வேறு வழி இல்லாததால், அரியணையை தன் சகோதரரான ஜார்ஜ் VI-இடம் ஒப்படைத்து, அவர் வாலிஸை மணந்தார். இரண்டு முறை விவாகரத்து பெற்றவர் என்பதால் அவரை ஆண்களிடம் இருந்து சொத்தை அபகரிப்பவர் என அனைவரும் சாடினர். ஆனால் எட்வர்ட் அவர்களோ அவரை சிறந்த பெண் என்றே அழைத்தார். "ட்யூக் அண்ட் டச்சஸ் ஆஃப் வின்ட்சர்" என்ற அடைமொழியோடு அவர்கள் பிரான்ஸ் நாட்டில் நாட்டை விட்டு சென்று வாழ்ந்தனர்.

பியர் மற்றும் மேரி க்யூரி

பியர் மற்றும் மேரி க்யூரி

பிரான்ஸ் நாட்டில் மேரி படித்துக் கொண்டிருந்த போது, இந்த இரண்டு விஞ்ஞானிகளும் பாரிஸ் நகரத்தில் சந்தித்துக் கொண்டனர். போலந்து நாட்டிற்கு திரும்பி செல்ல வேண்டியிருந்ததால் பியரின் காதலை முதலில் மேரி நிராகரித்தார். இருப்பினும், ஒரு பிரெஞ்சு ஆசிரியராக கூட வாழ்ந்து கொள்ளலாம் என கூறி, அவர் பின்னே செல்ல பியர் தயாராக இருந்தார்.

ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் ரேடியம் மற்றும் பொலோனியம் போன்ற கூறுகளைக் கண்டுபிடித்து அறிவியலில் பல சாதனைகளைப் புரிந்துள்ளனர். கதிரியக்கத்தைக் கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசும் கூட கிடைத்தது.

விக்டோரியா மகாராணி மற்றும் ஆல்பர்ட் இளவரசர்

விக்டோரியா மகாராணி மற்றும் ஆல்பர்ட் இளவரசர்

ஜெர்மன் நாட்டு இளவரசரும், தன் தூரத்து சொந்தக்காரருமான ஆல்பர்ட்டை சந்தித்த போது, சொக்கிப்போனார் இளவயது விக்டோரியா. அவர்களின் திருமண வாழ்க்கையில், உள்நாட்டு மதிப்புகள் மற்றும் தன்னிறைவு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தும் விதத்தில், ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தினரை போலவே அவர்கள் காட்சியளத்தினர். திருமணமாகி 21 ஆண்டுகளில், 9 குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு, 1861 ஆம் ஆண்டு தன் மனைவியை தனியாக விட்டு விட்டு, காய்ச்சலால் ஆல்பர்ட் இறந்தார். அதன் பிறகு பொது வாழ்க்கையில் இருந்து அவர் விலகி கொண்டார். வெண்ணிற திருமண ஆடைக்காக பிரபலமாக அறியப்பட்ட பெண், அவர் கணவனின் மரணத்திற்குப் பிறகு துக்கத்தை அனுசரிக்கும் விதத்தில் கருப்பு ஆடையையும் முகத்திரையையும் அணிந்து கொண்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unforgettable Real Life Love Stories From History That Are Immortal

History is filled with love stories that have been recorded through the ages and surprisingly nothing much has changed. Here are some Unforgettable Real Life Love Stories From History That Are Immortal. Take a look...
Subscribe Newsletter