யாருக்கும் தெரியாத மகாபாரதத்தில் உலூபி மற்றும் அர்ஜுனனின் காதல் கதை!

By: Ashok CR
Subscribe to Boldsky

உலூபி என்ற நாக இளவரசி, பாண்டவர்களில் மூன்றாவது சகோதரனான அர்ஜுனனை மணந்தார். இவர் நாக ராஜாவான கௌரவ்யாவின் மகளாவார். கங்கை நதியின் அடியில் இருந்த பாம்புகளின் ராஜ்யத்தை ஆண்டு வந்தார் இவர். உலூபி ஒரு சிறந்த போர் வீரராக திகழ்ந்தார்.

அர்ஜுனனுக்கு சித்ரங்கடா என்றொரு மற்றொரு மனைவியின் மூலமாக பிறந்த மகனான பாப்ருவாஹணனனுக்கு போர் கலையை கற்றுக் கொடுத்தவராவார் உலூபி. பாப்ருவாஹணனால் கொல்லப்பட்ட அர்ஜுனனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தவர் தான் உலூபி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உலூபியை சந்தித்த அர்ஜுனன்

உலூபியை சந்தித்த அர்ஜுனன்

பாண்டவர்களின் மனைவியான பாஞ்சாலியின் அரண்மனைக்குள் நுழையக் கூடாது என்ற விதிமுறையை ஒரு முறை அர்ஜுனன் மீறும் நிலை ஏற்பட்டது என மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாஞ்சாலி என அழைக்கப்படும் திரௌபதி பாண்டவ சகோதரர்களான 5 பேர்களை திருமணம் செய்து கொண்டதால், பாஞ்சாலியுடன் ஒவ்வொரு பாண்டவ சகோதரரும் ஆளுக்கு ஒரு வருடம் வாழ்வதாக ஒப்புக் கொண்டார்கள். அந்த காலத்தில் மற்ற நான்கு பேர்களும் பாஞ்சாலியின் அரண்மனைக்குள் நுழையக் கூடாது. இந்த விதிமுறையை மீறினால், மீறுபவர்கள் ஒரு வருட காலத்திற்கு நாடு கடத்தப்படுவார்கள். ஒரு ஏழைக்கு உதவி செய்ய, திரௌபதியின் அரண்மனையில் மறந்து வைத்து விட்ட தன் அம்பையும், வில்லையும் எடுக்க, ஒரு முறை இந்த விதிமுறையை அர்ஜுனன் மீற வேண்டியதாயிற்று. விதியை மீறிவிட்டதால் அவர் நாடு கடத்தப்பட்டார்.

அர்ஜுனன் மற்றும் உலூபியின் திருமணம்

அர்ஜுனன் மற்றும் உலூபியின் திருமணம்

நாடு கடத்தப்பட்டிருந்த போது அர்ஜுனன் நாக இளவரசியான உலூபியை சந்தித்தார். அர்ஜுனனால் ஈர்க்கப்பட்ட உலூபி அவரை பூமிக்கு அடியில் இருந்த தண்ணீர் உலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே தன்னை திருமணம் செய்து கொள்ள அர்ஜுனனை சம்மதிக்க வைத்தார். அவர்களுக்கு இரவன் என்ற மகன் ஒருவனும் பிறந்தான். தண்ணீரில் வாழும் அனைத்து உயிரினங்களும் அவருக்கு கீழ் படிந்து நடக்கும் என்றும், தண்ணீருக்கு அடியில் அவரை யாராலும் வெல்ல முடியாது என்றும் உலூபி அவருக்கு வரமளித்தார்.

பாப்ருவாஹணனால் கொல்லப்பட்ட அர்ஜுனன்

பாப்ருவாஹணனால் கொல்லப்பட்ட அர்ஜுனன்

பல வருடங்கள் கழித்து அஷ்வமேதா பலியை பாண்டவர்கள் செய்த போது, தன்னுடைய எல்லைக்குள் நுழைந்த பலி குதிரையை நிறுத்தினான் பாப்ருவாஹணன். பாப்ருவாஹணனனுக்கு போர் கலைகளை உலூபி கற்றுக் கொடுத்திருந்தார். அர்ஜுனன் தான் தன் தந்தை என்பதையும், பலி குதிரையை பின் தொடர்ந்து வந்த படையோடு தான் மோதிய போது அது அர்ஜுனனின் படை என்பதையும் பாப்ருவாஹணன் அறியவில்லை. இந்த போரின் போது பாப்ருவாஹணனின் அம்பு அர்ஜுனனை தாக்கியது. இதனால் அவர் சுயநினைவை இழந்து கீழே விழுந்தார்.

உலூபியால் மீண்டும் உயிரை பெற்ற அர்ஜுனன்

உலூபியால் மீண்டும் உயிரை பெற்ற அர்ஜுனன்

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட உலூபி, சம்பவ இடத்திற்கு விரைந்தார். நாகர்களுக்கு இருந்த அறிவை பயன்படுத்தி அர்ஜுனனுக்கு மீண்டும் உயிரை அளித்தார். பின் தந்தையையும் மகனுமான, அர்ஜுனன் மற்றும் பாப்ருவாஹணன் அவர்களை உலூபி சேர்த்து வைத்தார். இந்த நிகழ்வோடு மற்றொரு புராணமும் சம்பந்தப்பட்டுள்ளது - குருக்ஷேத்ர போரில் ஷிகாந்தி என்ற அரவானியை கேடயமாக பயன்படுத்தி நய வஞ்சகமாக பீஷ்மரை அர்ஜுனன் கொன்றதால், தன் மகனாலேயே அர்ஜுனன் கொல்லப்படுவார் என கங்கா தேவி சபித்தார் என்றும் கூறப்படுகிறது.

கங்கா தேவி சொன்ன சாப விமோட்சனம்

கங்கா தேவி சொன்ன சாப விமோட்சனம்

இந்த சாபத்தை கேள்விப்பட்ட உலூபி, கங்கா தேவியிடம் மன்னிப்பு கோரினார். பாப்ருவாஹணன் அர்ஜுனனை கொல்வான், ஆனால் ம்ரிதாசஞ்சீவனியை கொண்டு உலூபி அவருக்கு உயிர் கொடுத்து விடலாம் என கங்கா தேவி உலூபியிடம் கூறினார். பாண்டவர்கள் தங்களின் கடைசி பயணத்தை தொடங்கிய போது, கங்கை நதியில் தன் ராஜ்யத்திற்கு மீண்டும் சென்றார் உலூபி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Love Story of Uloopi and Arjuna in Mahabharth

Uloopi was a Naga Princess and she got married to Arjuna, the third of the Pandava brothers. She was the daughter of the Serpent King, Kauravya, who ruled the underwater kingdom of snakes in the Ganga River.
Story first published: Thursday, February 12, 2015, 12:47 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter