பலரும் அறிந்து கொள்ள வேண்டிய ஸ்ரீ கிருஷ்ணரின் கதை!

By: Ashok CR
Subscribe to Boldsky

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை கிருஷ்ண ஜென்மாஷ்டமி அல்லது கோகுலாஷ்டமி என்றும் அழைக்கின்றனர். ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பை குறிப்பதே இந்த தினமாகும். இந்து மதத்தில் அதிகமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் இதுவும் ஒன்றாகும்.

கிருஷ்ணரின் ராசலீலை பற்றிய அதிர்ச்சியூட்டும் தொன்மங்கள்!!!

இன்று கிருஷ்ண ஜெயந்தி என்பதால், தமிழ் போல்ட் ஸ்கை ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பு குறித்த கதையை உங்களுக்காக கொடுத்துள்ளது. அதைப் படித்து கிருஷ்ணனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்ரீ கிருஷ்ணரின் கதை

ஸ்ரீ கிருஷ்ணரின் கதை

கம்டன் என்ற கொடுங்கோல் மன்னன் மதுராவை ஆண்டு வந்தான். கம்சனின் தங்கையான தேவகி வாசுதேவனை மணந்தாள். அவளின் திருமண நாளின் போது, வானுலகில் இருந்து வந்த ஒரு தெய்வீக குரல், தேவகியின் எட்டாவது மகன் கம்சனை அழிப்பான் என கூறியது.

கம்சனிடம் வாக்கு

கம்சனிடம் வாக்கு

இதை கேட்டு பயந்து போன கம்சன், தன் தங்கையைக் கொல்ல தன் வாளை உடனடியாக எடுத்தான். குறுக்கிட்ட வாசுதேவன், தன் மனைவியை விட்டு விடுமாறு வணங்கினான். தங்களுக்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கம்சனிடம் ஒப்படித்து விடுவதாக வாக்கும் அளித்தான். தேவகியின் எட்டாவது மகனின் கையால் தன் மரணம் நிகழும் என்று கணித்த தீர்க்கதரிசனத்தை எண்ணி பயந்த கம்சன், தேவகியையும் அவளது கணவனான வாசுதேவனையும் சிறையில் அடைத்தான்.

எட்டாவது மகன்

எட்டாவது மகன்

தேவகிக்கும் வாசுதேவனுக்கும் பிறந்த எட்டாவது மகன் தான் ஸ்ரீ கிருஷ்ணர். அவர்களின் முதல் ஆறு குழந்தைகளை கம்சன் கொன்ற பிறகு, ஏழாவதாக கருவுற்ற குழந்தை கருச்சிதைவில் இறந்தது. அதற்கு பின் பிறந்தவர் தான் கிருஷ்ணர்.

குழந்தை மாற்றம்

குழந்தை மாற்றம்

எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே அக்குழந்தையின் தலைவிதியை எண்ணி தேவகியும் வாசுதேவனும் வருந்தினர். அப்போது திடீரென அவர்கள் முன் தோன்றிய விஷ்ணு பகவான், அவர்களையும் மதுராவின் மக்களையும் காப்பாற்ற தானே அவதாரம் எடுத்து வரப்போவதாக கூறினார். கிருஷ்ணர் பிறந்தவுடன் அவரை எடுத்துக் கொண்டு, கோகுலத்தில் உள்ள தன் நண்பனான மாடு மேய்ப்பவர்களின் தலைவனான நந்தாவிடம் ஒப்படைக்குமாறு வாசுதேவனிடம் கூறினார். அதே நேரத்தில் தான் நந்தாவின் மனைவியான யசோதா ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பு

ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பு

தன் மகனை மாற்றி விட்டு, யசோதாவின் பெண் குழந்தையை சிறைக்கு வாசுதேவன் எடுத்து கொண்டு வர வேண்டும். அவன் பாதையில் எதுவும் தடையாக இருக்காது என விஷ்ணு பகவான் மீண்டும் ஒரு முறை உறுதியளித்தார். ஒரு அஷ்டமி நாளன்று நடு இரவில், கம்சனின் சிறையில் பிறந்தது அந்த தெய்வீக குழந்தை.

யமுனா நதி வழி

யமுனா நதி வழி

தெய்வீக அறிவுறுத்தல்களை நினைவில் வைத்திருந்த வாசுதேவன், தன் குழந்தையை தன் மடியில் வைத்துக் கொண்டு கோகுலத்தை நோக்கி நடந்தான். தன் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததை வாசுதேவன் கண்டான். தன் கால்களை அசைத்தவுடன் அந்த சங்கிலி அவிழ்ந்தது. சிறைச்சாலை கதவுகளும் திறந்தன. கிருஷ்ணரை தன்னுடன் எடுத்துக் கொண்டு யமுனா நதியை கடந்து கோகுலத்தை அடைந்தான். அங்கே அரக்கனான தன் மாமா கம்சனின் அச்சுறுத்தல் இல்லாமல் பாதுகாப்பாக அவர் வளரலாம்.

ஐந்து தலை நாகத்தின் நிழல்

ஐந்து தலை நாகத்தின் நிழல்

யமுனை நதியை கடக்கையில், வாசுதேவன் தன் குழந்தையை தன் தலைக்கு மேல் வைத்துக் கொண்டான். மழை பெய்து ஆற்றில் வெள்ளம் போய் கொண்டிருந்தது. ஆனால் வாசுதேவனுக்கு பாதையை ஏற்படுத்திக் கொடுத்தது தண்ணீர். அதிசயமாக ஐந்து தலை நாகம் அவனை பின் தொடர்ந்து, குழந்தைக்கு நிழல் போல் வந்து கொண்டிருந்தது.

சிறைச்சாலைக்கு திரும்பிய வாசுதேவன்

சிறைச்சாலைக்கு திரும்பிய வாசுதேவன்

வாசுதேவன் கோகுலத்தை அடைந்ததும், நந்தாவின் வீட்டு கதவுகள் திறந்திருப்பதை வாசுதேவன் கண்டான். அங்கே அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அவன் மெதுவாக குழந்தைகளை மாற்றினான். பின் அந்த பெண் குழந்தையுடன் மீண்டும் கம்சனின் சிறைச்சாலையை நோக்கி ஓடினான். சிறைச்சாலைக்குள் நுழைந்தவுடன் அதன் கதவுகள் தானாக மூடிக்கொண்டன. அப்போது விழித்துக் கொண்ட காவலாளிகள், பெண் குழந்தை பிறந்துள்ளது என உணர்ந்து கொண்டார்கள்.

யோகமாயா

யோகமாயா

இந்த பிறப்பைக் பற்றி கம்சன் அறிந்த போது, சிறைச்சாலைக்குள் விரைந்தான். அந்த குழந்தையை ஒரு கல்லின் மீது தூக்கி எறிந்தான். ஆனால் இம்முறை அவன் கையில் இருந்து நழுவிய அக்குழந்தை வானை சென்றடைந்தது. காற்றில் எழுந்த அவள், விஷ்ணு பகவானின் உதவியாளரான யோகமாயாவாக உருமாறினாள். கம்சனை பார்த்து "ஏ முட்டாளே! என்னை கொல்வதால் உனக்கு என்ன கிடைக்கும்? உன் எதிரி ஏற்கனவே எங்கோ பிறந்து விட்டான்" என யோகமாயா கூறினாள்.

புட்டனா வதம்

புட்டனா வதம்

தான் அழிவதற்கு முன்பு தன்னுடைய குழந்தை எதிரியை எப்படியாவது அழிக்க வேண்டும் என கம்சன் நினைத்தான். அதற்காக புட்டனா என்ற அரக்கனை அனுப்பி வைத்தான். தேவகி கிருஷ்ணரை பெற்றெடுத்த அதே நாளில் பிறந்த அனைத்து குழந்தைகளையும் அவன் கொல்ல சொன்னான். அதனால் அழகிய பெண்ணாக வேடமணிந்த அந்த அரக்கன் தன் மார்பகங்களில் விஷத்தை தடவிக் கொண்டான். அந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தாய் பாலூட்ட பறந்து வந்து நோட்டமிட்டான். நந்தாவின் வீட்டிற்கு வந்த அந்த அரக்கன், தன் குழந்தையை தன்னிடம் காட்டுமாறு யசோதையிடம் கேட்டான். குழந்தை கிருஷ்ணரை தன் மடியில் போட்ட புட்டனா தன் மார்பக காம்புகளை குழந்தையின் வாயில் திணித்தான். கண்களை மூடிக்கொண்ட கிருஷ்ணர், விஷத்தை உறிஞ்சாமல், அவனின் மூச்சு காற்றை உறிஞ்சி, அவனை கொன்றார்.

ஷகாட்சுரா வதம்

ஷகாட்சுரா வதம்

புட்டனாவின் மரணத்தை கேள்விப்பட்ட கம்சன் அதிர்ந்தான். அதனால் ஷகாட்சுரா என்ற அரக்கனை அனுப்பி வைத்தான். ஒரு வண்டி போல் வேடமணிந்து கொண்ட அவன் கோகுலத்தை அடைந்தான். கிருஷ்ணருக்கு மூன்று மாதங்கள் ஆகியிருந்த போது, அந்த நிகழ்வை கொண்டாட, யசோதா ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தாள்.

வண்டியாக மாறிய ஷகாட்சுரா

வண்டியாக மாறிய ஷகாட்சுரா

மாடுகளை மேய்க்கும் அனைத்து பெண்களும் அவள் வீட்டு முன்பு கூடி, பண்டிகை பாடல்களை பாடினார்கள். விருந்தாளிகளை வரவேற்பதில் யசோதா சுறுசுறுப்பாக இருந்தாள். கிருஷ்ணாவின் பாதுகாப்பான மற்றும் நீண்ட ஆயுளுக்கு அவள் பல புனித சடங்குகளையும் மேற்கொண்டார். இதில் மும்முரமாக இருந்த அவள், மர வண்டியின் அடியில் படுத்திருந்த குழந்தை கிருஷ்ணரைப் பற்றி மறந்தாள். ஷகாட்சுரா கிருஷ்ணரின் மேல் வண்டியாக இருந்தான். கிருஷ்ணரின் மேல் வண்டியை ஏற்றி நசுக்கிக் கொல்ல நினைத்தான்.

வண்டியின் சக்கரத்தை உதைத்து உடைத்தது

வண்டியின் சக்கரத்தை உதைத்து உடைத்தது

பசியெடுத்த கிருஷ்ணர் அழத் தொடங்கினார். இதனை கண்டு கொள்ளாமல் யசோதா இருந்ததால், கிருஷ்ணர் அந்த வண்டியின் சக்கரத்தை உதைத்தார். மிகப்பெரிய சத்தத்துடன் அந்த வண்டி உடைந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த அனைவரும் வண்டியின் அடியில் கிருஷ்ணர் பாதுகாப்பாக படுத்திருந்ததை பார்த்தனர். குழந்தை கிருஷ்ணர் அழுது கொண்டிருந்தார். குழந்தையை உடனடியாக தூக்கிய யசோதா, அவனை கட்டிபிடித்து, பாலூட்ட தொடங்கினார்.

அண்டத்தைப் பற்றிய பார்வை

அண்டத்தைப் பற்றிய பார்வை

கிருஷ்ணரின் மூத்த சகோதரரான பலராமன், கிருஷ்ணர் மண்ணை உண்ணுகிறார் என தன் தாய் யசோதாவிடம் புகார் கூறினான். மிகுந்த ஆர்வமடைந்த யசோதா, கிருஷ்ணரின் வாயை திறக்க சொன்னாள்.

தான் பார்த்த காட்சியை கண்டு யாசோதா வியந்தே போனாள். கிருஷ்ணரின் வாயில் அவள் மொத்த அண்டத்தையே கண்டாள். சூரியன், சந்திரன், அனைத்து நட்சத்திரங்கள், வானம், மலைகள், ஆறுகள், தீவுகள், பெருங்கடல்கள், அனைத்து உயிர் வாழும் ஜீவராசிகள் மற்றும் உயிர் வாழாத பொருட்களைக் கண்டாள்.

வெண்ணெய் கிருஷ்ணா

வெண்ணெய் கிருஷ்ணா

கிருஷ்ணர் வளரும் போது அவருடன் சேர்ந்து அவருடைய குறும்பும் வளர்ந்து கொண்டே வந்தது. பால் மற்றும் வெண்ணெய்யின் மீது அவருக்கு இருந்த காதல் பற்றிப் பல கதைகள் உள்ளது. பால் கார பெண்கள் வயலை கடக்கையில், கிருஷ்ணரும் அவருடைய நண்பர்களும் கற்களை அவர்களின் பானையின் மீது எரிந்து பானையை உடைத்து விடுவார்கள்.

உத்திரத்தில் வெண்ணெய் ஜாடி

உத்திரத்தில் வெண்ணெய் ஜாடி

இவரின் குடும்பத்தில் எப்போதும் அதிகமான அளவில் பாலும், வெண்ணெய்யும் இருந்து வந்தது. அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து பல வழிகளில் கிருஷ்ணரும், பலராமனும் பாலையும் வெண்ணெயையும் திருடி வந்தனர். கிருஷ்ணருக்கு பால் பொருகளின் மீதிருந்த காதலால், வெண்ணெய் ஜாடிகளை ஒன்றாக கட்டி, உத்திரத்தில் தொங்க விட்டிருந்தாள் யசோதா. அதனால் அவை கிருஷ்ணரின் கைகளுக்கு எட்டாமல் இருந்தது.

நண்பர்களுடன் வெண்ணெய் திருட்டு

நண்பர்களுடன் வெண்ணெய் திருட்டு

ஒரு நாள், வேகமாக கிருஷ்ணர் தூங்கியதால், அருகில் இருந்த கிணற்றில் ஒரு வாளி தண்ணீர் இரைக்க சென்றால் அவள். படுக்கையில் இருந்து எழுந்த கிருஷ்ணர் விசில் அடித்தார். சிறுவர்கள் சிலரும், குரங்குகளும் அவரின் வீட்டை நோக்கி வந்தனர். அங்கே வந்த அவர்கள் உடனடியாக ஒன்று கூடி, கிருஷ்ணரை தங்களின் தோள் மீது ஏற வைத்து, வெண்ணெய் ஜாடிகளை இறக்கினர். பின் அனைவரும் வெண்ணெய்யை உண்ண ஆரம்பித்தார்கள். இதில் மிகவும் மூழ்கி போன அவர்கள் வீட்டிற்குள் யசோதா நுழைவதை கவனிக்க தவறினர். வீட்டிற்குள் வந்த யசோதா, இதனை கண்டு கலங்கினாள். பின் கிருஷ்ணரை கண்டித்தாள்.

கயிற்றல் கட்ட முயன்ற யசோதா

கயிற்றல் கட்ட முயன்ற யசோதா

மிகவும் கோபமடைந்த அவள் கிருஷ்ணரை ஒரு குச்சியை கொண்டு துரத்தினார். குரங்குகளும் நண்பர்களும் ஓட்டம் பிடித்தனர். ஆனால் கிருஷ்ணரோ தன் தாயிடம் இருந்து நன்றாக அடி வாங்கினார். கிருஷ்ணரை ஒரு கயிற்றில் கட்ட முயன்றாள். ஆனால் ஒவ்வொரு முடிச்சை போடும் போதும், அந்த கயிறு மிகவும் குட்டையாவதை அவள் கவனித்தாள். அவளைப் பார்த்து சிரித்த கிருஷ்ணர் தானே முடிச்சுகளை போட்டார். அதனால் அவரை அரவை கருவியில் சேர்த்து கட்டி வைத்தார்.

தேவர்களாக உருமாறிய மரங்கள்

தேவர்களாக உருமாறிய மரங்கள்

தவழ முயற்சித்த கிருஷ்ணர், முற்றத்தில் இருந்த இரண்டு அர்ஜுன மரங்களுக்கு இடையே மாட்டி கொண்டார். கீழே விழுந்த அந்த மரங்கள் தேவர்களாக உருமாறி, கிருஷ்ணரை வணங்கினார்கள். நாரதரின் சாபத்தால் 100 வருடங்கள் இப்படி மரமாக நின்றிருந்த அவர்களை கிருஷ்ணர் விடுவித்தார்.

கிருஷ்ணரின் வேறு சில வதங்கள்

கிருஷ்ணரின் வேறு சில வதங்கள்

கம்சனின் வேட்டையும் நிற்கவில்லை. அவன் இன்னமும் சில அரக்கர்களை ஒருவர் பின் ஒருவராக அனுப்பி வைத்தான். அவர்கள் ஒவ்வொருவரையும் கிருஷ்ணர் கொன்றார். அதில் சில,

1. பகாசுர வதம்

2. அகாசுர வதம்

3. கலிய வதம்

4. அரிஸ்டாசுர வதம்

கடைசியாக நடந்தது தான் கம்சனின் மரணம். இதனை கம்ச வதம் என அழைப்பர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Sri Krishna Jayanthi - The Story of Lord Krishna

Sri Krishna Jayanthi is also called as Krishna Janmashtami / Gokulashtami. This day marks the birth of Lord Krishna. This is one of the most celebrated festivals for Hindus.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter