ஆண்களை பற்றி ஆண்களுக்கே தெரியாத வியப்பூட்டும் தகவல்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்கள் என்றால் என்ன இரண்டு பெரிய கொம்பா முளைத்திருக்கிறது? என ஆணாதிக்கத்தை பேசும்போதெல்லாம் பெண்ணியம் பேசுபவர்கள் கூறுவதுண்டு. ஆனால், ஆண்களை விட பெண்கள் தான் பொது வாழ்வில் நிறைய ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது வேறு விஷயம். சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் ஓர் செய்து வைரலாக பரவியது.

உலகின் பெரும் எம்.என்.சி நிறுவனங்களை ஆட்டிப்படைக்கும் இந்தியர்கள்!!!

நகை எத்தனை போடுவீர்கள் என மணமகன் வீட்டில் கேட்பது வரதட்சணை என்றால். மாப்பிளைக்கு சொந்த வீடு இருக்கிறதா? நல்ல வேலையில் இருக்கிறாரா? சம்பளம் எவ்வளவு? வெளிநாட்டுக்கு போகும் வாய்ப்புகள் உள்ளதா? என கேட்டறிந்து திருமணம் செய்ய மணமகள் வீட்டார் முனைவதும் கூட ஒருவகை வரதட்சணை தானே?

இன்ஜினியரிங் படித்துவிட்டு வேறு துறைகளில் சாதித்த பிரபலங்கள்!!!

சரி, மீண்டும் நமது தலைப்புக்கு வருவோம். மேல்கூறிய படி ஆண்களுக்கென்ன இரண்டு கொம்பா முளைத்திருக்கிறது என்றால். ஆம்!! என்று கூறுங்கள். நாமும் நம்மை பற்றி பெருமையடைந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என இனி காண்போம்....

உலகையே கலக்கிய இந்திய கடத்தல்காரர்கள் பற்றிய திகிலூட்டும் உண்மைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நம்பிக்கை vs ஐ.கியூ

நம்பிக்கை vs ஐ.கியூ

நல்ல விஷயம் என்னவெனில் தன்னம்பிக்கை அதிகம் உள்ள நேர்மையான ஆண்களுக்கு தான் அதிக ஐ.கியூ இருக்கிறது என ஓர் அறிவியல் ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது. சோகமான விஷயம் என்னவெனில், துரோகம் நினைக்கும் ஆண்களுக்கு ஐ.கியூ குறைவாக இருக்கிறதாம்.

சொட்டை கேலிக்கானது அல்ல

சொட்டை கேலிக்கானது அல்ல

சொட்டை தலை உள்ளவர்கள் அல்லது எப்போதும் தலையை முழு சவரம் செய்துக் கொள்பவர்கள் மற்றவர்களோடு ஒப்பிடுகையில் 13% அதிகம் வலிமையான மனதிடம் கொண்டுள்ளனர்.

ஹை-ஹீல்ஸ் முதலில் அணிந்தது ஆண்கள் தான்

ஹை-ஹீல்ஸ் முதலில் அணிந்தது ஆண்கள் தான்

ஹீல்ஸ் செருப்புகள் என்றாலே அனைவருக்கும் பெண்களின் எண்ணம் தான் வரும். ஆனால், 1600-களில் முதன் முதலில் ஹீல்ஸ் காலணிகளை அணிந்தது ஆண்கள் தான்.

மனைவிகள் இல்லாத சோகம்.!??!?

மனைவிகள் இல்லாத சோகம்.!??!?

வரும் 2020 ஆண்டுகளில் சீனாவில் இருக்கும் இருக்கும் 30 - 40 மில்லியன் ஆண்களுக்கு மனைவிகள் கிடைக்க மாட்டார்கள். இது வரமா?? சாபமா??? இந்த நிலை கூடிய விரைவில் இந்தியாவுக்கும் வரும் என்கிறார்கள்.

ஆண்களாலும் பாலூட்ட முடியும்

ஆண்களாலும் பாலூட்ட முடியும்

அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை இது. ஆம், ஆண்களாலும் குழந்தைகளுக்கு பாலூட்ட முடியும். அதற்கான ஹார்மோன்கள் ஆண்களிடமும் இருக்கிறது.

விட்டுக்கொடுப்பது

விட்டுக்கொடுப்பது

இதுவரை நமது நகர்புற பேருந்துகளில் பெண் இருக்கையில் அமர எந்த ஓர் ஆண் மகனையும் பெண் அனுமதித்ததில்லை. ஆனால், ஆண் இருக்கையில் அமர்ந்த எந்த ஓர் பெண்ணையும் ஆண், "எழுந்திரிங்க, இது ஜென்ட்ஸ் சீட்.." எனவும் கூறியதில்லை. (இதுதாங்க பெரிய மனசு.)

உயரத்திலும் உயரிந்திருக்கும் ஆண்கள்

உயரத்திலும் உயரிந்திருக்கும் ஆண்கள்

பெண்களோடு சராசரி உயரம் ஒப்பிடுகையில், நான்கில் இருந்து ஐந்து அங்குலம் பெண்களை விட ஆண்கள் உயரமாக இருக்கிறார்கள்.

மனைவிகளை அழகாக பாவிப்பவர்கள்

மனைவிகளை அழகாக பாவிப்பவர்கள்

ஓர் ஆய்வறிக்கையில், தங்களது மனைவியை அழகாக பாவிக்கும் மனோபாவம் உடைய ஆண்கள் தங்களது வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கின்றனர். மற்றும் முழு திருப்தி அடைகின்றனர் என கூறப்பட்டுள்ளது.

ஆண்களின் வேகம்

ஆண்களின் வேகம்

ஆண்கள் தங்களது மனைவி அல்லது காதலியுடன் நடக்கும் போது 7% வேகம் குறைவாக நடக்கிறார்கள். இதுவே, நண்பர்களோடு நடக்கும் போது இரு மடங்கு வேகமாக நடக்கிறார்கள்.

99 வயதில் விவாகரத்து

99 வயதில் விவாகரத்து

99 வயது முதியவர் தனது 96 வயது மனைவியை விவாகரத்து செய்தார். இந்த வயதில் ஏன் விவாகரத்து செய்கிறீர்கள் என கேட்டதற்கு, " 77 வருடங்களுக்கு முன்பு (1940), எனக்கு தெரியாமல் எனது மனைவி தகாத உறவு வைத்திருந்தார். எனது பிள்ளைகளின் நலன் மற்றும் வாழ்க்கையை கருதி காத்திருந்தேன்" என பதிலளித்தார்.

ஐ. லவ் யூ...

ஐ. லவ் யூ...

காதல் இருந்தாலும், இல்லாவிட்டாலும்... டக்கென்று, "ஐ லவ் யூ.." சொல்வதில் ஆண்கள் வல்லவர்கள். இது பெண்களால் முடியாது. பெண்கள் காதலித்தாலும் கூட தங்களது காதலை வெளிபடுத்த மாட்டார்களாம். இது உலகளாவிய ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. (அட, நம்மூர்ல சின்ன குழந்தைக்கு கூட இது தெரியுமே.. இதுக்கெல்லாம் போயி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு....)

வரைமுறையற்ற செலவு

வரைமுறையற்ற செலவு

உலகம் முழுதிலும் ஆண், பெண்களோடு ஒப்பீடு நடத்தியதில், ஆண்கள் விட பெண்கள் தான் வரைமுறையற்ற செலவுகள் அதிகம் செய்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shocking Facts About Men

Do you know about the shocking facts about men? read here.
Story first published: Thursday, August 13, 2015, 10:05 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter