சீரடி சாய் பாபா நிகழ்த்தியுள்ள அற்புதங்கள்!!!

Posted By: Staff
Subscribe to Boldsky

சீரடியின் துறவியான சாய் பாபா தன் பக்தர்களின் உள்ளங்களை ஆண்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய பக்தர்களாக இல்லாதவர்கள் கூட அவருடைய வாழ்க்கை மற்றும் குணாதிசயங்களைப் பற்றி கேள்விப்படும் போது பிரமிப்பை அடைவார்கள் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை. சிலர் அவரை கடவுளாக வணங்குகின்றனர். இன்னும் சிலரோ அவரை, துன்பங்களில் இருந்து மனித இனத்தை காக்க கடவுளால் பூமிக்கு அனுப்பப்பட்ட மிகப்பெரிய துறவியாக கருதுகின்றனர்.

இமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளாரா?

சாய் பாபாவின் வாழ்க்கையாகட்டும் அல்லது அவர் ஆற்றிய அற்புதங்கள் ஆகட்டும், அவரைப் பற்றிய அனைத்துமே அவரை நம்பும் மக்களின் மத்தியில் வியப்பை ஏற்படுத்தாமல் இருக்காது. அவருடைய பிறப்பு பற்றிய கதை பெரும் விவாதத்துக்குள்ளானது. அவர் இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு மகனாக பிறந்தார் என சிலர் கூறுகின்றனர். அவர் காது குத்திக்கொள்ளவில்லை என்பதால் சிலர் அவரை இஸ்லாமியர் என்றும் கூறுகின்றனர்.

சிவபெருமான் ஆற்றியுள்ள 4 அதிர்ச்சியூட்டும் அற்புதங்கள்!!!

ஆனால் சாய் பாபா எப்போதுமே கூறுவது, "கடவுள் ஒருவரே". அவருடைய இள வயதில் இந்து கோவில்களில் அவர் அல்லாவை புகழ்வார் என்றும், மசூதிகளில் அவர் ராமரையும் சிவனையும் பற்றிய பஜனைகளைப் பாடுவார் என்றும் கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வளர்ந்த விதம்

வளர்ந்த விதம்

நீண்ட காலமாக குழந்தை வரம் கேட்டு வந்த ஒரு பிராமின பெற்றோருக்கு மகனாக பிறந்தவர் தான் சாய் பாபா என பரவலாக நம்பப்படுகிறது. ஆனால் சாய் பாபாவை பெற்ற பிறகு, அவர்கள் இந்த உலக வாழ்க்கையையும் தங்கள் குழந்தையையும் விட்டு விட்டு, சந்நியாசத்தை நாடி சென்று விட்டனர். ஃபகிர் என்பவருடன் தான் சாய் பாபா வளர்ந்தார் என கூறப்படுகிறது. ஃபகிரின் மரணத்திற்கு பிறகு, திருப்பதி பாலாஜியின் பக்தரான கோபால் ராவ் தேஷ்முக் (குருதேவா என அழைக்கப்படுபவர்) அவர்களின் ஆதரவில் வளர்ந்தார் சாய் பாபா.

பிறந்த தேதி

பிறந்த தேதி

பாபாவின் சரியான பிறந்த தேதி இன்றளவும் தெரியவில்லை. ஆனால் அவர் 1857 ஆம் ஆண்டு ஜான்சி ராணியின் படையில் சிப்பாயாக சேவை புரிந்துள்ளார் என சிலர் கூறுகின்றனர். அப்படி பார்க்கையில் 1835-1840 இடைப்பட்ட காலத்தில் தான் அவர் பிறந்திருக்க வேண்டும். மனித இனத்தின் நலனுக்காக சாய் பாபா ஆற்றியுள்ள சில அற்புதங்களைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

ஒரு பெண்ணின் பார்வையின்மையை போக்கியுள்ளார் பாபா

ஒரு பெண்ணின் பார்வையின்மையை போக்கியுள்ளார் பாபா

சாய் பாபாவின் பக்தையான ஒரு பெண் தன் பார்வையை இழந்தார். மருத்துவர்கள் அனைவரும் கை விரித்து விட்டனர். சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு சென்றாலும் கூட பிரயோஜனமில்லை என்றும் கூறி விட்டனர். அந்த பெண்ணின் கணவன் அவரை சீரடிக்கு அழைத்து வந்து, அவரை பாபாவின் சமாதிக்கு அன்றாடம் அழைத்து வந்தார். தனக்கு குணமானால் எம்ப்ராய்டரி போடப்பட்ட சால்வை ஒன்றை பாபாவிற்கு காணிக்கையாக தருவதாக அப்பெண் வாக்களித்தார். ஒரு வருடத்திற்குள் அந்த பெண்ணிற்கு பார்வை கிடைத்து விட்டது என கூறப்படுகிறது. அதற்கு நன்றிக்கடனாக தன் வாக்கை அவர் நிறைவேற்றியுள்ளார்.

யஸ்வந்த் தேஷ்பாண்டே தன் கண் பார்வையை மீண்டும் பெற்றார்

யஸ்வந்த் தேஷ்பாண்டே தன் கண் பார்வையை மீண்டும் பெற்றார்

சாய் பாபாவின் தீவிர பக்தரான யஸ்வந்த் தேஷ்பாண்டே, வயதான காரணத்தினால் தன் கண் பார்வையை இழந்தார். சாய் பாபாவை தரிசிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக ஆவலை கொண்டிருந்தார். அவருடைய மகன் மிகுந்த வேலையாக இருந்ததால், சீரடிக்கு அவருடைய பேரனுடன் அவர் சென்றார்.

கோவிலில், அவர்கள் ஏதோ ஒன்றை தவறவிட்டதாக உணர்ந்த அவரின் பேரன், அதனை எடுக்க ஓடினான். பாபா முன் மண்டியிட்டா யஸ்வந்த் தேஷ்பாண்டே, அவரை காண முடியாத காரணத்திற்காக மன்னிப்பு கேட்டார். அதற்கு பாபா கூறியதாவது, "கண்டிப்பாக நீ என்னை பார்ப்பாய்". திரும்பி வந்து பேரன் பார்க்கும் போது, தாத்தா யஸ்வந்த் தேஷ்பாண்டேவை காணவில்லை. தன் தாத்தா தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு தானாக வந்து சேர்ந்து விட்டதை சிறிது நேர தேடுதலுக்கு பிறகு அவர் பேரன் தெரிந்து கொண்டான். அதற்கு காரணம் அவர் கண் பார்வையை மீண்டும் பெற்றதாலேயே.

கண்ணுக்கு தெரியாத பாபாவின் புகைப்படம்

கண்ணுக்கு தெரியாத பாபாவின் புகைப்படம்

டாக்டர் கே.பி.கவன்கர் தன் குழந்தை பருவம் முதலாகவே மிகப்பெரிய சாய் பாபா பக்தராவார். பாபாவின் பக்தர்கள் பாபாவின் புகைப்படத்தை கோரியது பற்றி அவர் அவருடைய புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளார். மிகுந்த தூண்டலுக்கு பின்னர், தன் காலடிகளை மட்டும் புகைப்படம் எடுத்துக் கொள்ள பாபா சம்மதித்தார். ஆனால் அவரின் அனுமதியை சாதகமாக எடுத்துக் கொண்டவர்கள் அவருடைய முழுப்படத்தையும் எடுத்து விட்டனர். ஆனால் அந்த ஃபிலிமை கழுவிய போது, சாய் பாபாவின் உருவத்திற்கு பதிலாக புகைப்படமாக எடுத்தவரின் சொந்த குருவின் படமே இருந்துள்ளது.

அனைவரையுமே பாபா விரும்பினார்

அனைவரையுமே பாபா விரும்பினார்

சாய் பாபாவின் பார்வையில் அனைத்து படைப்புகளுமே ஒன்றாகவே இருந்தது. ஜாதி, சமயம் மற்றும் மதத்தின் பேரில் அவர் யாரையும் பிரித்து பார்த்ததில்லை. அவரை பொறுத்த வரை, விலங்குகள் கூட மனிதர்களின் அளவிலான மதிப்பைப் பெற்றிருந்தது. பக்தர்களிடம் இருந்து பிரசாதங்களைப் பெறுவதற்காக அவர் அடிக்கடி விலங்குகளின் வடிவில் காட்சி தருவார்.

பாபாவிற்கு விருந்தளித்த தாமியா

பாபாவிற்கு விருந்தளித்த தாமியா

ஒரு முறை தாமியா என்பவர் தான் தங்கியிருந்த இடத்திற்கு சாய் பாபாவை விருந்திற்கு அழைத்தார். ஆனால் தன்னால் வர இயலாது என்றும், அவருக்கு பதிலாக பாலா படேலை அனுப்பி வைப்பதாக பாபா கூறினார். பாலா படேல் கீழ் ஜாதியை சேர்ந்தவர். அதனை காரணமாக காட்டி, விருந்தாளியான அவரை அவமரியாதையாகவோ இழிவுபடுத்தவும் விதமாகவோ நடத்தக்கூடாது என பாபா எச்சரித்தார். "உங்களுக்கு தொலைவாக அவரை அமர வைத்து, அவரை பார்த்து கூச்சலிடுவதோ அல்லது இழிவுபடுத்தவோ கூடாது", என தெளிவாக கூறினார்.

விருந்தை தயார் செய்த தாமியா பாபாவிற்காக தட்டுக்களை எடுத்து வைத்தார். "வாருங்கள் சாய்" என அழைத்தார். உடனே எங்கிருந்தோ வந்த ஒரு கருப்பு நாய் அந்த தட்டில் இருந்து சாப்பிட்டது. அதன் பிறகு, தாமியாவும், பாலாவும் ஒன்றாக அமர்ந்து உணவை அருந்தினார்கள்.

உண்மையான பக்தி போதும்

உண்மையான பக்தி போதும்

சாய் பாபாவிற்கு சடங்குகளின் மீது நம்பிக்கை கிடையாது. தூய்மையான பக்தி மற்றும் நம்பிக்கையால் மட்டுமே அவரை வெல்ல முடியும். சாய் பாபாவின் அற்புதங்கள் பற்றி மேலும் அறிந்தால் அவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள தயங்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Miracles Performed By Sai Baba

Let us read about some of the many miracles Sai Baba performed for the good of mankind.
Story first published: Thursday, October 1, 2015, 10:39 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter