கார்பரேட் அலுவலகங்களில் உலாவிக் கொண்டிருக்கும் மகாபாரத கதாப்பாத்திரங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

மகாபாரதம் நாம் அனைவரும் பார்த்து ரசிக்கும் காவியம். எத்தனை முறை பார்த்தாலும், சலிப்போ, அலுப்போ ஏற்படுத்தாத கதை. டிவி-க்களில் பார்க்கும் போது ரசிக்கும் நாம், நமது எதிரில் அதே போன்று யாரவது தோன்றினால் ரசிப்பதில்லை. உதாரணமாக, உங்கள் நண்பர் யாராவது சகுனி வேலை செய்தால், கண்டமேனிக்கு திட்டி தீர்த்துவிடுவீர்கள்.

மகாபாரதம்! நிஜம் என்பதற்கான அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட உண்மைகள்!

அர்ஜுனனாக இருந்தால் கூட பொறாமை தான் ஏற்படுமே தவிர, அன்பு வராது. யாராவது நிறைய உதவி செய்தால், "ஆமா, இவரு பெரிய கர்ணன்.." என்று கேலி தான் செய்வோம். அந்த வகையில் நமது அலுவலகத்திலேயே சில மகாபாரத கதாப்பாத்திரங்கள் உலாவிக் கொண்டிருப்பார்கள்.

மகாபாரதத்தில் திரௌபதியை பற்றி நீங்கள் அறிந்திராத சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

அவர்களை கண்டாலே பலருக்கு பிடிக்காது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அந்த வகையில், இவர்களை போன்ற சில கதாப்பாத்திரங்கள் உங்கள் அலுவலகத்தில் இருக்கிறார்களா என பாருங்கள்...

மகாபாரதத்தில் அனுமான் வந்த கதை!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சகுனி

சகுனி

மேனேஜ்மெண்ட் என்ன கூறினாலும் ஒத்தூதுவது, மற்றவர்களை பழிவாங்க போட்டுக் கொடுப்பது, மற்றவர் உழைப்பில் இவர்கள் முன்னேற்றம் காண்பது என சிலர் சகுனி வேலை செய்துக் கொண்டு இருப்பார்கள்.

கிருஷ்ணா

கிருஷ்ணா

பாஸ் தான் நமது கிருஷ்ணர். அவருக்கு என்ன நடக்கும் என்று தெரியும். யார், யார் என்னென்ன செய்கிறார்கள் என்பதையும் தெரிந்து வைத்திருப்பர். மற்றும் அனைவரும் முக்கியமானவர்கள் என்று நம்ப வைப்பவர்கள்.

துரியோதனன்

துரியோதனன்

ஏறத்தாழ டீம் லீடரை போல தான். அனைத்து வேலைகளையும் செய்ய தெரியும், வேலையை வாங்கவும் தெரியும். தட்டிக் கொடுத்தும் வேலை வாங்குவார்கள், தட்டி, தட்டியும் வேலை வாங்குவார்கள்.

கர்ணா

கர்ணா

எல்லா வேலையையும் செய்தும், இவர்களுக்கான பெயர் கிடைக்காமல் இருக்கும். முழு ப்ராஜெக்ட்டையும் தோள்களில் தாங்கி முடித்து கொடுத்திருப்பார்கள். ஆனால், பலன் வேறு யாருக்கோ கிடைத்திருக்கும். பெண்கள் இவருடன் அன்பாக பேசி காரியத்தை சாதித்துக் கொண்டு போவர்கள்.

நகுலன், சகாதேவன்

நகுலன், சகாதேவன்

தவறு சொல்ல முடியாத அளவு வேலை செய்பவர்கள். இவர்களை பெரும்பாலும் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களது வேலையை கட்சிதமாக செய்து முடித்து அவர்களுக்கான ஊதிய உயர்வு எவ்வளவு கிடைத்தாலும் வாங்கிக் கொண்டு, மீண்டும் தங்களது வேலைகளில் மூழ்கிவிடுவார்கள்.

பீஷ்மர்

பீஷ்மர்

நிறைய அனுபவம் வாய்ந்த சீனியர் அதிகரி. அனைவருக்கும் உதவும் குணம் கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் பாஸ்'க்கே கூட அறிவுரை கூறி நல்வழி கூறுவார்கள். ஏனோ இவர்களது முழு தகுதியை இவர்களே அறிந்திருக்க மாட்டார்கள்.

யுதிஷ்டிரர்

யுதிஷ்டிரர்

நல்ல நெறிமுறையான பையன் தான். அனைத்து மெயல்களுக்கும் பதிலளிப்பவர். தவறை ஒப்புக்கொள்பவர். நியாயத்தை நிலைநாட்ட துடிப்பவர்.

பீமா

பீமா

தொட்டதற்கெல்லாம் கோவம் கொள்ளும் ஆள். "ஏன்ப்பா.. அந்த வேலைய முடிச்சுட்டியா...?" என்று கேட்டால் கூட, "எங்க முடிக்கவிட்டீங்க, அதுக்குள்ள வேற வேலைய கொடுத்துட்டீகளே... எல்லாத்துக்கும் நேரம் வேணும்..." என அனைவரிடமும் கோவம் கொள்ளும் நபர்.

காந்தாரி

காந்தாரி

தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், ஆமாம் சாமி போடும் நபர்கள். இவர்கள் "ஆமாம்" போடுவதால், அந்த வேலை "முடியாது" என்று மற்றவர்களால் கூற முடியாமல் போய், வேலையே நாசமாகிவிடும்

திருதிராஷ்டிரர்

திருதிராஷ்டிரர்

ப்ரொஜெக்டில் நடக்கும் அனைத்து விஷயங்களும் தவறாக போகிறது என்று தெரிந்தும், செய், செய், என்று கூறுபவர். சார் இது முடியாது, வேற மாதிரி பண்ணலாம் என்று கூறினாலும் கேட்காமல், அதே முறையில் வேலையை செய்ய கூறுபவர்கள்.

துரோணாச்சாரியார்

துரோணாச்சாரியார்

இவர்கள் எந்த ப்ராஜெக்ட்டிலும் வேலை செய்ய மாட்டார்கள். ஆனால், வரும் ஜூனியர் எல்லாருக்கும் உதவி செய்வார்கள், கற்றுக் கொடுப்பார்கள். "தெய்வம் சார் நீங்க.." என்பது போல ஜூனியர்களுக்கு காட்சி தருவார்கள்.

அர்ஜுனன்

அர்ஜுனன்

அலுவலகத்தில் அனைவரும் புகழும் ஆளினால் அழகுராஜா, மிகவும் திறமைசாலி. எந்த வேலையை கொடுத்தலும் கட்சிதமாக செய்து முடிக்க கூடிய திறன் உடையவன். பெண்கள் மத்தியிலும் பிரபலமாக இருப்பார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Mahabharata Characters You Find In Every Office

Mahabharata Characters You Find In Every Office. Take a look.
Subscribe Newsletter