சகாயம் ஐ.ஏ.எஸ் பற்றி பலரும் அறியாத தகவல்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

நல்லவனுக்கு எப்போதும் நல்லது நடக்காது என்பார்கள். ஆனால், அவன் அவர்களை சுற்றி இருப்பவர்களை நல்லப்படியாக வைத்துக் கொள்ளவும், பாதுகாக்கவும் பாடுபடுவான். அப்படிப்பட்ட ஓர் நபர் தான் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள். தமிழகத்தில் மற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு ஓர் முன் மாதிரியாக திகழ்பவர் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள்.

ஆர்.ஜே. பாலாஜி பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள்!!

இவர் கண்டிராத இன்னல்கள் இல்லை. இவரது நேர்மை மற்றும் கண்ணியத்திற்கு நிறைய பணிமாற்றங்கள் பரிசாய் கொடுக்கப்பட்ட போதிலும் கூட. செல்லும் இடமெல்லாம் தன்னால் முடிந்த நல்லதையும், நல்ல திட்டங்களையும் செயல்படுத்தி, தீயவற்றை களையெடுக்கவுமே ஓயாது பணியாற்றினார் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பு

பிறப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் பெருஞ்சுனை எனும் கிராமத்தில் 1964-ம் ஆண்டு ஜூலை மாதம் 3-ம் தேதி பிறந்தார் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள்.

படிப்பு

படிப்பு

தான் பிறந்த பெருஞ்சுனை கிராமத்தில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பிறகு புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு, முதுகலை பட்டப்படிப்பை சென்னையில் முடித்தார். சட்டப்படிப்பை முடித்த பிறகு இந்திய ஆட்சி பணி அதிகாரியாகவும் தேர்வானார்.

பணியிடங்கள்

பணியிடங்கள்

தர்மபுரியில் பயிற்சி ஆட்சியர்,

சென்னை மாவட்ட வருவாய் அதிகாரி,

நாமக்கல் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர்,

கோ-ஆப்டெக்ஸ் நிறுவன இயக்குனர்,

அறிவியல் நகரத்தின் துணை தலைவர்,

கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி,

கோவை ஆயப்பிரிவு துணை ஆணையாளர்,

தொழில் வணிகத்துறை இணை இயக்குநர்,

மாநிலத் தேர்தல் ஆணையச் செயலர்,

புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர்,

இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி இயக்குநர் போன்ற பல பதவிகளை வகித்துள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள்.

பணி மாற்றங்கள்

பணி மாற்றங்கள்

இவரது நேர்மைக்கு கிடைத்த பரிசு, 24 வருட பணிக் காலத்தில் 24 முறை பணிமாற்றம் செய்யப்பட்டது.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அதிர வைத்தார்

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அதிர வைத்தார்

மதுரையில் 9 லட்ச ரூபாய் எல்.ஐ.சி வீட்டுக் கடனில் கட்டப்பட்ட ஓர் வீடு, வங்கியில் 7,712 ரூபாய் சேமிப்பு என பகிரங்கமாக தனது சொத்து பட்டியலை வெளியிட்டு பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வியக்க வைத்தார்.

பல திட்டங்கள் நிறைவேற்றினார்

பல திட்டங்கள் நிறைவேற்றினார்

நாமக்கல் ஆட்சியராக இருந்த போது, கிராமத்தில் தங்குவோம், உழவர் உணவகம், ஊன்றுகோல் திட்டம், தொடுவானம் போன்ற நிறைய திட்டங்களை செயல்படுத்தி வெற்றியும் கண்டவர் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள்.

சாதனைகள்

சாதனைகள்

பாலாறு மணல் கொள்ளை தடுப்பு, நஷ்டத்தில் இயங்கி வந்த கோ- ஆப்டெக்ஸ் நிறுவனத்தை லாபகரமாக மாற்றியது, நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்று திட்டம், கொல்லிமலை அடிவாரத்தில் தடுப்பணை திட்டம் என இவர் செய்த புரட்சிகளும், சாதனைகளும் நிறைய இருக்கின்றன.

கொள்கை முழக்கம்

கொள்கை முழக்கம்

எங்கு சென்றாலும், "லஞ்சம் தவிர்த்து, நெஞ்சை நிமிர்த்து" என்ற கொள்கை முழக்கத்தை உச்சரிக்க சகாயம் அவர்கள் மறந்ததே இல்லை. நேர்மையான அதிகாரி என்று தமிழக மக்களால் போற்றப்படும் நபர் சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள்.

சகாயம் செய்த சகாயம்

சகாயம் செய்த சகாயம்

சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களது நேர்மையான பணிகள், கண்ணியமான செயல்பாடுகள், மக்கள் நலப்பணி திட்டங்கள் போன்றவற்றை குறித்து "சகாயம் செய்த சகாயம்" என்ற புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளது.

மக்களின் எதிர்பார்ப்பு

மக்களின் எதிர்பார்ப்பு

தற்போதைய நிலையில், இவரை போன்ற கண்ணியமான, நேர்மையான ஆட்சி மற்றும் மேலாண்மை தெரிந்த ஒருவர் முதல்வராக வர வேண்டும் என்ற எண்ணமும் தமிழக மக்கள் மத்தியில் ஓர் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lesser Known Facts About Sagayam IAS

Lesser Known Facts About Sagayam IAS