வெளிநாட்டு பெண்களை மணந்த பண்டையக் கால அரசர்கள் !!!

By: John
Subscribe to Boldsky

அரசர்கள் வெளிநாட்டு பெண்களை கரம்பிடித்தது என்பது ஒன்றும் பெரிய ஆச்சரியத்திற்குரிய விஷயம் அல்ல. அந்த காலத்தில் பெரும்பாலும் அண்டை நாட்டு அரசர்களிடம் இருந்து பெண் எடுப்பதும், கொடுப்பதும் சாதாரண வழக்கமாக தான் இருந்து வந்தது.

ஆரவல்லி, சூரவல்லி : ஆண்களை அடிமைப்படுத்தியிருந்த அல்லிராஜ்ஜியம் பற்றி உங்களுக்கு தெரியுமா!!

ஆயினும், நாம் நமது காவியத்தில் படித்த அரசர்களின் மனைவிகள், முக்கியமாக நம் நாட்டு பெண் என்று கருதப்பட்ட பெண் அரசிகள் கூட வெளிநாட்டில் இருந்து திருமணம் செய்து வந்தவர் என்பது கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருக்கின்றது.

ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் முடிந்தது பற்றி நீங்கள் கேட்டிராத கதை!

மன்னர்கள் பல நாட்டுப் பெண்களை மணப்பது தொன்று தொட்டு நடந்துவரும் பழக்கம் தான் என்பது எல்லாரும் அறிந்தது தான்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விஜயன்

விஜயன்

விஜயன் என்ற மன்னன் இந்தியாவின் ஒரிஸ்ஸா/ வங்காளப் பகுதிலிருந்து நாடு கடத்தப் பட்டு இலங்கையை அடைந்தவுடன் அவனுக்கும் அவனுடைய மந்திரிகளுக்கும் திருமணம் முடிக்க பெண்கள் கிடைக்கவில்லை. அப்போது, பாண்டிய நாட்டுப் பெண்கள்தான் அங்கு சென்று அவர்களை திருமணம் செய்துக் கொண்டனர் என்று இலங்கையின் வரலாற்றைக் கூறும் "மஹாவம்சம்" என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. இது நடந்தது கி.மு ஐந்தாம் நூற்றாண்டு என்று வரலாற்று நூல்களின் கூற்றுகள் கூறுகின்றன.

திருதராஷ்ட்ரன்

திருதராஷ்ட்ரன்

காந்தார (ஆப்கனிஸ்தான்) நாட்டுப் பெண்ணான காந்தாரியை தான் திருதராஷ்ட்ரன் திருமணம் செய்துக் கொண்டார்.

தசரதன்

தசரதன்

கேகய (ஆப்கனிஸ்தான் /ஈரான்) நாட்டுப் பெண்ணான கைகேயியை தசரதன் திருமணம் செய்துக் கொண்டார்.

மௌர்ய சந்திர குப்தன்

மௌர்ய சந்திர குப்தன்

செல்யூகஸ் நிகடார் என்ற கிரேக்க மன்னனின் மகளை மௌர்ய சந்திர குப்தன் திருமணம் செய்துக் கொண்டார் என்று வரலாற்று கூற்றுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

அர்ஜுனன்

அர்ஜுனன்

மஹாபாரதத்தின் மாவீரன், வில் வித்தையில் தனித்திறமை பெற்ற அர்ஜுனன் மணக்காத இனமே இல்லை என்று கூறப்படுகிறது. அர்ஜுனனுக்கு நான்கு மனைவிகள் திரௌபதி, உலூபி, சித்ராங்கதா மற்றும் சுபத்ரா. அர்ஜுனன் பாண்டிய குமாரியை மணந்ததாக நாட்டுபுறப் பாடலும் (அர்ஜுனனும் வந்துவிட்டார் அல்லி ராணி) உண்டு.

சோழ மன்னன் கிள்ளிவளவன்

சோழ மன்னன் கிள்ளிவளவன்

சோழ மன்னன் கிள்ளிவளவன், நாகநாட்டு மங்கை பீலிவளையை கரம் பிடித்தான் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அகத்திய மகரிஷி

அகத்திய மகரிஷி

2000 ஆண்டுகளுக்கு முன் அகத்திய மகரிஷி தென்கிழக்காசிய ( நாக நாட்டு) மங்கை லோபமுத்ராவை மணந்து அங்கு இந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார். இந்த சாம்ராஜ்யம் 1300 ஆண்டுகள் வரை நீடித்தது என்றும் கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kings Who Married Foreign Woman

Do you know about kings who married foreign women? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter