கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி-யின் வீரத்தை பறைசாற்றும் வரலாற்று தகவல்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் போன்ற பல புனைப்பெயர் கொண்டவர் வ.உ.சி ஐயா. இந்த பெயர்கள் யாவும் இவரது வீரத்திற்கு கிடைத்த பதக்கங்களாக தான் பார்க்க முடிகிறது. வெள்ளையனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், அவர்களை எதிர்த்து கப்பலோட்டி வர்த்தகம் செய்தவர் வ.உ.சி. ஐயா மட்டும் தான்.

கப்பலோட்டி உலகை வென்ற இராஜராஜ சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்!!!

பிறகு பல சூழ்ச்சிகளால் இவரது கப்பல் நிறுவனம் கவிழ்க்கப்பட்டது. விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் வ.உ.சி. இந்திய சுதந்திரத்திற்காக தனது சொத்து, உறவுகள், உடல்நலம் என அனைத்தையும் இழந்தவர் வ.உ.சி ஐயா.

ஆயிரம் அலெக்சாண்டருக்கு சமமான இராஜேந்திர சோழனைப் பற்றிய அரியக் குறிப்புகள்!!!

"என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்.." என குரல் எழுப்பியவரின் உயிர் சுதந்திர மண்ணை சுவாசிக்க முடியாது போனது பெரும் வருத்தம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மக்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்

மக்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்

சட்டத் தேர்வை 1894-ஆம் ஆண்டு எழுதித் தேர்ச்சி பெற்றார் வ.உ.சி. 1895ல் ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலைத் துவங்கினார். இவர் உரிமையியல் மற்றும் குற்றவியல் என இரு வகை வழக்குகளைக் கையாண்டாலும், குற்றவியல் வழக்குகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தார். வ.உ.சி. ஐயா வசதியற்ற மக்களுக்காக இலவசமாக வாதாடினார். இதில் பல வழக்குகளில் வெற்றியும் கண்டார்.

போலீஸின் கோபத்திற்கு ஆளான வ.உ.சி

போலீஸின் கோபத்திற்கு ஆளான வ.உ.சி

காவல் துறையினரால் தொடரப்படும் குற்றவியல் வழக்குகளில், தவறாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் பலர் வ.உ.சி. யினால் விடுதலை செய்யப்பட்டனர். அதனால் அவர் காவல் துறையினரின் கோபத்திற்கு ஆளானார்.

தூத்துக்குடிக்கு பணிமாற்றமான வ.உ.சி

தூத்துக்குடிக்கு பணிமாற்றமான வ.உ.சி

வ.உ.சி.யின் தந்தை இந்த சூழ்நிலையை விரும்பவில்லை. எங்கு சிதம்பரம் பிள்ளைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என, வ.உ.சி.யை 1900-ஆம் ஆண்டு தூத்துக்குடிக்குச் சென்று பணியாற்றும்படி அனுப்பி வைத்தார். வ.உ.சி. தூத்துக்குடியிலும் புகழ் பெற்ற வழக்கறிஞராக திகழ்ந்தார்.

பாரதியும், வ.உ.சியும் நட்புறவு

பாரதியும், வ.உ.சியும் நட்புறவு

வ.உ.சி. மதராசுக்கு (சென்னை) செல்லும் போதெல்லாம் பாரதியை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். பாரதியின் பாடல்கள் என்றால் சிதம்பரம் ஐயாவுக்கு மிகவும் பிடிக்கும். ரசித்து கேட்பார். வ.உ.சி.-யும், பாரதியும் அருகருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்களது தந்தையரும் நெருங்கிய நண்பர்கள். நாட்டுப்பற்றின் காரணமாக இவர்களது நட்பு மிகவும் வலிமையானது.

சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் தாக்கம்

சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் தாக்கம்

'சசி மகராஜ்' (சுவாமி ராமகிருஷ்ணானந்தரின்) என்னிடம், "சுதேச எண்ணங்கள் பல நன்மைகளைத் தரக் கூடியது, இது என் கருத்து" என்று கூறினார். அவர் சொன்னது ஒரு விதையாக என்னுள் விழுந்தது. என் உள்ளம் அதனைப் போற்றிக் காத்தது' என்று அந்த சந்திப்பைப் பற்றிக் கூறுகிறார் வ.உ.சி. இதை தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார் வ.உ.சி.

வ.உ.சி துவங்கிய தேசிய நிறுவனங்கள்

வ.உ.சி துவங்கிய தேசிய நிறுவனங்கள்

வ.உ.சி அவர்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு மிகுந்த தலைவராக திகழ்ந்தார். இவர், "சுதேசி பிரச்சார சபை", "தர்ம சங்க நெசவு சாலை", "தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்", "சுதேசி பண்டக சாலை", வேளாண் சங்கம்" போன்றவற்றை ஏற்படுத்தினார்.

சுதேசிய நாவாய் சங்கம்-1906

சுதேசிய நாவாய் சங்கம்-1906

வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்திய ஆட்சியை கைப்பற்றி, நமது நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்க துவங்கினர். ஆங்கிலேயர்களை எதிர்க்க முதலில் அவர்களது வணிகத்தை எதிர்க்க வேண்டும் என முடிவு செய்தார். எனவே, பல இன்னல்களுக்கு பிறகு சுதேசிய நாவாய் சங்கம் எனும் கப்பல் நிறுவனம் துவங்கி, கப்பல்கள் வாங்கி வணிகம் மற்றும் போக்குவரத்து செய்தார். இது, அன்றைய செய்தித்தாள்களில் பெரும் செய்தியாக வெளிவந்தது.

தூத்துக்குடி நூற்பாலை வேலை நிறுத்தம்

தூத்துக்குடி நூற்பாலை வேலை நிறுத்தம்

சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றியுடன் வ.உ.சி. திருப்தியடையவில்லை. அவர் மக்களிடையே விடுதலைப் போராட்ட உணர்வைத் தூண்ட நினைத்தார். தூத்துக்குடி நூற்பாலையில் இந்திய மக்கள் கூலிக்கு வேலை செய்பவர்கள் என்ற பெயரில் குறைவான சம்பளமும், நாள் முழுதும் வேலை, விடுமுறையின்றி கொடுமைகளுக்கு ஆளாகினர். இதை எதிர்த்து, வ.உ.சி மற்றும் சுப்ரமணிய சிவா ஆகியோரின் தலைமையில் 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் நாள் வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.

வேலை நிறுத்தம்: கோரிக்கைகள்

வேலை நிறுத்தம்: கோரிக்கைகள்

வ.உ.சி.யும் சுப்ரமணிய சிவாவும் வேலை நிறுத்தத்திற்குத் தலைமை தாங்கினர். 1. கூலி உயர்வு 2. வாரத்தில் ஒரு நாள் விடுமுறை 3. மற்ற விடுமுறை நாட்கள் என்ற மூன்று கோரிக்கைகளை முன் வைத்தனர். இவை கிடைக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என அறிவித்தனர்.

9 நாட்கள் கழித்து

9 நாட்கள் கழித்து

ஆங்கிலேயரின் எந்த மிரட்டலுக்கும் அடிப்பணியாது, வேலை நிறுத்த போராட்டத்தில் வெற்றிக் கண்டனர். நாடு முழுவதும் இந்த போராட்டம் பெரும் புயலாய் கிளம்ப, ஒன்பது நாட்கள் கழித்து கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, மக்கள் வேலைக்கு திரும்பினர்.

சிறைப்பிடிக்கப்பட்ட வ.உ.சி

சிறைப்பிடிக்கப்பட்ட வ.உ.சி

1908ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி வ.உ.சி சிறைப்பிடிக்கப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இங்கு தான் அவர் செக்கிழுத்தார். பல கொடுமைகளுக்கு ஆளானார்.

வ.உ.சி விடுதலை

வ.உ.சி விடுதலை

1912-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள் வ.உ.சி. விடுதலை அடைந்தார். இவர் வெளிவந்த போது, நாட்டின் நிலையே மாறியிருந்தது. சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்றவை பின்பற்றப்பட்டு வந்தது. இதில், வ.உ.சி-க்கு உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

விடுதலைக்கு பின்னர் வ.உ.சி

விடுதலைக்கு பின்னர் வ.உ.சி

விடுதலைக்கு பின்னர் வ.உ.சி அவர்கள் கோயம்புத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் வசித்துவந்துள்ளார்.

இறப்பு

இறப்பு

1936ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் நாள் வ.உ.சி ஐயா அவர்கள் மரணமடைந்தார்.

நினைவு சின்னங்கள்

நினைவு சின்னங்கள்

"கப்பலோட்டிய தமிழன்" திரைப்படம் - வாழ்க்கை வரலாறு. வ.உ.சி.-யின் அஞ்சல் தலை இவரது நூற்றாண்டு விழாவில் இந்திரா காந்தியால் வெளியிடப்பட்டது. இவர் சிறையில் இழுத்த செக்கு இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவரது நினைவாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு இவரது பெயரே சூட்டப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Historic Facts About V.O.Chidambaram Pillai

Some Historic Facts About V.O.Chidambaram Pillai, Take a look.
Story first published: Tuesday, August 11, 2015, 11:15 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter