Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
தூக்கி வாரிப் போடும் மலேசியா ஏர்லைன் விமானம் MH-370 பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!
3 மாதங்களுக்கு முன்பு மலேசியா ஏர்லைன் விமானம் MH-370 மாயமானது. நிலையின்மை என்ற விந்தையான போர்வைக்குள் மூடியிருக்கும் மர்மங்களினால், பதில்களை விட கேள்விகள் தான் குவிந்து கொண்டே செல்கிறது. கடுந்துயரத்தில் இருந்த பயணிகளின் உறவினர்கள் தேடும் முயற்சியை கைவிட்ட போதிலும், பல விதமான சூழ்ச்சி கோட்பாடுகள் எழுந்துள்ளது.
மாயமான மலேசியா விமானத்தை பற்றிய பல கோட்பாடுகள் ஒதுக்கப்பட வேண்டியவை என்றாலும், நாங்கள் கூறப்போகும் இந்த குறிப்பிட்ட கோட்பாடு சரியானதாக தெரிகிறது. MH-370 விமானத்தை சுற்றியுள்ள மர்மங்களைப் பற்றி தான் இந்த கட்டுரை கூறப்போகிறது. தற்போதுள்ள விமான தொழில்நுட்பம், அதன் ஆற்றல் மற்றும் சந்தேகம் படும்படியான எதையும் மோப்பம் பிடிக்கும் திறன் போன்றவைக்கு மத்தியில், மலேசியா விமான ஏர்லைன் MH-370 மீது எண்ணிலடங்கா கேள்விகள் எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான வேறு: மலேசியா விமானம் போன்றே மாயமான சில விமானங்கள்!!!
தேடுதல் பணியில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்பது நீங்கள் அனைவரும் அறிந்த செய்தியே. இப்படிப்பட்ட நேரத்தில் பணியில் ஈடுபட்டவர்களின் திறமையைப் பற்றி ஆலோசிப்பதில் எந்த வித அவசியமும் இல்லை. ஆனால் இந்த விமானத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான சூழ்ச்சி கோட்பாடு எழுந்துள்ளது.
டிகோ கார்ஸியா தீவில் இந்த MH-370 விமானம் தரையிறங்கியுள்ளது என அமெரிக்க கூறியுள்ள விஷயத்தை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஏன்? சில பெரும் புள்ளிகளை நீக்க வேண்டியே அமெரிக்கா இதை செய்துள்ளது என்றால், அதை ஏன் விமானம் கிளம்புவதற்கு முன்னாலேயே அவர்கள் செய்திருக்கக்கூடாது? அதனால் இந்த கோட்பாடு பொருந்தவில்லை. இப்போது விமானத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாமா...!
இதுப்போன்று வேறு: உலகின் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகள்....

டிகோ கார்ஸியா எல்லை
கோலாலம்பூரை விட்டு கிளம்பிய நேரத்தில் இருந்து, MH-370 விமானத்தால் 3000 மைல் தூரம் பறந்திருக்க முடியும். அப்படிப் பார்த்தால் டிகோ கார்ஸியா இந்த எல்லைக்குள்ளே வந்து விடும்.

மின்சார செயலாற்றல்
MH-370 விமானத்தின் அலை வாங்கிச் செலுத்தி பழுதாகி விட்டது. மின்சார செயலாற்றல் காரணமாக கூட இது நடந்திருக்கலாம்.

அலை வாங்கிச் செலுத்தி பழுது
ஆனால் ஒன்று. அலை வாங்கிச் செலுத்தி பழுதாகி விட்டதென்றால், விமானத்தால் நீண்ட தூரம் பறந்திருக்க முடியாது. காரணம் அலை வாங்கிச் செலுத்தி பாதிப்பு, மின்சார அமைப்பு செயலாற்றல் என சுட்டிக் காட்டியிருக்கும்.

தரையிறக்கம் இல்லை ஏன்?
இதோ ஒரு முரண் நகைப் பண்பு. அலை வாங்கிச் செலுத்தி பழுதான ஒரு மணிநேரத்திற்கு பிறகு, ராடார் கருவியில் விமானம் தென்பட்டுள்ளது. விமானத்தின் கொள்ளளவை கொண்டு பார்க்கையில், மின்சார செயலாற்றலுடன் விமானத்தால் அவ்வளவு தூரம் பறந்திருக்க முடியாது. பொதுவாக அப்படிப்பட்ட அமைப்பு செயலாற்றலின் போது, விமானத்தை அவசரமாக தரையிறக்கம் செய்து விடுவதே விமானியின் வழக்கம். ஆனால் அருகில் தரையிறக்கம் செய்ய வேண்டிய இடம் ஒரு மணிநேரத்திற்கு குறைவான இடத்தில் இருந்த போதிலும் அதை ஏன் அவர் செய்யவில்லை?

விமானியின் சதியோ?
அப்படியானால் அலை வாங்கிச் செலுத்தியை வேண்டுமென்றே விமானி அணைத்திருக்க வேண்டும். அப்படி செய்து விமானத்தை வேண்டுமென்றே நொறுங்க வைக்க நினைத்திருந்தால், விமானத்தின் பல பகுதிகள் தண்ணீரில் மிதந்திருக்க வேண்டும்.

ராணுவ ஏவுகணையின் தாக்கமோ?
ஒரு வேளை, ராணுவ ஏவுகணையால் அது தாக்கப்பட்டிருந்தால், கண்டிப்பாக அது ராடாரில் பதியப்பட்டிருக்கும்.

கருப்பு பெட்டி எப்போதும் அழியாதே!
ஒவ்வொரு விமானத்திலும் 30 நாட்களுக்கு சிக்னல் அனுப்பும் கருப்பு பெட்டி இருக்கும். இந்த கருப்பு பெட்டி வெடி விபத்திலும் அழியாது. அதனால் அதன் சரியான இடத்தை அது வெளிக்காட்டியிருக்கும்.

எதற்காக கடத்தல்?
அடுத்து, டிகோ கார்ஸியா என்ற தீவிற்கு அமெரிக்க விமானத்தை கடத்தியுள்ளது என்ற சர்ச்சை எழுந்துள்ளது. அப்படியானால் அப்பாவிகளை அவர்கள் ஏன் கடத்த வேண்டும்?
இன்னமும் என்ன நடந்தது என்பது சரியாக தெரியவில்லை. இருட்டில் இருக்கும் நாம் வெளிச்சத்தை அடைய இன்னும் எத்தனை நாள் ஆகுமோ?



Click it and Unblock the Notifications
