For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ள சக்தி வாய்ந்த 6 நில நடுக்கங்கள்!

By Ashok CR
|

பூமியின் புவியோட்டிற்குரிய தட்டுக்களின் பெரியளவு அசைவின் விளைவே பூகம்பங்கள் உருவாக காரணமாக விளங்குகிறது. வரலாற்றை பார்த்தால், இந்த உலகம் பல நில நடுக்கங்களை சந்தித்திருப்பதை நாம் அறியலாம். அதில் சில நில நடுக்கங்கள் கற்பனை செய்ய முடியாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி பேரழிவை ஏற்படுத்தியுள்ள பூகம்பங்களை பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம். நாம் பார்க்கப் போகிற பூகம்பங்கள் உலகத்தில் நடந்துள்ள சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் ஆகும். இவை ஒவ்வொன்றும் ரிக்டர் அளவில் பெரிய எண்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகத்தில் அப்படி நடந்தேறியுள்ள 6 சக்தி வாய்ந்த பூகம்பங்களை பற்றி இப்போது பார்க்கலாமா? இன்றைய தேதிக்கு நாம் பார்க்க போகிற பூகம்பங்கள் தான் பேரழிவை ஏற்படுத்தியுள்ளவைகள். மிக அதிக ஆபத்தை ஏற்படுத்திய வரிசையில் பூகம்பங்களின் பட்டியல் இதோ:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜனவரி 13 , 1906: எக்குவடோர் கடற்கரை

ஜனவரி 13 , 1906: எக்குவடோர் கடற்கரை

நிலநடுக்க நடுவம் கொலம்பியா கடற்கரை மற்றும் எக்குவடோருக்கு நடுவே ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 8.8 புள்ளிகள் பதிவாகியுள்ள இந்த மிகப்பெரிய பூகம்பத்தால் சுனாமி வந்தது. இதனால் சான் பிரான்சிஸ்கோ முதல் மத்திய அமெரிக்கா வரையிலான கடலோரப் பகுதியில் வாழ்ந்த 1500 பேர்கள் மரணமடைந்தனர். பூகம்பம் ஏற்பட்ட பிறகு ஹவாய்க்கு மேற்கு பகுதியில் உள்ள நதிகள் சுமார் 12 மணி நேரத்திற்கு மேல் வற்றி போனது. உலகத்தில் உள்ள சக்தி வாய்ந்த பூகம்பங்களில் இதுவும் ஒன்றாகும்.

பிப்ரவர் 27, 2010: சைல்

பிப்ரவர் 27, 2010: சைல்

சைல்லில் உள்ள பியோ பியோ பகுதியில் பூகம்பம் ஏற்பட்டது. ரிகடர் அளவில் 8.8 புள்ளிகளாக பதிவானது இந்த பூகம்பம். 600 பேர்களின் உயிரை குடித்த இந்த பூகம்பம் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. இந்த பூகம்பத்தினால் கிட்டத்த 800,000 பேர்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். இந்த பூகம்பத்தினால் நிவாரண செலவுக்காக அரசாங்கத்திற்கு மிகப்பெரிய தொகை தேவைப்பட்டது. அதனால் அரசாங்க கஜானாவில் இருந்து 30 பில்லியன் டாலர்கள் தேவைப்பட்டது.

ஜூலை 27, 1976: தங்ஷன், சீனா

ஜூலை 27, 1976: தங்ஷன், சீனா

பல உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளின் அடிப்படையில், கற்பனை செய்ய முடியாத, விவரிக்க முடியாத பூகம்பமாக மாறியது சீனாவில் உள்ள தங்ஷன் பகுதியில் ஏற்பட்ட பூகம்பம். நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு கிட்டத்தட்ட 255,000 மக்கள் உயிரிழந்தனர். மேலும் 200,000 மக்கள் காயமடைந்தனர். இது போக நூறாயிரம் பேர்களுக்கு மேல் தங்களின் வீடுகளை இழந்தனர். இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 8.0 புள்ளிகளாக பதிவானது. சீனாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய பூகம்பம் இதுவாக தான் இருக்கும்.

மே 22, 1960: சைல்

மே 22, 1960: சைல்

ஆம், சைலில் பூகம்பங்கள் அதிகமாக ஏற்படும் அபாயம் உள்ளது. அதற்கு காரணம் அந்த நாடு அதிகமாக நகரும் புவியோட்டிற்குரிய தட்டுக்களின் மேலுள்ளது. 1960-ஆம் ஆண்டில் சைல் நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தால் கிட்டத்தட்ட 4600 பேர்கள் உயிரிழந்தனர். ரிக்டர் புள்ளிகளில் இந்த பூகம்பம் 9.6 புள்ளிகளாக பதிவானது. இந்த மிகப்பெரிய பூகம்பம் சுனாமியை உண்டாக்கியது. இதனால் ஒட்டு மொத்த ப்யூர்டோ சாவெட்ரா கடற்கரை பகுதி அழிந்தது. ரிக்டர் அளவில் பதிவானது படி பார்க்கையில், இது தான் உலகத்திலேயே மிக சக்தி வாய்ந்த பூகம்பமாக இருக்க வேண்டும்.

ஜனவரி 10, 2010: ஹைடி

ஜனவரி 10, 2010: ஹைடி

ஏழ்மையான ஹைடி மிகப்பெரிய இயற்கை பேரழிவை ஜனவரி 10-ல் சந்தித்தது. ரிக்டர் அளவில் 8.8 புள்ளிகளாக இந்த பூகம்பம் பதிவானது. இந்த பூகம்பத்தினால் காண முடியாத பேரழிவு ஏற்பட்டது. நூறாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தங்க இடமின்றி உண்ண உணவின்றி தவித்தனர். எப்படியும் 222,500 மக்கள் இறந்திருப்பார்கள் என கணக்கிடப்பட்டது. ஆனால், 2004-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுமத்திரன் பூகம்பம் . சுனாமியுடன் ஒப்பிடுகையில் இந்த இழப்பு பாதியே. 8 முறை அதிர்வை ஏற்படுத்திய இந்த பூகம்பத்தினால் 2 வாரத்திற்கு பின்னால் சுனாமி ஏற்பட்டது.

டிசம்பர் 26, 2004: சுமத்திரா மேற்கு கடற்கரை

டிசம்பர் 26, 2004: சுமத்திரா மேற்கு கடற்கரை

இந்த சமீபத்திய பூகம்பம் உலகத்தையே பேரழிவால் திருப்பி போட்டது. பலரையும் அதிர்ச்சியில் தள்ளியது. ரிக்டர் அளவில் இந்த பூகம்பம் 9.1 புள்ளிகளாக பதிவானது. இந்த பூகம்பம் 250,000 மக்களின் உயிரை பறித்தது. இந்த பூகம்பத்தின் தாக்கத்தை அதற்கு அருகே உள்ள 14 நாடுகள் உணர்ந்தது. இதனால் உருவான சுனாமி தான் உலகத்தில் இது வரை ஏற்பட்டுள்ள சுனாமிகளிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாகும். கிட்டத்தட்ட 350,000 பேர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டுள்ள பூகம்பத்தில் பல இறப்புகளை உண்டாகியவை இதுவாக தான் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The 6 Most Devastatingly Powerful Earthquakes Ever

Let us now look at the 6 most devastatingly powerful earthquakes in the world. These are, till date, the most powerful earthquakes ever.
Desktop Bottom Promotion