For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் சட்டத்திற்கு விரோதமாக நடைபெறும் மிகப்பெரிய 7 நடவடிக்கைகள்!

By Ashok CR
|

கடந்த 50-60 வருடங்களில் உலகத்தின் செயல்பாடுகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சாதாரண மனிதனின் தினசரி வாழ்க்கையை பாதிக்கும் அளவிலான சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகள் ஏராளமாக நடந்து கொண்டிருக்கிறது. இவ்வகையான சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகள் துன்பத்தை இழைக்கும்; ஆம் இவ்வகையான நடவடிக்கைகளின் விளைவு அதி பயங்கரமாக இருப்பதால், மனித இனத்தை அவைகள் வெகுவாக பாதிக்கிறது.

உலகத்திற்கு இந்தியா கற்றுக் கொடுத்த 10 விஷயங்கள்!!!

சட்டத்திற்கு புறம்பான இந்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. இவ்வகையான சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கைகளை அழிக்க சட்டங்கள் வலுவாக இருந்தாலும் கூட, அவைகள் அனைத்தும் சர்வதேச மற்றும் தேசிய சட்டத்தின் முன் மறைவாகவே இருக்கிறது. உலகத்தில் சட்டத்துக்கு விரோதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அப்படிப்பட்ட மிகப்பெரிய 7 நடவடிக்கைகள் பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

அதிர்ச்சியூட்டும் 10 வியப்பான சமயஞ்சார்ந்த சடங்குகள்!!!

உலகத்தில் சட்டத்திற்கு விரோதமாக விளங்கும் முதன்மையான நடவடிக்கைகள் அனைத்தும் தற்போதுள்ள சட்ட செயலாக்கத்தை ஏய்க்கிறது என்பதை சொல்லி தான் புரிய வேண்டும் என்பதில்லை. இப்படி சட்டத்திற்கு விரோதமாக நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும், பல நாடுகளிலும் கட்டற்ற முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவைகள் வளர்ந்து வரும் நாடுகளில் அதிகமாக இருந்தாலும் கூட, வளர்ச்சி அடைந்த நாடுகளில் முக்கியமான மூலாதாரமான தொடங்கியாக உள்ளது என பரவலாக நம்பப்படுகிறது. வெற்றிகரமான அரசாங்கங்களால் கூட இவ்வகையான சட்டத்திற்கு விரோதமான செயல்களை தடுக்க முடியவில்லை.

இந்தியர்களுக்கு ஏன் வெள்ளைத்தோலின் மீது மோகம் அதிகம் உள்ளது?

உலகத்தில் சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் முதன்மையான நடவடிக்கைகளை இரண்டு வகைகளின் கீழ் பிரிக்கலாம்: பொருளாதாரம் மற்றும் அரசியல். சரி, இப்போது சட்டத்திற்கு விரோதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அத்தகைய நடவடிக்கைகளைப் பற்றி பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கள்ளச் சந்தை அந்நிய செலாவணி

கள்ளச் சந்தை அந்நிய செலாவணி

உலக வங்கியியல் அமைப்பின் ரகசியத்தை நாம் அறிந்து கொண்டால், வங்கியியல் அமைப்பு ரகசியத்தின் ஆழத்தையும், தீவிரத்தையும் புரிந்து கொள்வதில் கஷ்டம் ஏற்படாது. குறிப்பிட்ட நாணயம் மூலம் சட்ட விரோதமானதாக சொத்துக்களை உரிமை கொள்ள அயல்நாட்டு நாணயப் பரிமாற்ற விகிதம் வீதங்களை வங்கிகளும், அரசாங்கமும் நிர்ணயிக்கிறது.

ஊழல்/லஞ்சம்

ஊழல்/லஞ்சம்

எதிர்ப்பார்த்தது தான். அரசியல்வாதிகளும், தனிப்பட்ட மனிதர்களும் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளை ஊழல் செய்வதில் உடந்தையாயிருக்கிறார்கள். அதிகாரம் மற்றும் பதவி துஷ்பிரயோகம் செய்வது மாறி மாறி நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஊழல் என்பது ஆரோக்கியமான சமுதாயத்தை மெதுவாக அரித்து விடும் மோசமான தீய செயலாகும். உலகத்தில் சட்டத்திற்கு விரோதமாக நடைபெறும் மிகப்பெரிய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.

ஆயுத வணிகம்

ஆயுத வணிகம்

போர்களும், வன்முறையும் ஒரு சமுதாயத்தின் மிகப்பெரிய கேடாகும். அடிப்படை அறிவை கொண்டு பார்க்கையில், தற்போதைய காலத்தில், போர் என்பது வீதக்குறைவு மற்றும் அழிவை உண்டாக்கும். ஆனால் மனித இனத்தை தக்க வைத்துக் கொள்ளவே போர் என நியாயப்படுத்தப்படுகிறது. சமுதாயத்தில் பல பிரிவுகளில், இப்படிப்பட்ட மனநிலையில், சட்டத்திற்கு விரோதமான ஆயுத வணிகமும் உலகத்தில் சட்டத்திற்கு விரோதமாக நடைபெறும் நடவடிக்கைகளில் ஒன்று என்று சொன்னால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

பூட்லெக்கிங்

பூட்லெக்கிங்

சாராயமும், புகையிலையும் உலகத்தில் உள்ள புகழ்பெற்ற போதை பொருட்களாகும். சட்டத்திற்கு விரோதமான விளம்பரப் பலகை, கள்ளக்கடத்தல் மற்றும் சாராயம் விற்றல் போன்றவைகளை பூட்லெக்கிங் என கூறுவார்கள். உலகத்தில் சட்டத்துக்கு விரோதமாக நடைபெறும் மிகப்பெரிய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றே. பொதுவாக சாராயத்தை உரிமம் இல்லாமல் தயாரித்து வருகின்றனர். அதனால் வரியும் கட்டப்படுவதில்லை. இவ்வகையான நடவடிக்கைகளால் உருவாகும் செல்வத்தின் பெறும் பகுதி நாட்டிலுள்ள மனச்சாட்சியற்ற அரசியல்வாதிகளையே சேர்கிறது.

சட்டத்திற்கு புறம்பான போதைப் பொருள் வணிகம்

சட்டத்திற்கு புறம்பான போதைப் பொருள் வணிகம்

சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் முதன்மையான நடவடிக்கைகளில் ஆயுத வணிகம் பெரியதா அல்லது போதை பொருள் விற்பனை பெரியதா என்ற கேள்வி எப்போதுமே உலாவி கொண்டிருக்கும். அதற்கு பதில் போதை பொருள் வணிகமாக தான் இருக்கும். அதற்கு காரணம் போதை பொருட்களின் வணிகத்தினால் தான் பல கூட்டமைப்புக்கள் ஆயுதங்களை சட்டத்திற்கு விரோதமாக வாங்குகின்றனர். சரி ஏன் அப்படி செய்கிறார்கள்? அதிகாரத்தையும் பலத்தையும் வளர்ப்பதற்கே. பலத்தை திரட்ட மிகவும் நிலையான வழியாக கருதப்படுவது, சட்டத்திற்கு விரோதமாக போதை பொருட்கள் வணிகத்தில் ஈடுபடுவதே. போதை பொருள் வணிகத்தில் இருந்து கிடைக்கும் பணத்தை பல்வேறு செயல்களுக்கு நிதியளிக்கின்றனர். அதில் அரசியல் முகாம்களும் அடக்கம்.

சூதாட்டம்

சூதாட்டம்

பல நாடுகளில் சூதாட்டம் சட்டப்படி நடைபெறுகிறது. ஆனால் அப்படி இல்லாத பல நாடுகளில், சட்டத்திற்கு விரோதமாக நடைபெறும் நடவடிக்கைளில் ஒன்றாக அது விளங்குகிறது. சட்டப்படி நடைபெறும் சர்வதேச சூதாட்ட துறையின் மதிப்பு என்னவென்று தெரியுமா - 400 பில்லியன் அமெரிக்க டாலர். இதுவே சட்டத்திற்கு விரோதமானது என்றால் அப்படியே இரண்டு மடங்காக இருக்கலாம்.

விபச்சாரமும்.. ஆள் கடத்தலும்..

விபச்சாரமும்.. ஆள் கடத்தலும்..

உலகத்தில் சட்டத்திற்கு விரோதமாக நடைபெறும் மிகப்பெரிய நடவடிக்கையாக விளங்குவது விபச்சாரமும் ஆட்கடத்தலும். தீமையின் உச்சத்தில் இருப்பதும் இவைகளே. பாலின வணிகத்தையும், விபச்சாரத்தையும் பல நாடுகளும் குற்றகரமான செயலாக பார்த்தாலும் கூட, விபச்சாரம் என்பது பயங்கரமான தீய செயலாக விளங்குகிறது. பல நாடுகளில் பாலின வணிகத்திற்கு எதிராக சட்டங்கள் இருந்தாலும் கூட, விபச்சாரம் கட்டற்ற முறையில் நடைபெறுவதால், இந்த சட்டங்களை பார்த்து பரிகாசம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. நைஜீரியா மற்றும் கென்யா போன்ற சில ஆப்ரிக்க நாடுகளில் விபச்சாரத்திற்கு மரண தண்டனை அளிக்கப்படும். சில அரபு நாடுகளிலும் கூட இதே தண்டனையே.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் படிக்க எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Revealed : The 7 Biggest Illegal Activities In The World

The top illegal activities in the world can broadly be classified under two categories: economic and political. Let us now look at the most illegal activities in the world.
Desktop Bottom Promotion