ஒரு "பட்டம்" கூட "விடாத" பாலிவுட் பிரபலங்கள்!

By: Babu
Subscribe to Boldsky

இன்றைய காலத்தில் மதிப்பு, மரியாதை கிடைக்க வேண்டுமானால் படிப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் கல்லூரி சென்று ஒரு பட்டம் மட்டும் வாங்கினால் போதாது, இரண்டு பட்டங்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் சில நடிகர், நடிகைகள் கல்லூரி சென்று பட்டம் பெறாமலேயே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளனர்.

இங்கு அப்படி கல்லூரி சென்று ஒரு பட்டம் கூட பெறாத சில பாலிவுட் பிரபலங்களைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கரீனா கபூர்

கரீனா கபூர்

பாலிவுட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் கரீனா கபூர் ஒரு பட்டம் கூட வாங்கியதில்லை.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

முன்னாள் உலக அழகியாகவும், தற்போது பாலிவுட்டை கலக்கிக் கொண்டிருப்பவருமான பிரியங்கா சோப்ரா கல்லூரியில் சேர்ந்த உடனேயே, அவருக்கு மாடலிங் மீது ஆர்வம் ஏற்பட்டதால், கல்லூரியை விட்டு தனது வாழ்க்கையை மாடலிங், சினிமா என்று கொண்டு வந்துவிட்டார்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

உலக அழகி என்றால் அது ஐஸ்வர்யா ராய் தான் என்று பல வருடங்களாக மக்களின் மனதில் பதிந்த ஐஸ்வர்யா ராயும் ஒரு பட்டம் கூட வாங்கியதில்லை.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும் கல்லூரி சென்று படித்து ஒரு பட்டம் கூட வாங்கியதில்லை.

அமீர் கான்

அமீர் கான்

இன்றும் பல மக்களின் மனதில் மிகவும் நல்ல மனிதராகக் கருதப்படும் அமீர் கான், தனது 16 ஆவது வயதிலேயே ஒரு ஊமை படத்தில் நடித்தார். பின் நடிப்பில் ஆர்வம் வந்தால், அவர் படிப்பை நிறுத்திவிட்டார்.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

தேசிய அளவு பூப்பந்து வீராங்கனையும், நடிகையுமான தீபிகா படுகோனே கூட ஒரு பட்டம் கூட வாங்கியதில்லை.

அலியா பட்

அலியா பட்

தற்போது பாலிவுட்டில் டாப் நடிகைகளுள் ஒருவராக விளங்கும் அலியா பட், பள்ளிப் படிப்பை முடித்ததும், நடிப்பில் ஆர்வம் எழுந்ததால், அவர் அதனை கல்லூரி செல்வதை தவிர்த்து, நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

சல்மான் கான்

சல்மான் கான்

இன்றும் பேச்சுலராக வலம் வந்து கொண்டிருக்கும் சல்மான் கான், பள்ளிப் படிப்பை முடித்ததும், நடிப்பில் ஆர்வம் எழுந்ததால், பாலிவுட்டில் நுழையும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.

கரீஷ்மா கபூர்

கரீஷ்மா கபூர்

அக்காலத்தில் மிகப்பெரிய நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் கரீஷ்மா கபூர். இவர் ஆறாம் வகுப்பு முடித்த பின்னர், நடிப்பில் ஈடுபட ஆரம்பித்தார். மேலும் இவர் 16 வயதில் தனது முதல் படத்தை நடித்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bollywood Celebrities Who Never Graduated

Do you know many of Bollywood’s biggest celebrities don’t have a single degree to their name? Have a dekko at these Bollywood celebrities who never graduated.
Subscribe Newsletter