For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் உள்ள பார்களில் விற்கப்படும் விந்தையான உணவுகள்!!!

By Ashok CR
|

பப்புகளும், பார்களும் வெறுமனே பீர்களும் இதர மதுக்களை மட்டும் அளிப்பதில்லை. அதனுடன் சேர்ந்து பல வகையான உணவுகளையும் தான் வழங்கி வருகிறது. இவ்வகை உணவுகள் அங்கே மட்டுமே கிடைக்கும். பார்களில் கிடைக்கும் உணவுகள் சுவை மிகுந்ததாக விளங்கும். அதனால் அவைகள் புகழ் பெற்றும் உள்ளது. பார்களில் கிடைக்கும் உணவுகள் மற்றும் சைடு டிஷ்களை சுவைப்பதற்காகவே, குடிக்காத நபர்கள் கூட தங்களின் குடிக்கும் நண்பர்களுடன் அங்கே செல்வதுண்டு.

சுவாரஸ்யமான வேறு: அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!!

உலகத்தில் சுற்றியுள்ள பல பார்களும் தங்கள் விருந்தாளிகளுக்கு பல வகையான உணவுகளை அளித்து வருகின்றனர். இங்கே கிடைக்கும் பல உணவுகள் விந்தையானதாக இருக்கிறது. அப்படிப்பட்ட உணவு வகைகளை தான் உங்களிடம் நாங்கள் இப்போது கூறப்போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ட்ரங்கன் ஷ்ரிம்ப் (Drunken Shrimp)

ட்ரங்கன் ஷ்ரிம்ப் (Drunken Shrimp)

விந்தையான பார் உணவுகளில் புகழ் பெற்ற சீன உணவாக விளங்குகிறது இந்த ட்ரங்கன் இறால். இதில் இறாலை உயிருடன் மதுவில் ஊற வைத்து அதே அப்படியே உண்ணுவார்கள். இதே உணவை அமெரிக்காவிலும் உண்ணுகிறார்கள், ஆனால் பச்சையாக இல்லாமல் சமைத்து.

ராக்கி மவுண்டன் ஆய்ஸ்டர்ஸ் (Rocky Mountain Oysters)

ராக்கி மவுண்டன் ஆய்ஸ்டர்ஸ் (Rocky Mountain Oysters)

இந்த விந்தையான உணவின் பெயரை கேட்டு ஏமாந்து போகாதீர்கள். காரணம் இது ஆய்ஸ்டர்கள் கொண்டு செய்யக்கூடிய உணவுகள் அல்ல. காரணம், இது காளை கன்றின் விரைகளை உரித்து, தட்டையாக்கி, நன்றாக வறுத்து செய்யப்படும் உணவாகும். மதுவோடு சேர்த்து இதை உண்ணும் போது அது சுவைமிக்க உணவாக விளங்கும்.

ஹெட் சீஸ் (Head Cheese)

ஹெட் சீஸ் (Head Cheese)

இந்த விந்தையான பார் உணவை ஐரோப்பிய சந்தைகளில் காணலாம். இதற்கும் பாலாடை கட்டிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. செம்மறி ஆட்டின் தலையால் செய்யப்பட இந்த உணவை மென்மையாகும் வரை சமைப்பார்கள். குளிர்ந்த பின் அதனை சுலபமாக துண்டாக்கி மதுவோடு சேர்ந்து உண்ணலாம்.

கெவிஷ் (Ceviche)

கெவிஷ் (Ceviche)

சிட்ரஸ் ஜூஸில் முதல் நாள் இரவே பச்சை மீனை ஊற வைத்து செய்யப்படுவதே இந்த விந்தையான பார் உணவு. மெக்ஸிகன் கடற்கரை பகுதியில் கிடைக்கும் புகழ் பெற்ற உணவு இது. சமைப்பவரின் கைப்பக்குவத்தை பொறுத்து அதன் சுவை மாறுபடும். பொதுவாக இதற்கு பயன்படுத்தப்படுவது சங்கரா மீனாகும்.

கோழியின் பாதங்கள் (Chicken Feet)

கோழியின் பாதங்கள் (Chicken Feet)

அமெரிக்காவின் தெற்கு பகுதிகளில், இந்த விந்தையான பார் உணவு மிகவும் புகழ் பெற்றதாகும். இதில் கோழியின் பாதங்களை அப்படியே ஊற வைத்து சமைப்பார்கள். மென்மையான இந்த உணவை பீர் மற்றும் இதர உணவுகளோடு உண்ணுங்கள்.

சாக்லேட் பன்றிறைச்சி (Chocolate Pork)

சாக்லேட் பன்றிறைச்சி (Chocolate Pork)

இந்த விந்தையான பார் உணவிற்கும் சாக்லேட்டிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. பன்றியின் தலை, இதயம், ஈரல் மற்றும் இரத்தத்தை மெல்லவியல் செய்து தயாரிக்கப்படுகிறது இந்த உணவு. பீர் கோப்பையுடன் இந்த இரத்த உணவை உண்ணுவது உண்மையாகவே ஒரு விருந்து தான்.

கருவாடு (Dried Fish)

கருவாடு (Dried Fish)

இந்த விந்தையான பார் உணவு ஒரு புகழ் பெற்ற ஆசிய உணவு வகையாகும். பச்சை மீனில் நன்றாக உப்பை தடவி, அதனை காய வைத்து மதுவுடன் சேர்ந்து பருகப்படுகிறது. இதனுடன் கொஞ்சம் பிரெஞ்ச் வெங்காயத்தை சேர்த்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

தவளை வறுவல் (Frog Fry)

தவளை வறுவல் (Frog Fry)

இந்த விந்தையான பார் உணவு ஏசியாவில் புகழ் பெற்றதாகும்; முக்கியமாக கடற்கரை பகுதிகளில். இந்த சுவை மிக்க உணவு மழைக்காலத்தில் சர்வ சாதரணமாக கிடைக்கும். தவளைகளை பிடித்து, தோலுரித்து, மசாலாவில் ஊற வைத்து எண்ணெயில் பொறித்து செய்யப்படுவது இந்த உணவு.

சாராயத்துடன் மலைப்பாம்பு (Python With Local Arrack)

சாராயத்துடன் மலைப்பாம்பு (Python With Local Arrack)

மலைப்பாம்பு இறைச்சியை வறுத்து சாராயத்துடன் வழங்கப்படும். சாராயம் என்பது தென் இந்தியாவில் தயாரிக்கப்படும் நாட்டு மதுபானம். உள்ளூர்வாசிகள் இந்த விந்தையான பார் உணவை சாராயத்தோடு உண்ண விரும்புவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Weird Bar Food From Across The World

There are a lot of odd bar menus out there and here we are going to list a few odd bar foods from across the world. 
Desktop Bottom Promotion