For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  மகளை நண்பர்களின் உதவியோடு 18 மணிநேரம் கூட்டு பலாத்காரம் செய்த தந்தை!

  By Staff
  |

  நிர்பயாவுக்காக நாம் செய்த ஒரே காரியம் தேசத்தின் மகள் என்ற பெயர், இரண்டு மெழுகுவர்த்தி ஒரு நிமிட அஞ்சலி. சுமாராக ஒரு வருடத்திற்கு நாற்பது ஆயிரம் பெண்கள். ஒரு நாளுக்கு 110 பேர். ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு ஒரு பெண் இந்தியாவில் கயவர்கள், காமுகர்களால் தனது கற்பையும், உயிரையும் இழக்கிறாள்.

  ஆசிஃபா சமீப வாரங்களாக நாம் நீதி கேட்டு போராடி வரும் கூட்டு கற்பழிப்பு சம்பவத்தினால் பரிதாபமாக உயிரிழந்த பெண். ஆசிபாஃவுக்காக நாம் போராடிக் கொண்டிருக்கும் அதே தருணத்தில் நம் நாட்டில் அவள் வயதொத்த சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.

  அதாவது, நீங்க என்ன வேணும்னாலும் போராடி கிழிங்கடா... நாங்க ரேப் பண்ணிட்டே தான் இருப்போம்ன்னு... பயமே இல்லாம சிலர் தூக்கி புடிச்சிக்கிட்டு சுத்திட்டு இருக்காங்க.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  அடுத்தடுத்து...

  அடுத்தடுத்து...

  நாம் எல்லாருமே கோபப்படுகிறோம், முகநூலில் கருத்துக்கள் பகிர்கிறோம், போராட்டங்கள் நடத்துகிறோம், மத்திய அரசைக் கண்டிக்கிறோம். பிரதமரும் தனது பங்கிற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறார். இது போல நடக்காது என்று அவர் கூறும் முன் ஒரு பெண்ணும், கூறிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு பெண்ணும், கூறி முடித்த மறுகணமே வேறொரு பெண்ணும் நம் தேசத்தில் கற்பழிக்கப் பட்டுள்ளனர்.

  அப்பாவே மகளை..

  அப்பாவே மகளை..

  சமீபத்தில் கம்லாபூர் (லக்னோவில் இருந்து 70 கிமி தொலைவில் அமைந்துள்ளது) என்ற பகுதியில் ஐம்பது வயதுமிக்க ஒரு தந்தை, கணவனை விட்டு பிரிந்து வந்த தனது மகளை (35) நண்பர்களின் உதவியோடு கூட்டு பலாத்காரம் செய்திருக்கிறார். தொடர்ந்து 18 மணி நேரம் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட அந்த பெண் அந்த கூட்டத்திடம் இருந்து தப்பித்து தனது அம்மா வீட்டுக்கு சென்று நடந்தவற்றை கூறு அழ, போலீஸில் புகார் அளிக்கப்பட்டு அந்த மூவரில் ஒருவரை போலீஸ் கைது செய்துள்ளது.

  தப்பியோட்டம்!

  தப்பியோட்டம்!

  மீராஜ் எனும் போலி லைசன்ஸ் மூலம் மருத்துவராக நடித்து வந்த நபரை போலீஸார் கைது செய்துவிட்டனர். அந்த பெண்ணின் தந்தை மற்றும் சிங் எனும் நபர்கள் தப்பியோடி தலைமறைவாக உள்ளனர். அந்த பெண்ணுக்கு திருமணமாகி 16 வருடம் ஆகிறது. 14 வயதில் ஒரு மகன் இருக்கிறார். கணவனை பிரிந்து வந்த மகளுக்கு ஆதரவாய் இருக்க வேண்டிய அப்பாவே தவறாக நடந்துக் கொண்ட சம்பவமும் நமது நாட்டில் தான் நடந்துள்ளது.

  பஞ்சாயித்து!

  பஞ்சாயித்து!

  ஏற்கனவே அந்த பெண்ணின் அப்பா முறையற்ற உறவில் இருந்த காரணத்தால், அந்த ஊர் பஞ்சாயத்து குழுவினர் அவரை ஊரைவிட்டு தள்ளி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நம் நாட்டில் பெண்களுக்கு ரோட்டில் மட்டுமல்ல, வீட்டிலும் கூட நிம்மதியும், பாதுகாப்பும் இல்லை என்பதற்கு இந்த ஒரு வழக்கே சாட்சி.

  ரோட்டில் தான் இத்தனை கொடுமைகள் எனில், வீட்டில் சொந்த உறவுகளால் தவறான பார்வை, தீண்டலால் கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களும் இருக்கிறார்கள். இதை வெளியே சொன்னால் வெட்க கேடு என்று யாரும் கூறுவதில்லை.

  என்ன தான் செய்யலாம்?

  என்ன தான் செய்யலாம்?

  இதற்கு எல்லாம் தீர்வு தான் என்ன? என்ன செய்தால் கற்பழிப்பு வழக்குகள் குறைக்கப்படலாம். நம் நாடு ஜனநாயக நாடு, அமைதி பேணும் நாடு என்று கூறிக் கொண்டே, கொள்ளை, கொலை, ஊழல், கற்பழிப்பு என அனைத்து தவறுகளிலும் ஊறிக் கொண்டிருக்கிறது. தண்டனைகள் வலிமையாக அமைந்தால் தான் குற்றங்கள் குறையும் என்று நாம் பேசிக் கொண்டே இருக்கிறோமே தவிர அது செயல்பாட்டில் வந்த பாடில்லை.

  பெண் நீதிபதிகள்...

  பெண் நீதிபதிகள்...

  ஒருவேளை ஆண்கள் செய்யும் தவறுக்கு ஆண்களே நீதி / தண்டனை அளித்து வருவதால் தான் இதற்கு ஒரு தீர்வு கிடைப்பதில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. சில ஊர்களில் கற்பழிப்புக்கு ஆளான பெண்ணை நீதிமன்றத்தில் வைத்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பயந்தே பல கற்பழிப்பு வழக்குகள் நீதிமன்ற வாசல் ஏறுவதில்லை.

  இனிமேல், கற்பழிப்பு வழக்குகளை பெண் நீதிபதிகள் தான் நடத்த வேண்டும் என்ற முறையை கொண்டுவந்தால் என்ன? நிச்சயம் நாட்கள் கடத்தப்படாமல் பெண்மைக்கு மதிப்பளித்து உடனடியாக தீர்ப்பு கடுமையாக உடனக்குடன் கிடைக்க வாய்ப்புகள் அமையுமா?

  பழிக்குப்பழி!

  பழிக்குப்பழி!

  ஒருவன் ஆறேழு பேரை கொலை செய்தால், ஒருநொடி யோசிக்காமல் அவனுக்கு மரண தண்டனை விதிக்கிறோம். அதே போல,கற்பழித்த அந்த ஆணுக்கு ஆண்மை போக்க தண்டனை வழங்கினால் தான் என்ன? இதில் பெரிய தீங்கு யாரும் விளைவிக்கப் போவதில்லை.

  குறைந்தபட்சம் எத்தனை போதையில் இருந்தாலும், தன் ஆண்மை பறிபோகும், ஆண்குறி பறிபோகும் என்ற எண்ணம் இருந்தால் இனி ஒருவன் பெண்களை கற்பழிக்க முயற்சி செய்வானா?

  இரண்டு பேருக்கு...

  இரண்டு பேருக்கு...

  இரண்டு முறைக்கு மேல் நெருப்பை தொட்டு சூடுபட்ட குழந்தைக்கு மீண்டும் நெருப்பை தொடக் கூடாது என்று தெரியும். அதற்கு அந்த வலி அது தவறு தொடக் கூடாது என்பதை உணர்த்திவிடும். கற்பழிப்பு வழக்கில் பிடிபடும் இரண்டு பேருக்கு மட்டுமே ஆண்குறி நீக்கும் தண்டனை அளித்து தான் பாருங்களேன். அப்படியாவது இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பான வாழ்க்கைக்கு திரும்புவார்களா என்று பார்க்கலாம்.

  நீதியுடன் தண்டனையும் கொடுங்கள்...

  நீதியுடன் தண்டனையும் கொடுங்கள்...

  நாம் நிர்பயாவை மறந்துவிட்டோம், நாம் ஆசிபாவையும் மறந்துவிடுவோம், இனிமேலும் தேசத்தின் மகள்கள், இந்தியாவின் மகள்கள்என்ற பெயரில் எந்நாட்டு பெண்கள் பிணங்களாக விழுவதை காணாமல் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு பெண்ணும் இந்த தேசத்தின் பெண்கள் தான். தண்டனைகள் கடுமையாக்குங்கள்.

  நம் கவனத்தை திசைத்திருப்ப பல திட்டங்கள், பல வக்கிரமான வழக்குகள் இருக்கின்றன. நீதி ஆசிபாவுக்காவது கிடைக்கட்டும். அந்த நீதி இனி இந்தியாவின் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கட்டும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  So Rape is The Single Thing in India Does Not Have Any Barrier or Border!

  So Rape is The Single Thing in India Does Not Have Any Barrier or Border!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more