காதலன் முன்பே காரில் போலீஸால் கற்பழிக்கப்பட்ட பெண் - My Story #160

Subscribe to Boldsky

நான் கடந்து வந்த பாதையில் எந்த ஒரு பெண்ணும் பயணித்துவிட கூடாது என்பதே, தற்போது நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்துக் கொள்ளும் பெரிய வேண்டுகோள். இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கானல் நீராக கூட இல்லை என்பதற்கான மற்றுமொரு ஆதாரம் எனது வாழ்க்கை.

குடும்ப கௌரவம், மானம், மரியாதை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்காத, நீதிமன்றத்தில் விசாரிக்கப்படாத வழக்கு என்னுடையது. குற்றம் செய்தவன் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்க. அபலையாக நான் மட்டும் தினம், தினம் ஒட்டு மொத்த சமூகத்திலும் சிறைப்பட்டு என் வாழ்க்கையை கஷ்ட்டப்பட்டு நாள்தோறும் நகர்த்தி வருகிறேன்.

எனக்கு நேர்ந்த கொடுமைகள் தினம், தினம் கண்முன் வந்து எனது நிம்மதியை கெடுக்கிறது. சொந்த அப்பாவையும், நண்பர்களையும், காதலனையும் ஏறெடுத்துப் பார்க்க இயலாமல் தவித்து வருகிறேன்.

இது தான் நான் கடந்து வந்த பாதை....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் காதல்!

முதல் காதல்!

பிப்ரவரி 2011, அப்போது எனக்கு 14 வயது இருக்கும். அப்போது தான் என்னுள் முதல் காதல் துளிர்விட்டது. அதை காதல் என்று நம்பி, அவனை காதலனாக ஏற்று நான் நான்கரை வருடங்கள் பயணித்து வந்தேன்.

அது காதல் அல்ல, அவன் என் காதலனும் அல்ல... அவனுக்கு என் மீது இருப்பது வெறும் காம பார்வை மட்டுமே என்பது அந்த வயதில் என்னால் அறிந்துக் கொள்ளவும் இயலவில்லை. அதுகுறித்த அனுபவங்களோ, இப்படியான சூழல்களை எப்படி கையாள வேண்டும் என எனது பெற்றோரோ, தாத்தா, பாட்டியோ கற்றுத்தரவும் இல்லை.

அச்சம்!

அச்சம்!

காதல் என்ற படகில் ஏறிவிட்டேன். நடுவே நீரில் இறங்கினால் இறந்துவிடுவேன் என்பது போன்ற ஒரு அச்சம். நீந்த தெரிந்த எனக்கு கரைசேர முடியும் என்ற நம்பிக்கை அப்போது இல்லை. வெறும் அச்சத்தை மட்டுமே மனதில் முழுக்க, முழுக்க நிறைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தேன்.

இரை!

இரை!

அவனது காம பசிக்கு அவ்வப்போது நான் இரையானேன். என்னை உடல் ரீதியாகும், உள ரீதியாகவும் கடுமையாக காயப்படுத்தினான் அவன். என்னை உணர்ச்சி ரீதியாக பிளாக்மெயில் செய்தும் வந்தான்.

அந்த நான்கரை வருடத்தில் அவன் என்னை காதலித்ததாக ஒரு தருணத்தில் கூட நான் உணர்ந்ததே இல்லை. ஆயினும், அவனுடன் இருந்த உறவில் இருந்து வெளிவர இயலாமல் அச்சத்தால் சிறைப்பட்டு கிடந்தேன்.

அதற்கான காரணம், வலிமையாக, தைரியமாக முடிவெடுக்க தெரியாத பெண்ணாக நான் இருந்தது தான்.

ப்ரேக் அப்!

ப்ரேக் அப்!

ஐந்து ஆண்டுகளின் முடிவில், என் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு. 2016 அவனுடனான உறவில் இருந்து ப்ரேக் -அப் செய்துக் கொண்டேன்.

நான் ப்ரேக்-அப் செய்து வந்த பிறகு தான் தெரிந்துக் கொண்டேன்... இங்கே நான் வாழ்ந்து வரும் தெருக்களிலும், சாலைகளிலும் இது மிக சாதாரணமாக நடந்துவரும் செயல் என்று.

ஆனால், இருவரில் ஒருவராவது உண்மையாக நேசித்திருந்தால் தான் தெரியும், ப்ரேக்-அப் என்பது எவ்வளவு பெரிய வலி என்று. அதிலும், வாழ்க்கை துணையில் நாம் தேர்வு செய்தவன் மோசமானவன், நாம் தவறு செய்துவிட்டோம் என்ற எண்ணம் கரையான் போல நமது நெஞ்சை அரித்துக் கொண்டிருக்கும்.

இரண்டாம் வாய்ப்பு!

இரண்டாம் வாய்ப்பு!

மீண்டும் காதலா... என்ற கேள்வி என்னுள் இன்னும் அதிக அச்சத்தை கொண்டு வந்தது. வேண்டவே வேண்டாம்.... மீண்டும் அந்த கிணற்றில் விழுந்து தப்பி எழுந்து வர எனது உடலிலும், மனதிலும் துளியும் வலுவில்லை.

இது தான் பலரும் செய்யும் தவறு...

எனக்கு கிடைத்த இரண்டாம் வாய்ப்பு பொன்னானது. அதை நான் தவறியும், தவறவிடவில்லை.

அனைத்தும் கூறினேன்...

அனைத்தும் கூறினேன்...

14 வயதில் என்னுள் துளிர்விட்ட முதல் காதல் குறித்தும், அந்த காதலில் இருந்து நான் தப்பித்து வந்த விதம் குறித்தும் ஒன்று கூட பாக்கி வைக்காமல் அனைத்தும் கூறினேன்.

மிக அமைதியாக, நிதானமாக அனைத்தையும் கேட்டறிந்துக் கொண்டான்.

அதன் பிறகு, மெல்லிய குரலில்... ஆயினும் உன்னை நான் காதலிக்கிறேன்... உன்னை ஏற்றுக் கொள்கிறேன்... என்று அவன் கூறிய வார்த்தைகள்... நான் அதுவரை எனது வாழ்வில் அனுபவித்த காயங்களுக்கு எல்லாம் ஒற்றை மருந்தென தீர்வளித்தது.

வருத்தம்!

வருத்தம்!

உண்மையான காதல் என்றால் என்ன என்பதையும், என் வாழ்வில் ஒரு ஐந்து வருடத்தை நான் எப்படி வீணடித்தேன் என்பதையும், அவனது வருகைக்கு பிறகே உணர்ந்தேன்.

அவன் என்னை எப்போதும் ஸ்பெஷலாக உணர வைத்தான். என்னக்கு ஒரு பக்கபலமாகவும், உறுதுணையாகவும், என்றும் அரவணைத்து நல்வழிப்படுத்தும் நபராகவும் இருந்தான்.

நாங்கள் இருவரும் 2017ம் ஆண்டு காதலில் இணைந்தோம்.

ஒரே மாதத்தில்...

ஒரே மாதத்தில்...

எல்லாம் நன்றாக தான் செல்கிறது. இனிமேல் என் வாழ்வில் நல்லதோர் விடியல் பிறக்கும் என்று கருதியது தவறா...?

என் வாழ்வில் விடியலுக்கு வாய்ப்பே இல்லை என்பதை ஒரே மாதத்தில் உணர்ந்தேன்.

ஏப்ரல் 2017, அந்த இரவை வாழ்நாளில் என்னால் மறக்க இயலாது.

நானும் எனது காதலனும், எங்கள் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். காரின் நான் பெண், அவன் ஆண் என்பது அங்கே ரோந்து வந்த போலீஸுக்கு பெரும் குற்றமென பட்டது.

கற்பழிப்பு!

கற்பழிப்பு!

அந்த காவலரை மறக்க வேண்டும், அந்த இரவை எனது வாழ்வில் இருந்து அளிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு நாளும் நான் எண்ணும் விஷயம்.

ஆனால், அன்று இரவு நடந்த சம்பவம் அவற்றை மறக்க விடாமல் என் நிம்மதியை அழித்து வருகிறது.

நானும், எனது காதலனும் ஆள்நடமாட்டம் இல்லாத அந்த தெருவில் தனியாக காரில் இருந்தது தவறு என கூறினார்.

என் காதலன் முன்னரே, என்னை காரில் வைத்து பலாத்காரம் செய்தார்.

இதை கோர்ட், கேஸ் என்று எடுத்து சென்றால்... உங்கள் இருவர் மீது குற்றம் சுமத்தி சிறையில் அடிப்பேன் என்று மிரட்டினார்.

மீண்டும்...

மீண்டும்...

மீண்டும் அச்சம் என்னை தொற்றிக் கொண்டது. இந்த முறை எனது காதலனையும் தொற்றிக் கொண்டது.

எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

இம்முறை எங்கள் அச்சம் அந்த போலீஸின் மீதல்ல... இந்த சமூகத்தின் மீது.

நான் கற்பழிக்கப்பட்டவள் என்று அறிந்தால், நிச்சயம் எனது காதலன் வீட்டில் என்னை திருமணம் செய்துக் கொள்ள அனுமதிக்க மாட்டார்கள். மேலும், என் வீட்டில் எனது பெற்றோர் உயிருடன் இருக்க மாட்டார்கள்.

இந்த சமூகம் என்னை தகாத பார்வையில் காணும்.

இருபது வயதில்...

இருபது வயதில்...

இப்போது எனக்கு வயது இருபது.

இந்தியா போன்ற ஒரு சமூகத்தில் வாழும் பெண்ணுக்கு எந்தெந்த பிரச்சனை எல்லாம் வரக்கூடாதோ அதை எல்லாம் கடந்து வந்தவள் நான்.

இதைப்பற்றி வெளியேவும் கூற முடியாமல், அதுகுறித்து மறக்கவும் முடியாமல் தவித்து வருகிறேன்.

தினமும் எனது தந்தையின் கண்களை பார்த்து பேசும் தைரியம் கூட எனக்கில்லை.

எதற்காக...

எதற்காக...

குற்றம் செய்தவன் எல்லாம் தைரியமாக உலாவந்துக் கொண்டிருக்க. எந்த பாவமும் அறியாத நான் தினம், தினம் எனது சொந்த வீட்டிலும், சமூகத்திலும் ஒரு கைதியை பல வாழ்ந்து வருகிறேன்.

என்னால் இயல்பாக சிரிக்க கூட முடியவில்லை. கொஞ்சம் சிரிப்பு எட்டிப் பார்த்தாலும்... கற்பழிப்புக்கு ஆளான நீ எப்படி சிரிக்கிறாய் என என் மனமே என்னை கேள்வி கேட்டு கொல்கிறது.

அவன்!

அவன்!

என் வாழ்வில் இத்தனை மோசமான நிகழ்வுகள் நடந்த பிறகும்... இன்று நான் உயிருடன் இருக்கிறேன் என்றால்... அதற்கு ஒரே காரணம் எனது காதலன் தான். இன்றும் என்னை அதே நேசத்துடன் காணும் அவனது காதல்.

என்னை தினம், தினம் அரவணைத்து செல்லும் அவனது தோள்கள். அவனது நிழலில் தஞ்சம் அடைந்துக் கிடைக்கிறது எனது நிம்மதி.

இன்றும், என்றாவது அந்த இரவு குறித்து நினைவுகள் என்னுள் எழுந்தால்... என்னால் ஓரிரு நாட்களுக்கு இயல்பாக இருக்க முடியாது.

கேள்வி!

கேள்வி!

டிவி, செய்தி, சினிமா என எங்காவது கற்பழிப்பு என்ற வார்த்தை கேட்டுவிட்டால் போதும், என் உடல் நடுங்க ஆரம்பித்துவிடும். ஒரு காரிருள் என்னை சூழ்ந்துக் கொள்ளும்.

வரும் நாட்களிலாவது என்னால் இயல்பான வாழ்க்கையை வாழ முடியுமா என்ற ஒரே ஒரு கேள்வியுடன்... உயிர் வாழ்ந்து வருகிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    My Crime Was Sitting and Relaxing in My Car and I Punished with Rape!

    My Crime Was Sitting and Relaxing in My Car and I Punished with Rape!
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more