பலரும் அறியாத கருணாநிதியின் முதல் காதல் கதை #UnKnownStory #LoveFailure

Posted By: Staff
Subscribe to Boldsky

காதல் என்பது காற்றை போல, அதை சுவாசிக்காமல் இருக்க முடியாது. பெரும்பாலும் அனைவருக்கும் ஒரு காதல் கதை இருக்கும். ஆனால், அது அனைவருக்கும் வெற்றிகரமாக அமைகிறதா? என்பது தான் பெரிய கேள்வி.

முதல் காதலில் வெல்பவன், அந்த காதலை மற்றும் தான் வெற்றிப் பெறுகிறான். முதல் காதலில் தோற்றவன் தனது வாழ்க்கையிலேயே வெற்றிப் பெறுகிறான் என்று சிலர் கூறுவது உண்டு. முதல் காதல் என்பது தொப்புள்கொடி போல அறுத்து எறிந்தாலும் கூட, தொப்புள் மரணிக்கும் வரை மறையாது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர், முன்னோடி அரசியல் தலைவர் கருணாநிதி மூன்று திருமணம் செய்தவர் என்று பலருக்கும் தெரியும். ஆனால், அவரது முதல் காதலும் தோல்வி தான் என்பது உங்களுக்கு தெரியுமா? நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதி அவர்களே ஒரு திருமண விழாவில் தனது முதல் காதல் தோல்வி குறித்து பேசியிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் காதல்!

முதல் காதல்!

தனது இளமை வயதில் இருந்து தமிழோடும், தமிழ் பற்றோடும் வளர்ந்தவர் கருணாநிதி. பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் தனது இளம் வயதில் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணும் கருணாநிதியை விரும்பியுள்ளார்.

இவர் எழுத்துக்கும், பேச்சுக்குமே அப்பெண் இவரை காதலித்திருக்கலாம். எழுத்தாளுமையில் பெரும் திறமை கொண்டவர் அல்லவா கலைஞர்.

Image Source: sridharsubramaniam.org

ஆச்சாரமான!

ஆச்சாரமான!

ஆனால், கருணாநிதி விரும்பிய பெண் ஒரு ஆச்சாராமான குடும்பத்தை சேர்ந்தவர். அந்த பெண்ணின் பெற்றோர் கருணாநிதிக்கு திருமணம் செய்து வைக்க சம்மதித்தனர். ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை இருந்தது. அவர்களது பாரம்பரிய முறையில், சடங்கு, சம்பிரதாயத்துடன் தான் திருமணம் நடக்க வேண்டும் என்பதே அந்த கிடுக்குபிடி.

Image Source: Youtube

சுய மரியாதை!

சுய மரியாதை!

ஆனால், தி.க- வில் பெரியார் கொள்கைகளை பின்பற்றி வந்த கருணாநிதி சுய மரியாதை திருமணத்தை வழிமொழிபவர். அவர் எப்படி சடங்கு, சம்பிரதாயங்களை ஏற்பார். காதலித்தாலும் கூட, அவர்கள் கூறும் நிபந்தனைக்கு தலை அசைக்காமல். முடியாது என்றே விடாப்பிடியாக கூறிவிட்டார்.

Image Source: Youtube

முடியாது!

முடியாது!

கருணாநிதி வழிமொழியும் சுய மரியாதை திருமண முறையில் தங்கள் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று அப்பெண் வீட்டார் கூறிவிட்டனர். சுய மரியாதை திருமணம் என்பது, தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகளை எதுவும் பின்பற்றாமல், அய்யர் வந்து மந்திரம் ஓதாமல் எளிமையான முறையில் நடக்கும் திருமணம். இதை அவர்கள் ஏற்கவில்லை.

Image Source: Youtube

தோல்வி!

தோல்வி!

தனது கொள்கைகளா... அல்ல காதலா என்று வந்த போது. கொள்கை தான் முக்கியம் என முடிவெடுத்து. தனது காதலை உதறித்தள்ளிவிட்டு வந்தார் கருணாநிதி.

ஆண்கள் மனதில் சுகமான ரணமாக வாழ்நாள் முழுக்க தங்கியிருக்கும் அந்த முதல் காதல் தோல்வி கதை கலைஞர் கருணாநிதிக்கும் இருக்கிறது.

Image Source: Youtube

முதல் திருமணம்!

முதல் திருமணம்!

அதன் பிறகு, போராட்டம், அரசியல் என பொதுவாழ்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட கருணாநிதி பதமாவதி அம்மாள் என்பவரை முதலாவதாக திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு பிறந்த மகன் தான் மு.க. முத்து.

இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பாடலும் பாடியுள்ளார். பத்மாவதி அம்மாள் திருமனமான சில வருடங்களிலேயே மரணம் அடைந்துவிட்டார்.

Image Source: Youtube

இரண்டாம் திருமணம்!

இரண்டாம் திருமணம்!

பிறகு, கருணாநிதி இரண்டாவதாக தயாளு அம்மாளை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு மொத்தம் நான்கு குழந்தைகள். மு.க.அழகிரி., மு.க. ஸ்டாலின், மு.க. தமிழரசு மற்றும் செல்வி. இதில், மு.க. ஸ்டாலின் கருணாநிதியில் அரசியல் வாரிசாக செயற்பட்டு வருகிறார்.

மூன்றாம் திருமணம்!

மூன்றாம் திருமணம்!

கருணாநிதி மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்டவர் தான் ராஜாத்தி அம்மாள். இந்த ஜோடிக்கு மகளாக பிறந்தவர் தான் கனிமொழி. இவர் 2ஜி வழக்கில் முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்படுகிறார்.

கனிமொழி தற்போது இந்திய மாநிலை அவை உர்ப்பினராகவும் பதிவில் இருக்கிறார். அரசியல் மட்டுமின்றி கனிமொழிக்கு இலக்கிய துறையிலும் ஆர்வம் இருக்கிறது. இவரது மகன் ஆதித்யாவின் பெயரை தான் சன் நெட்வர்க் நிறுவனம் தனது குழந்தைகளுக்கான சேனலுக்கு பெயராக சூட்டியது.

ஒருவனுக்கு ஒருத்தி!

ஒருவனுக்கு ஒருத்தி!

இந்தியாவின் திருமண சட்டம் என்பது ஒருவனுக்கு ஒருத்தி என கூறுகிறது. அதாவது ஒரு ஆண், ஒரு பெண் ஒரு துணையுடன் தான் திருமண பந்தத்தில் வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்திகிறது. இல்லையேல், தனது துணையை விவாகரத்து செய்துவிட்டாலோ, அல்லது துணை இறந்துவிட்டாலோ மீண்டும் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்றும் இந்திய திருமணம் சட்டம் கூறுகிறது.

1955லேயே இந்தியாவின் திருமண சட்டம் இதை திட்டவட்டமாக கூறிவிட்டது.

மனைவி, துணைவி!

மனைவி, துணைவி!

கருணாநிதி தனது முதல் மனைவி பத்மாவதி இறந்த பிறகு தான், தயாளு அம்மாவை திருமணம் செய்துக் கொண்டார் என்றாலும். தயாளு அம்மாள் உயிருடன் இருக்கும் போதே, 60களில் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த போது ராஜாத்தி அம்மாள் மீது காதல் வசப்பட்டு திருமணம் செய்துக் கொண்டார்.

ஆகையால், திமுகவினர் மற்றும் இவரது குடும்பத்தார் தயாளு அம்மாவை மனைவி (Wife) என்றும், ராஜாத்தி அம்மாளை துணைவி (Companion) என்றும் அழைத்து வந்தார்கள் /வருகிறார்கள்.

இதை பலமுறை திமுகவின் எதிர்கட்சியான அதிமுக கடுமையாக சாடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lesser Known Love Story of M. Karunanidhi!

Even Former Tamilnadu Chief Minister and DMK Leader M. Karunanidhi Has a Nostalgia Love Story. And As usual his First Love also a Failure.