கற்பழிப்புக்கு ஆளாகும் அத்தருணம் எப்படி இருக்கும்? - கல்லூரி மாணவிகள் வெளியிட்ட புகைப்படத் தொகுப்பு!

Posted By:
Subscribe to Boldsky

IT HAPPENS எனும்  இந்த புகைப்படத் தொகுப்பானது கல்லூரி மாணவ, மாணவியரால் எடுக்கப்பட்ட ஒன்றாகும். சென்ற ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக தடகள மாணவர் ப்ராக் டர்னர், சுயநினைவில் இல்லாத 22 வயது இளம்பெண்ணை பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பாலியல் வன்கொடுமைகள் எத்தகைய சூழலில் எல்லாம் நடக்கின்றன என்பதனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.

பொதுவாகவே பாலியல் வன்கொடுமைக்கு காரணம் கவர்ச்சியும், ஆடையும் என்று பலர் கூறி நாம் கேட்டிருப்போம், படித்திருப்போம். ஆனால், பாலியல் வன்கொடுமைக்கு ஒரே முக்கிய காரணம் சுயக் கட்டுப்பாடு இல்லாத ஒன்று மட்டுமே.

தனி நபர் கட்டுப்பாட்டுடன் இருந்தால்., ஒரு பெண் நிர்வாணமாக வந்தாலுமே கூட அவளை தீண்ட மனம் வராது. மேலும், நமது ஊரில் மட்டுமே, கடத்தி கற்பழிக்கப்பட்டு நிர்வாண நிலையில் உதவி நாடிய பெண்ணுக்கு உதவாமல், அவ்வழி சென்றவன் இதுதான் சாக்கு என்று மீண்டும் அவளை கற்பழித்த சம்பவம் நடந்துள்ளது.

கற்பழிப்பு / பாலியல் வன்கொடுமை எத்தகைய சூழலில், எப்படியான நபருடன், எவ்வாறு எல்லாம் நடக்கிறது என்பதை இந்த புகைப்பட தொகுப்பு விவரிக்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திடீரென...

திடீரென...

"எனக்கு நினைவிருக்கிறது... அவன் என்னிடம் நான் கருத்தடை மாத்திரை வைத்துள்ளேனே என்று வினவினான். ஆனால், அந்த தருணத்தில் நான் தெளிவாகவோ, பதில் அளிக்கும் நிலையிலோ இல்லை. ஆனால், நான் அவனிடம் கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறும் முன்னரே, அவன் என்னுடன் உடலுறவில் ஈடுபட துவங்கிவிட்டான். நான் அப்படியான உறவில் ஈடுபட விரும்பவில்லை. அது இன்று வரையிலும் என் நினைவில் இருக்கிறது..."

எதிர்பாராத போது...

எதிர்பாராத போது...

"என்னிடம்... யாரோ உதவி நாடுவதாக கூறிக் கொண்டிருந்தனர்... திடீரென என்னை ஒரு அறையில் தள்ளி, சுவரை ஒட்டி அழுத்தி முத்தமிட்டனர், எனது கால் சட்டையை கழற்றினார்கள். என்னால் அந்த இரு பெண் தோழிகளையும் தள்ளிவிட முடிந்தது. அந்த அறையில் இருந்து அவர்களை தள்ளிவிட்டு வெளியேறினேன். பிறகு, என் தோழிகள் அப்படியொரு சம்பவம் நடந்ததாக எங்களுக்கு நினைவில்லை. நாங்கள் குடி போதையில் இருந்தோம் என்று கூறினார்கள்..."

விருப்பமற்று...

விருப்பமற்று...

"... ஆனால், அவள் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தாள். அவள் என் உடலில் பல காயங்கள் ஏற்படுத்தினாள். மறு நாள் காலை வரை எனக்கு இரத்தப் போக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அவள் என்னை கீழே தள்ளி, வலுக்கட்டாயப்படுத்தினாள். எனக்கு அதில் விருப்பமில்லை. ஆனால், அவள் மேற்கொண்ட ஆக்ஸ்ரோஷமான செய்கைகளும் எனக்கு பிடிக்கவில்லை."

யாருடனும்...

யாருடனும்...

"... அதுவொரு நடன விருந்து இரவு முழுக்க பார்ட்டி என்று எனக்கு நினைவிருக்கிறது. நான் முற்றிலும் சோர்வடைந்து போயிருந்தேன். நான் வீட்டுக்கு செல்ல முனைந்தேன். ஆனால், அவன் என்னை வழிமறித்து வலியுறுத்தினான். அப்படியான விருந்துக்கு சென்றால்.. இது கட்டாயம் நடக்க வேண்டும் என்பது அவனது விருப்பமாக இருந்தது. இன்னும் அவனது சூழ்ச்சியை கண்டு நான் வியக்கிறேன்...."

யாருக்கும்...

யாருக்கும்...

"..அவர்களை நம்பலாம் என்றே கருதினேன், ஆனால், ஒரு இரவு அவர்களுடன் உறங்கி எழும் போது, என் அறையில் இருந்த அவர்களில் ஒருவன் என்னை தவறான முறையில், தவறான இடத்தில் தீண்ட முயற்சித்துக் கொண்டிருந்தான். என்னால் இன்று வரையிலும், அவன் ஏன் அப்படி நடந்துக் கொண்டான் என்பது குறித்து தெளிவு பெற முடியவில்லை."

எங்கேயும்...

எங்கேயும்...

" அவன் எனக்கு ஏதோ ஒரு பானத்தை அளித்தான். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை என்னால் நினைவுப்படுத்த முடியவில்லை. உடலின் பல இடங்களில் அவன் கடித்திருந்தான். அவனது உந்துதலுக்கு ஏன்னா மறுப்பு தெரிவிக்க முடியாத நிலையில் இருந்தேன். அவனை என்னால் தள்ளவும் முடியவில்லை. அவன் என்னுடன் உடலுறவில் ஈடுபட்டான். மறுநாள் அவனருகில் உறங்கி எழுந்த போது, என்னால் எனக்கு நடந்த விஷயத்தை மற்றவரிடம் கூற முடியவில்லை."

எந்த நேரத்திலும்...

எந்த நேரத்திலும்...

"... அவன் தனது விரல்களை எனது பெண்ணுறுப்புக்குள் செலுத்தினான்... அந்த இடத்தில் டாட்டூ குத்த வேண்டும் எனில், அங்கே விரலை வைத்தால் தான் முடியும் என்று கூறினான். நான் குத்த சென்ற டாட்டூ பெண்மை குறியானது ஆகும். நான் ஃபெமினிஸம் விரும்பும் பெண். அதன் குறையாக இது அமையும் என்று விரும்பினேன். ஆனால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன்..."

காரணமே இன்றி...

காரணமே இன்றி...

"... அன்று இரவு நாங்கள் அனைவரும் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தோம். நாங்கள் எங்கள் சுய நினைவிலேயே இல்லை. நான் நினைவு திரும்பி எழும் போது, அவன் என் மீது படுத்திருந்தான். அவனை என்னால் தள்ள முடியவில்லை. நான் நன்கு அறிவேன், அளவுக்கு அதிகமாக குடித்தது எனது குற்றம் தான்."

அது நடந்தது...

அது நடந்தது...

"அவனுக்கு நான் யாரென்றே தெரியாது... ஆனால், அவன் என்னை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துள்ளான். மற்றும் அந்த தாக்கத்தால் தான் நாம் இன்று இதுபோன்ற சூழலில் நின்றுக் கொண்டிருக்கிறோம்." - ஸ்டான்போர்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

IT HAPPENS: A Powerful Photo Series on Rape Scene Will Shock You!

IT HAPPENS: A Powerful Photo Series on Rape Scene Will Shock You!