For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பெண் பிரபலங்களும் அவர்களது பயங்கரமான மரணங்களும்!

  By Staff
  |

  அவர்கள் துறை சார்ந்தோ, குணாதியங்கள் சார்ந்தோ, திறமை சார்ந்தோ... மக்களை வெகுவாக ஈர்த்த பெண்கள். ஆனால், அவர்களது மரணம் மட்டும் பயங்கரமானதாக அமைந்தன. பல வருடங்கள் கடந்த பிறகும் இன்றும் அவர்கள் மரணம் எதனால், எதற்காக நிகழ்ந்தது என்பதற்கான காரணம் சரியாக, தெளிவாக அறியப்படவில்லை.

  female icons who died mysterious or gruesome deaths

  Cover Image: reelreviews

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  அமீலியா எர்ஹார்ட்

  அமீலியா எர்ஹார்ட்

  அமீலியா எர்ஹார்ட்டின் வழக்கு மர்மமானது. அட்லாண்டிக் சமுத்திரம் மீது தனியாக பறந்து முதல் பெண் விமானி அமீலியா எர்ஹார்ட். பெண் விமானி என்பதை காட்டிலும், எழுத்தில் மிகுந்த ஆளுமை கொண்டவர் அமீலியா எர்ஹார்ட். இவர் பர்டு பல்கலைக்கழகத்தில் ஆலோசகராக இருந்தார். மற்றும் தேசிய பெண்கள் அமைப்பில் உறுப்பினராகவும் இடம்பெற்றிருந்தார். பல இளம்பெண்களுக்கு அமீலியா எர்ஹார்ட் ஒரு ஊக்க சக்தியாக திகழ்ந்தார். பெண்களின் சமவுரிமைக்காக உறுதுணையாக நின்றவர்களில் இவரும் ஒருவர்.

  Image Source: wikipedia

  மாயம்!

  மாயம்!

  1937ல் பசிபிக் சமுத்திரம் மீது ஒரு மிசனுக்காக பயணித்துக் கொண்டிருந்த அமீலியா எர்ஹார்ட் திடீரென மாயமானார். அவர் சென்ற விமானம் அல்லது அவரது உடல் பாகம் என எதுவுமே கண்டெடுக்கப்படவில்லை. இன்றுவரையிலும் அமீலியா எர்ஹார்ட் அந்த விபத்தில் / பயணத்தில் இறந்தாரா, காணாமல் போனாரா என்பது பெரும் கேள்விக் குறியாகவே இருக்கிறது.

  Image Source: wikipedia

  மர்லின் மன்றோ

  மர்லின் மன்றோ

  1950களின் ஸ்டைல் ஐகான், ஃபேஷன் திவா. இன்றும் பெண் சுதந்திரம் மற்றும் விடுதலைக்கான ஒரு கலாச்சார குறியீடாக இவர் திகழ்கிறார். அமெரிக்காவில் வாழ்ந்த மிகவும் விருப்பத்திற்கான பெண்மணியாக இன்றளவும் கருதப்படுகிறார் மர்லின் மன்றோ. ஒருபுறம் கவர்ச்சியால் ரசிகர்களை ஈர்த்தாலும், மறுபுறம் சுதந்திரம் சார்ந்த தனது பேச்சு, கருத்தால் பிரபலமானார் மர்லின் மன்றோ.

  மாபியா!

  மாபியா!

  ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்தான மர்லின் மன்றோவுக்கும் அன்றைய அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடிக்கும் அரசல்புரலசாக தொடர்பு இருந்தது என்றும் அறியப்பட்டது. அதிகாரப்பூர்வமாக வெளியான தகவல்கள் மர்லின் மன்றோ அதிகப்படியான தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்துக் கொண்டார் என்று கூறப்பட்டாலும். பெரும்பாலான மர்லின் மன்றோவின் ஆதரவாளர்கள் கென்னடிக்கு எதிரானவர்கள் மாபியாக்களை கொண்டு மர்லின் மன்றோவை கொலை செய்தனர் என்றே நம்புகிறார்கள்.

  டயானா!

  டயானா!

  வேல்ஸ் இளவரசி டயானா. இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து மக்கள் ஒருவரை மிகவும் நேசித்தனர் என்றால், அது டயானா தான். தனது அதிகாரத்தை, பதவியை மக்களுக்காக, சமூக சேவைக்காக, புற்றுநோய், எய்ட்ஸ் நோயாளிகளுக்காக, ஒரு மாற்றத்தை கொண்டு வர பயன்படுத்தி, இளவரசியாக இல்லாமல், மக்கள் அரசியாக இருந்தவர் டயானா. இவரது திருமணம் தோல்வியில் முடிந்தாலும், மக்களை இதயத்தை வென்றவர் டயானா.

  விபத்து!

  விபத்து!

  1997ல் பாரிஸில் நடந்த ஒரு கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார் டயானா. ஆனால், எதிர்பாராதவிதமாக நடந்ததென கூறப்படும் அந்த கார் விபத்து சுற்றி நிறைய மர்மங்கள் இருக்கின்றன. கார் விபத்து ஏற்பட்ட போது, சிறிய காயங்களுடன் தான் இருந்தார் டயானா என்று சம்பவ இடத்தில் இருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் நீண்ட காலம் கழித்து கூறி இருந்தார். மர்மமான மரணங்களில் டயானாவின் மரணமும் வரலாற்றில் இடம் பிடித்தது.

  எலிசபெத் ஷார்ட்!

  எலிசபெத் ஷார்ட்!

  தனது அழகால் ஒரு ஐகானிக் நடிகையாக திகழ்ந்தவர் எலிசபெத் ஷார்ட். இவரது மரணம் பயங்கரமானதாக அமைந்தது. மிகவும் கொடூரமான, இரக்கமற்ற கொலை.

  வளர்ந்து வந்த சூழ்நிலையில் வெறும் 22 வயதில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1947ல் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார் எலிசபெத் ஷார்ட்.

  Image Source: wikipedia

  நிர்வாண நிலையில்...

  நிர்வாண நிலையில்...

  இன்று வரையிலும் இவரது வழக்கு முடிவுக்கு வரவில்லை. ஊடகங்கள் இவரது கொலை வழக்கை பிளாக் டாக்லியா என்று குறிப்பிட்டன. எலிசபெத் ஷார்ட்ஸ்ன் உடல் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

  ஒரு திறந்த வெளி பார்க்கிங் ஏரியாவில் இரண்டு துண்டுகளாக கிடந்தன அவரது உடல். கொலை செய்தவன், இவரது வாயை இரண்டு புறமும் கிழித்திருந்தான்.

  Image Source: westernjournal

  இந்திரா காந்தி!

  இந்திரா காந்தி!

  இந்தியாவின் முதல் பெண் பிரதமர். தனது தைரியமான ஆளுமைக்கு பெரும் பெயரும் பாராட்டும் பெற்றவர். இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று போற்றப்பட்டவர். இந்தியாவில் எமர்ஜென்சி பீரியட் கொண்டு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியவர். இவரது பாதுகாவலர் இருவர் இவரை கடந்த 1984 அக்டோபர் மாதம் 31ம் நாள் சுட்டு கொன்றனர். முப்பது குண்டுகள் இந்திரா காந்தியின் உடலை துளைத்து சென்றன.

  பெனாசீர் பூட்டோ

  பெனாசீர் பூட்டோ

  இரண்டு முறை பாகிஸ்தான் பிரதமராக தேர்வானவர். பாகிஸ்தானில் ஜனநாயகம் வளர வேண்டும் என்று பாடுபட்டவர். 2007ம் ஆண்டு இவரை கொலை செய்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு கொலைவெறி தாக்குதல் நடந்தது. அந்த குண்டு வெடிப்பில் 180 பேர் இறந்தனர்.

  அடுத்தடுத்த தாக்குதல்...

  அடுத்தடுத்த தாக்குதல்...

  ராவல்பிண்டியில் பேசிவிட்டு திரும்பும் போது, இவரை முதலில் சுட்டனர். பிறகு தற்கொலை தாக்குதல் மூலமாக அந்த இடம் குண்டு வெடித்து சிதைக்கப்பட்டது. பெனாசீர் பூட்டோவுடன் சேர்ந்து மொத்தம் 24 பேர் உயிரிழந்தனர்.

  நடாலி வூட்

  நடாலி வூட்

  நடாலி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தனது பதின் வயதிலேயே ஒரு சென்ஷேனை உருவாக்கியவர் நடாலி. ஆனால், நடாலியின் மரணம் மர்மமானதாக அமைந்தது. பிரைன் ஸ்டார்ம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, இவர் ஒரு போட் எடுத்துக் கொண்டு வீக்கெண்டில் பயணம் மேற்கொண்டார்.நடாலியுடன் அவரது கணவர் மற்றும் ஆண் கேப்டன் ஒருவர் சென்றனர்.

  Image Source: Youtube

  பிரேத பரிசோதனை!

  பிரேத பரிசோதனை!

  இவர் நீரில் மூழ்கி இறந்தார் என்று கூறப்பட்டாலும், பிரேத பரிசோதனையில், நடாலியின் உடலில் ஆங்காங்கே காயங்களும், இடது கண்ணத்தில் சிராய்ப்புகளும் இருந்ததாக அறியப்பட்டது. முப்பது ஆண்டுகளுக்கும் மேல் நடந்த இந்த வழக்கில் இவரது மரணம் குறித்த தெளிவான பதில் கிடைக்காமல் போனது.

  Image Source: Youtube

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  female icons who died mysterious or gruesome deaths

  These women have inspired us, but died under mysterious circumstances. Their deaths have remained unexplained over the years.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more