தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பற்றி பலரும் அறியாத உண்மைகள்

Posted By: Staff
Subscribe to Boldsky

கலைஞர் கருணாநிதிக்கும், இவரது இரண்டாம் மனைவி தயாளு அம்மாவிற்கும் மூன்றாவது மகனாக பிறந்தவர் ஸ்டாலின். கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை தாக்கத்தால், இளம் வயதிலேயே அரசியல் களம் புகுந்தவர் ஸ்டாலின்.

கொஞ்சம், கொஞ்சமாக தனது இளைஞர் அணி அமைப்பை வளர்த்தார். 1980ல் மதுரையில் இருந்த ஜான்சிராணி பூங்காவில் துவக்கினார். பின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒவ்வொரு ஊர் மற்றும் ஒன்றியமாக, இளைஞர்களுக்கு தனி அமைப்பை உருவாக்கினார் ஸ்டாலின்.

பிறகு தான் கட்டி எழுப்பிய இளைஞரணி மாநில பொறுப்பு செயலாளராக பதவி வகித்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெயர் காரணம்!

பெயர் காரணம்!

தளபதி என்று அனைவராலும் அழைக்கப்படும் ஸ்டாலின் அவர்களது முழுப் பெயர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். கருணாநிதி அவர்கள் சோவியத் ஒன்றியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் அவர்களின் நினைவாக இவருக்கு ஸ்டாலின் என்ற பெயரை சூட்டினார்.

அய்யாதுரை!

அய்யாதுரை!

ஸ்டாலின் என்று பெயர் கொண்டிருந்தாலும், ஸ்டாலினுக்கு அய்யாதுரை என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற ஆசையும் வைத்திருந்தார் கருணாநிதி. அய்யா என்பது பெரியாரை குறிக்கும், துரை என்பது அண்ணாவின் அண்ணாதுரை எனும் பெயரின் பின்பகுதி. இந்த இரண்டையும் இணைத்து அய்யாதுரை என்றே பெயர் சூட்ட வேண்டும் என்று விரும்பினாராம் கருணாநிதி.

திடீர் அறிவிப்பு!

திடீர் அறிவிப்பு!

அதில், உங்களுக்கு மகன் பிறந்துள்ளான் என்று செய்தி இருந்தது. அதே மேடையில், தனக்கு மகன் பிறந்துள்ளான் என்றும், அவனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டுவதாகவும் அறிவித்திருக்கிறார் கருணாநிதி.

இப்படியாக அய்யாதுரை என்று பெயர் அமைய வேண்டிய ஸ்டாலின் அவர்களுக்கு. ஸ்டாலின் அவர்களின் நினைவேந்தல் கூட்டத்தில் ஸ்டாலின் என்ற பெயர் திடீரென சூட்டப்பட்டது. இந்த தகவலை ஸ்டாலின் அவர்களே ஒரு நிகழ்வில் பகிர்ந்துக் கொண்டார்.

14ல்!

14ல்!

ஸ்டாலின் தனது அரசியல் பயணத்தை 14 வயதிலேயே துவங்கிவிட்டார். இவர் 1967ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுகவிற்காக பிரச்சாரம் செய்தார் என்று குறிப்பிடப்படுகிறது.

இளைஞர் அமைப்பு!

இளைஞர் அமைப்பு!

பள்ளிப்படித்துக் கொண்டிருக்கும் போதே தனது நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் பகுதியில் கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை, ஒரு சலூன் துவங்கி, தனது அரசியல் வேலைகளை ஆரம்பித்துள்ளார் ஸ்டாலின்.

திரை வாழ்க்கை!

திரை வாழ்க்கை!

தன்னை அரசியலில் முழுமையாக உட்படுத்திக் கொள்வதற்கு முன்னர், ஸ்டாலின் திரை உலகில் பங்கெடுத்துக் கொண்டிருந்தார். இவர் 1978ல் நம்பிக்கை நட்சத்திரம் என்ற படத்தை தயாரித்திருந்தார். மேலும், 1988ம் ஆண்டு ஒரே இரத்தம் என்ற படத்தில் இவர் நடித்தும் இருந்தார்.

ஒரே இரத்தம்!

ஸ்டாலின் அவர்கள் நடிகராக அரிதாரம் பூசிக் கொண்ட ஒரே படம் "ஒரே இரத்தம்" இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியவர் கருணாநிதி அவர்கள். இந்த படத்தை ஸ்வர்ணம் என்பவர் இயக்கினார்.

இவருடன் சீதா, கார்த்திக், ராதாரவி, பாண்டியன் மற்றும் மாதுரி போன்றவர்கள் நடித்திருந்தனர்.

ஆற அமர!

ஒரே இரத்தம் திரைப்படம் மட்டுமின்றி, திமுகவின் ஒரு பிரச்சார காணொளி பாடலிலும் தோன்றி நடித்துள்ளார் ஸ்டாலின். அந்த பாடல் "ஆற அமர கொஞ்சம் யோசித்து பாரு., நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு.." என்று வரிகளுடன் துவங்குகிறது.

கைது!

கைது!

1975ம் ஆண்டு இந்திரா காந்தி அரசு எமர்ஜென்சி அமல்ப்படுத்திய போது அதை எதிர்த்து போராட்டம் நடத்தினார் ஸ்டாலின். இதற்காக உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஸ்டாலினையும், இவருடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அலைக்கழிப்பு!

அலைக்கழிப்பு!

ஸ்டாலினின் பெயரில் இருந்த சர்ச்சையால், இவருக்கு சிறு வயதில் சர்ச் பார்க் கான்வென்டில் சேர்க்கைக்கு விண்ணப்பித்த போது, இவரது பெயரை காரணம் காட்டி சேர்த்துக் கொள்ளவில்லை. பிறகு, கடைசியாக மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி பள்ளியில் இவருக்கு இடம் கிடைத்தது.

ஆர்வம்!

ஆர்வம்!

சிறு வயதில் இருந்தே ஸ்டாலினுக்கு கலை மற்றும் கலாச்சார போட்டிகளிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் ஆர்வம் அதிகமாம். குறிப்பாக கிரிக்கெட், இறகுபந்து மற்றும் சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் ஸ்டாலின் ஆர்வமாக விளையாடுவாராம்.

இல்லறம்!

இல்லறம்!

ஸ்டாலின் கைதானே அதே ஆண்டு தான் துர்கா அம்மையாரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். மகன் உதயநிதி ஸ்டாலின் (திரை துறையில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருக்கிறார்.) மற்றும் மகள் செந்தாமரை ஸ்டாலின்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts About Politician MK Stalin!

Here is a list of littile Known Facts about Tamilnadu Politician and Working President of DMK Party.