முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான் பற்றிய திகைக்க வைக்கும் 5 உண்மைகள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

இந்திய கிரிக்கெட் உலகில் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஜோடிகளில் ஒன்று முகமது ஷமி - ஜஹான் ஹாசின். 2012 ஐபிஎல் போட்டிகளின் போதுதான் இவர்கள் இடையே காதல் மலர்ந்தது. ஹாசின் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்ற போதிலும், இவர்களது காதலுக்கு அதுவொரு பெரிய தடையாக இருக்கவில்லை.

தொடருந்து ஓரிரு ஆண்டுகள் காதலித்து வந்த ஷமி - ஹாசின் ஜோடி, இரண்டாண்டுகளுக்கு பிறகு இல்லற பந்தத்தில் இணைந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பின்புலம்!

பின்புலம்!

26 வயதுமிக்க ஹாசின் ஜஹான் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவை சேர்ந்தவர். இவர் பிப்ரவரி 2, 1992ம் ஆண்டு பிறந்தவர். இஸ்லாம் மதத்தை சேர்ந்த இவர் மிகவும் ஆன்மீக பற்றுக் கொண்டவர் என்று அறியப்படுகிறது.

இவரது தந்தை முகமது ஹாசன் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இந்த தொழிலில் அவர் பிரபலமானவர் என்றும் அறியப்படுகிறது.

மாடலிங்!

மாடலிங்!

ஹாசின் ஜஹானுக்கு ஷமி முதல் கணவர் கிடையாது. இவரது முதலாவது திருமணம் தோல்வியில் முடிய, 2012 ஐபிஎல் போட்டிகளின் போது மாடலிங் செய்துக் கொண்டிருந்த ஹாசினும், ஷமியும் காதல் வயப்பட்டனர்.

பிறகு இரண்டு வருடங்கள் டேட்டிங் செய்து வந்த இவர்கள் 2014 ஜூன் 6 அன்று திருமணம் செய்துக் கொண்டனர்.

ஆசை!

ஆசை!

முகமது ஷமியின் மனைவியும், மாடலுமான ஹாசின் ஜஹானுக்கு பாலிவுட்டில் நடிகையாக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது என்று அறியப்படுகிறது. அதற்கான முயற்சிகளும் அவர் செய்துக் கொண்டிருந்தார் என்றும் அறியப்படுகிறது. ஆனால், திருமண பந்தத்திற்கு பிறகு அது நிறைவேறாமல் போய்விட்டது என்று கூறுகிறார்கள்.

குடும்பம்!

குடும்பம்!

ஷமி - ஹாசின் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். ஒரு மகன் மற்றும் ஒரு மகள். திருமணத்திற்கு பிறகு ஷமியின் குடும்பத்தார் ஹாசினை மாடலிங் துறையில் இருந்து வெளிவர கூறியுள்ளனர். முக்கியமாக ஷமியின் அப்பா தனது மருமகள் மாடலிங் செய்வதை விரும்பவில்லை. ஆகையால், ஹாசின் மாடலிங் துறையில் இருந்து வெளியேறினார்.

சர்ச்சைகள்!

சர்ச்சைகள்!

ஹாசின் இதற்கு முன்னரே பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளார். முதலில் ஒருமுறை தோனியின் மனைவி சாக்ஷி தனது நெருங்கிய தோழி என்று கூறினார். ஆனால், பின்னாளில் அது பொய் என தெரியவந்தது. பின்னர், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினி மனைவி ப்ரீத்தி மற்றும் ஹாசினுக்கு இடையே ஒரு கோல்ட் வார் மூண்டது என்றும் கூறுகிறார்கள்.

இது மட்டுமின்றி, இவர் காம்பிர் மனைவி நடாஷா மற்றும் ரஹானேவின் மனைவி ராதிகாவுடனும் கூட மனஸ்தாபம் கொண்டிருந்தார் என்று அறியப்படுகிறது.

வழக்கு!

வழக்கு!

இப்படி ஏற்கனவே பல சர்ச்சைகளை கிளப்பிய பிறகு தான் ஹாசின் சமீபத்தில் தனது கணவரனான முகமது ஷமி மீதும் சூதாட்டம் மற்றும் பெண்களுடன் தகாத உறவு வைத்திருக்கிறார் என ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வெளியிட்டு சர்ச்சை கிளப்பினார். இவர் பல பெண்களுடன் முறையற்ற உறவில் இருப்பதாகவும் ஹாசின் தெரிவித்திருந்தார்.

துன்புறுத்தல்!

துன்புறுத்தல்!

மேலும், முகமது ஷமி தன்னை அடித்து துன்புறுத்துகிறார், அவர் கொடூர குணம் படைத்தவர். திருமணமான நாள் முதலே அவரது தகாத உறவு குறித்து நான் அறிந்திருந்தேன் என்று நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஹாசின் குறிப்பிட்டுள்ளார்.

ஆதரவு!

ஆதரவு!

பலமுறை சமூக தளங்களில் தனது மனைவியின் ஆடை குறித்து விமர்சனங்கள் எழுந்த போதிலும், அவற்றுக்கு தக்க பதிலடி கொடுத்து தனது காதலை நிரூபித்தவர் ஷமி.

ஆனால், அவர் மீதே பகீர் குற்றச்சாட்டுகளை சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தினார் ஹாசின் ஜஹான்.

ஷமி!

ஷமி!

தன் மீது எத்தனை புகார் அளித்தாலும், மனைவி ஹாசினுடன் சேர்ந்தே வாழ விருப்பம் தெரிவித்திருக்கிறார் முகமது ஷமி.

மேலும், ஹாசின் குறிப்பிட்டிருந்த அந்த பாகிஸ்தான் மாடலும், இந்த புகாருக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, ஹாசின் குறிப்பிடும் படி தான் ஷமிக்கு பணம் ஏதும் தரவில்லை என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts about Mohammed Shami's Wife Hasin Jahan!

Facts about Mohammed Shami's Wife Hasin Jahan!