படுத்த படுக்கையில் இருந்தபடியே பள்ளி முதல்வராக பணியாற்றும் அசாதாரண பெண்

Written By: manimegalai
Subscribe to Boldsky

இது ஒரு அசாதாரண பெண்ணைப் பற்றிய கதைங்க. அசாதாரண பெண் என்றதும் பயந்திடாதீங்க. அசாதாரணமங்கிறது அவரோட உடலில் இல்லை செயலில் தான் இருக்கு.

uma sharma

ஆம். தன்னோட 64 வயதில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பின்னும் ஏழைகளுக்காக நடத்தப்படுகிற பள்ளியை, கட்டிலில் படுத்துக்கொண்டு நிர்வாகம் செய்யும் தன்னம்பிக்கை நிறைந்த பெண்மணியின் கதையைத் தான் நாம இப்போ பார்க்க போறோம். ஆமாங்க. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டும் படுக்கையிலிருந்தே பள்ளி முதல்வராக செயல்படும் உமா ஷர்மா

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

நம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். அது எல்லாமே நமக்கானதாக மட்டும் இருந்திருக்கும். அடுத்தவர்களுக்காக கடின உழைப்பு செய்வபர்களைப் பார்த்திருப்போம். ஆனாலும் கூட தன்னுடைய இயலாமையை கூட வெற்றிக்கான உந்துதலாக எடுத்துக்கொண்டு செயல்படுபவர்கள் தான் சமூகத்தில் தனித்து நிற்கிறார்கள்.

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

விடாமுயற்சி, கடின உழைப்பு, திட்டமிடல் போன்ற பல குணநலன்கள் கூறப்படலாம். ஆனால் அவை எல்லாமே 'தன்னம்பிக்கை' என்ற அடித்தளத்திலிருந்து தான் உருவாகி வெளி வருகின்றன என்கிறார்கள் அறிஞர்கள். தன்னம்பிக்கை என்பது ஓர் உந்து சக்தி வாழ்வதற்கும், வாழ்வில் உயர்வதற்கும், எல்லோருக்கும் தன்னம்பிக்கை இருக்கிறதா என்றால் இருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால் அது போதுமான அளவு இருக்கிறதா என்றால் இல்லை. நம்மை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும் தன்னம்பிக்கை நிரம்பப்பெற்றவர்கள் சோர்வு அடைவதில்லை.

துவண்டு போவதில்லை. தோல்வியானது நம்மைத் துவண்டு போகச் செய்கிறது என்றால், நம்முடைய தன்னம்பிக்கையின் அளவு குறைவாக இருக்கிறது என்று பொருள். தாழ்வு மனப்பான்மை, தம்முடைய முயற்சியின் மீது நம்பிக்கையின்மை, மற்றவர்களுடைய வெற்றியைக் கண்டு வெதும்புதல், சோம்பேறித்தனம், மற்றவர்களோடு கலகலப்பாக இல்லாமல் இருத்தல் போன்றவை தன்னம்பிக்கை குறைவாக இருப்பதின் வெளிப்பாடு ஆகும்.

உமா ஷர்மா

உமா ஷர்மா

உமா ஷர்மாவுக்கு வயது 64. உத்திரப்பிரதேச மாநிலத்தில் சகாரன்பூரில் உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளியின் முதல்வராவார் பணியாற்றி வருகிறார். அந்த பள்ளி ஏழை மாணவர்களுக்காக நடத்தப்படும் பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2007-ம் ஆண்டு இவரை பக்கவாத நோய் பாதித்தது. அந்நோய் மேலும் தீவிரமடைந்து 2010-ம் ஆண்டு முழுமையாக தாக்கியது. உமா முழுவதுவாக அசைவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். படுத்த படுக்கையானார். அவரால் தலையையும் கைகளையும் மட்டுமே அசைக்கமுடியும். ஆனாலும் தன்னுடைய சேவையை அவர் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும் நினைக்கவில்லை. உமா தன்னுடைய மன உறுதியால் கடந்த ஏழு ஆண்டுகளாக படுக்கையில் படுத்தபடியே தன்னுடைய பள்ளியை செல்போன் மற்றும் டேப்லட் மூலம் நிர்வகித்து வருகிறார் என்றால் பாருங்களேன்.

குடும்ப வாழ்க்கை

குடும்ப வாழ்க்கை

உமா 1991-ம் ஆண்டிலேயே தன்னுடைய கணவரை இழந்துவிட்டார். அந்த சோகத்திலிருந்து மீண்டு வரவேண்டும் என்பதற்காக அதற்கடுத்த ஆண்டு உமா ஒரு பள்ளியை நிறுவினார். அந்தப் பள்ளியை இன்று வரை நிர்வகித்து வருகிறார். உமா தனது கணவரை இழந்த சோகத்திலிருந்து மீள்வதற்குள்ளாகவே அடுத்தடுத்த துயரச் சம்பவங்களும் அவருடைய வாழ்க்கையில் அரங்கேறின. 2001-ம் ஆண்டு அவரது 21 வயதான மகன் ராஜீவ் உயிரிழந்தார். 2007-ம் ஆண்டு அவரது மகள் ரிச்சாவும் உயிரிழந்தார். அதன்பின் அவர் பக்கவாதத்தாலும் பாதிக்கப்பட்டார்.

படுத்தபடியே பணியாற்றும் உமா

படுத்தபடியே பணியாற்றும் உமா

உமா பக்கவாதத்தால் முற்றிலுமாக தாக்கப்பட்ட பிறகு மனமுடைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அவருக்குப் பிடித்த விஷயங்களில் தொடர்ந்து ஈடுபட எண்ணி, அன்றாடம் பள்ளியை நிர்வகிக்கும் பணியில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.

சிசிடிவி மூலம் நிர்வாகம்

சிசிடிவி மூலம் நிர்வாகம்

தன்னால் படுக்கையை விட்டு நகரவே முடியாத என்ற நிலையில், ஆடியோ மற்றும் விடியோ மூலம் பள்ளியை நேரடியாக தொடர்பில் வைத்துக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று எண்ணினார். அதற்காக ஆடியோ மற்றும் வீடியோ வாயிலாக பள்ளியுடன் தொடர்பில் இருக்க வீட்டிலும் தன்னுடைய இரண்டு பள்ளிகளிலும் டிஷ் ஆண்டனாக்களை மாட்டினார்.

உமாவின் வசிப்பிடம்

உமாவின் வசிப்பிடம்

உமா போபாலின் நுமைஷ் கேம்ப் பகுதியில் வசிக்கிறார். இது பள்ளியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலேயே உள்ளது. வீட்டின் அனைத்து மூலைகளிலும் சிசிடிவி கேமிராக்களைப் பொருத்தியுள்ளார். இதன்மூலம் வெவ்வேறு திரைகளில் அனைத்தையும் கண்காணிக்கிறார். அது மட்டுமல்லாமல் தனது எலக்ட்ரானிக் டேப்ளட்டைப் பயன்படுத்தி மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களைத் தொடர்புகொண்டு பேசுகிறார். விடியோ கான்ஃரன்ஸ் மூலம் ஆன்லைன் வகுப்புகளும் எடுக்கிறார். பள்ளியில் 25 ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் உமாவின் நேரடி மேற்பார்வையிலேயே பணியாற்றுகின்றனர்.

பள்ளி ஒருங்கிணைப்பாளர் சிம்பிள் மகானி

பள்ளி ஒருங்கிணைப்பாளர் சிம்பிள் மகானி

உமா அவர்களின் வழிகாட்டுதலின்படியே இரண்டு பள்ளிகளும் ஒவ்வொரு நாளும் வளர்ச்சியடைந்து வருகிறது என்றும் எப்போது வழிகாட்டுதல் தேவைப்பட்டாலும் உமாவையே தான் அணுகுவதாகவும் அப்பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர் சிம்பிள மகானி குறிப்பிடுகிறார். மோசமான சூழலை எதிர்த்து போராடுவதில் மட்டுமல்ல சமுக நலனில் அக்கறை கொள்வதற்கும் அவரை காட்டிலும் சிறந்த உதாரணம் வேறில்லை என்று பாராட்டுகிறார்.

உமா ஷர்மாவைப் போன்ற சாதனைப் பெண்மணிகள் எப்போதுமே அடுத்த சந்ததிகளுக்கான உதாரண மதனிதர்களாகவே திகழ்கிறார்கள். ஒரு பெண்ணின் இநத மன தைரியம் நம்மை பெருமையடையவே செய்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: my story
English summary

64 years old paralysis attacked woman principal runs school for poor kids

64-year-old Uma Sharma who is the Principal of National Public School in Saharanpur, Uttar Pradesh. Uma is suffering from paralysis since last 10 years. Though she can’t move half of her lower body except for her hands and face, she is still running a school for underprivileged kids successful without any complaint about her condition.
Story first published: Thursday, March 8, 2018, 11:52 [IST]