தனது உண்மையான அப்பா யார் என்று தெரியாத பிரபலங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

அப்பா இல்லாத மகன் என்பது வேறு, தனது அப்பாவே யார் என்று தெரியாத மகன் என்று குறிப்பிடப்படுவது வேறு. இப்படியான சூழலில் வளரும் குழந்தைகள் தங்கள் வாழ்வில் மிகுந்த மனவருத்தத்திற்குரிய சூழல்களை, தருணங்களை கடந்து வந்திருப்பார்கள்.

சிறு வயதிலயே உதவியற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்து தத்தெடுக்கப்பட்டு சென்றவர்கள் நிலையாவது கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். ஆனால், ஒற்றை ஆளாக அம்மாவால் மட்டுமே வளர்க்கப்பட்டு கடைசி வரை அப்பா யார் என்று அறியாமல் இருப்பது மிகவும் கொடுமையான விஷயம்.

இப்படியான நிலையில் பிறந்து, வளர்ந்து பின்னாட்களில் பல துறைகளில் உலகளவில் பெரும் பிரபலமாக உருவெடுத்த சிலரை பற்றி தான் இந்த தொகுப்பில் கானவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மர்லின் மன்றோ!

மர்லின் மன்றோ!

கவர்ச்சி நாயகி என்று பெயர் பெற்ற மர்லின் மன்றோ தனது இளம் வயதில் மிகவும் சிரமப்பட்டவர். தனது பதின் வயதில் திருமணமாகி விவாகரத்திற்கு பிறகே இவர் சினிமாவல் காலூன்றினார். உலகம் முழுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உருவாக்கி வைத்திருந்த இவருக்கு, தனது உண்மையான தந்தை யார் என்று தெரியாது. மார்டின் எட்டி மோர்ட்டன்சென் என்பவர் தான் இவரது பயாலஜிக்கல் தந்தை என்று அறியப்படுகிறார்.

ஜாக் நிக்கல்சன்!

ஜாக் நிக்கல்சன்!

அறுபது ஆண்டு காலமாக அமெரிக்க திரையுலகில் சிறந்த நடிகராகவும், ஃபிலிம் மேக்கராகவும் திகழும் ஜாக் நிக்கல்சனுக்கு இன்று வரை தனது உண்மையான தந்தை யார் என்று தெரியாது. ஜாக் நிக்கல்சனை இவரது தாத்தா, பாட்டி தான் வளர்த்தனர். இவர் தனது பதின் வயதில் தான்... தனது சகோதரி தான் தனது அம்மா என்பதையே அறிந்தார்.

ஸ்டீவ் ஜாப்ஸ்!

ஸ்டீவ் ஜாப்ஸ்!

ஸ்டீவ் ஜாப்ஸ் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது ஆப்பிள் மற்றும் கடின உழைப்பும் தான். ஸ்டீவ் ஜாப்ஸ் சிறு குழந்தையாக இருக்கும் போதே தத்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு தன்னை வளர்த்த பெற்றோர் யார் என்று தான் தெரியுமே தவிர, தனது பயாலஜிக்கல் அப்பா யார் என்று கடைசி வரை தெரியாமலே போனது.

50 சென்ட்!

50 சென்ட்!

50 சென்ட் என்று அறியப்படும் பிரபல ஆங்கில பாடகரான இவர் தனது அம்மாவால் தனியாளாக வளர்ப்பட்டவர். அம்மாவிற்கு பிறகு, இவரது தாத்தா, பாட்டி தான் இவரை வளர்த்தனர். இவருக்கு தனது உண்மையான தந்தை யார் என்பது தெரியாமலே போனது.

 அட்ரியன் கிரெனியர்!

அட்ரியன் கிரெனியர்!

41 வயதான அட்ரியன் கிரெனியர் ஒரு அமெரிக்க நடிகர். இவர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் இசை அமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் ஆவார். வளரும் போது 18 ஆண்டுகள் தனது தந்தை யாரென்றே தெரியாமல் அப்பாவை பிரிந்து வாழ்ந்து வந்தார் அட்ரியன் கிரெனியர்.

எரிக் கிளாப்டன்!

எரிக் கிளாப்டன்!

எரிக் கிளாப்டன் இங்கிலாந்தை சேர்ந்த ராக் இசைக் கலைஞர், பாடகர் மற்றும் பாடலாசிரியர். இவர் கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் பாஃடா விருது பெற்றவர் ஆவார். இவர் வாழ்வில் தனது உண்மையான தந்தையை நேரில் கண்டதே இல்லை. 1985ல் இவரது பயாலஜிக்கல் அப்பா இறந்துவிட்டார். மை ஃபாதர் ஐஸ் (My Father Eye's) என்ற பாடலில் அப்பா குறித்த தனது எண்ணங்கள் மற்றும் கடந்து வந்த சூழல்களை எழுதினார் எரிக் கிளாப்டன்.

லிவ் டைலர்!

லிவ் டைலர்!

லிவ் டைலர் அமெரிக்கவை சேர்ந்த நடிகை மற்றும் மாடல் அழகி ஆவர். லிவ் டைலரின் பிறப்பு சான்றிதழில் டாட் ரன்ட்ரென் என்பவரே இவரது தந்தை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், பத்து வருடம் கழித்தே, ஏரோ ஸ்மித் எனும் பிரபல பாடகர் குழுவில் இருந்து டைலர் பெகன் என்பவரே தனது நிஜமான பயாலஜிக்கல் எப்பா என்று தெரிந்துக் கொண்டார் லிவ் டைலர்.

டேவ் தாமஸ்

டேவ் தாமஸ்

டேவ் தாமஸ் ஒரு புரோகிராமர். புத்தகங்களும் எழுதியுள்ளார். இவர் இவர் 1994ல் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவின் டெக்சாஸ் டல்லாஸ் இடத்திற்கு இடம் பொரிந்து சென்றார்.

இவர் சிறு குழந்தையாக இருக்கும் போதே, தத்தெடுத்து சென்றுவிட்டனர். இவர் தனது உண்மையான அப்பா, அம்மாவை கண்டதே இல்லை.

Image Credit: commons.wikimedia

ஜெஃப் பெஸோஸ்!

ஜெஃப் பெஸோஸ்!

இன்றுஉட்கார்ந்த இடத்தில் இருந்தே அனைத்து பொருட்களையும் வாங்க இவர் தான் முக்கிய காரணம். ஆம், இவர் தான் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர், சேர்மேன் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி. உலகின் மாபெரும் ஆன்லைன் இ-காமர்ஸ் இணையத்தின் உரிமையாளரான இவர் தனது பயாலஜிக்கல் அப்பாவை கண்டதே இல்லை.

Image Credit: commons.wikimedia

லூயிஸ் ஃபரகான்!

லூயிஸ் ஃபரகான்!

லூயிஸ் ஃபரகான் சீனியர் எனும் இவர் அமெரிக்கவை சேர்ந்த ஒரு மதவாத தலைவர். இவர் ஆப்ரிக்கன் - அமெரிக்க ஆர்வலரும் ஆவார். NOI என்று அழைக்கப்படும் நேஷன் ஆப் இஸ்லாம் என்ற அமைப்பின் தலைவரும் இவர் தான். இவர் ஒருமுறை, தான் தனது உண்மையான அப்பாவை இதுவரை நேரில் கண்டதே இல்லை என்று கூறியிருந்தார்.

Image Credit: commons.wikimedia

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Celebrities Who Don't Know Who Their Fathers Are

Celebrities Who Don't Know Who Their Fathers Are