இந்த 20 வயது இளம் பெண் செக்ஸ் கல்வியாளராக மாறியதன் காரணம் என்ன?

Posted By:
Subscribe to Boldsky

செக்ஸ் என்ற வார்த்தை இங்கு பலருக்கு ஒரு தீய சொல்லாக இருக்கிறது. ஆனால், செக்ஸ் என்பது உடலுறவு என்பதை தாண்டி, உடல் ஆரோக்கியம், தாம்பத்திய ஆரோக்கியம் ரீதியாக அனைவரும் கற்க வேண்டிய ஒன்றாகும்.

இதை தான் இந்த 20 வயது இளம் இன்ஸ்டா சென்சேஷனல் கில்லரன்டஸ்வீத்தாங் செய்துக் கொண்டிருக்கிறார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எய்லீன் கெல்லி!

எய்லீன் கெல்லி!

எய்லீன் கெல்லி என்பவர் நியூயார்க்கை சேர்ந்த ஓர் 20 வயது நிரம்பிய இளம் பிளாகர். இவரை எய்லீன் கெல்லி என்பதை விட கில்லரன்டஸ்வீத்தாங் என்றால் தான் பலருக்கும் தெரியும்.

Image Source

நியூயார்க் போஸ்ட் பதிவு!

நியூயார்க் போஸ்ட் பதிவு!

இம்மாதம் வெளியான ஒரு பிரதியில் எய்லீன் கெல்லி பற்றிய ஒரு பதிவு நியூயார்க் போஸ்ட்டில் வெளியாகியிருந்தது. அதில், இவரை பற்றி சர்ச்சையான கருத்துக்கள் வெளியாகியிருந்தது. இவரை ஒரு சர்க்கரை பெண் என்றும், வயதானவர்களை ஈர்ப்பவர் என்றும் குறிப்பிட்டு எழுதியிருந்தனர்.

Image Source

அதிர வாய்த்த தலைப்பு!

அதிர வாய்த்த தலைப்பு!

அந்த பதிவின் தலைப்பு "I fuel fantasies of men who want sex with young girls, and I'm fine with it." என பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த பதிவை தோழிகள் மூலம் கண்டறிந்த எய்லீன் கெல்லி மிகவும் அதிர்ந்து போனார்.

Image Source

செக்ஸ் கல்வியாளர்!

செக்ஸ் கல்வியாளர்!

டம்பளர் (tumblr) போன்ற தளங்களிலும், தனது சொந்த பிளாகிலும் செக்ஸ் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பதின் வயது பெண்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து வருபவர் எய்லீன் கெல்லி. இவரது இன்ஸ்டா பதிவுகளை கண்டு, நியூயார்க் போஸ்ட் இவரை பற்றி பதிவு வெளியிட்டுவிட்டது.

Image Source

எய்லீன் கெல்லி கருத்து!

எய்லீன் கெல்லி கருத்து!

"இதை படித்து மிகவும் மனம் உடைந்து போனேன். " என கூறியிருந்தார். அந்த பதிவில் எய்லீன் கெல்லியின் இன்ஸ்டா பதிவுகள் மன கிளர்ச்சி தூண்டும் வகையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இவரை 396 ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இதில் பல பிரபலங்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source

எப்போதிருந்து?

எப்போதிருந்து?

எய்லீன் பள்ளி படித்து வரும் போதிலிருந்தே செக்ஸ் கல்வியாளராக இருந்து வருகிறார். இவரது பிளாக் மூலமாக பல இளம் பெண்கள் வெளியே கேட்க தயங்கும் கேள்விகளை கேட்டு பதில் பெறுகின்றனர். இவரது பிளாக்கில் செக்ஸ், உறவுகள், பூப்படைதல் பற்றி விளக்கங்கள் கூறப்படுகின்றனர்.

Image Source

எதனால்?

எதனால்?

பூப்படைந்து முதல் முறை மாதவிடாய் அடைந்த போது தனிமையில் இருந்துள்ளார் எய்லீன். இவருக்கு தந்தை மட்டும் தான் தாய் இல்லை. இதனால், யாரிடம் சந்தேகம் கேட்பது, என்ன செய்வது போன்ற பல கேள்விகள் எழ. கடைசியில், இது சார்ந்த கேள்விகளுக்கு தானே பதிலளிக்க துவங்கிவிட்டார் எய்லீன்.

Image Source

கவர்ச்சி படங்கள் ஏன்?

கவர்ச்சி படங்கள் ஏன்?

இன்ஸ்டாவில் இவர் பதிவிட்டிருக்கும் பல படங்கள் கவர்ச்சியானவை மற்றும் அரைநிர்வாண படங்கள் தான். ஏன் நீங்கள் இப்படிப்பட்ட படங்கள் பதிவு செய்கிறீர்கள் என கேட்கும் போது அதற்கு எய்லீன் தான் தனது உடலை பாசிட்டிவாக காண்கிறேன் என பதில் அளிக்கிறார்.

Image Source

கவலையில்லை!

கவலையில்லை!

நான் என் வாழ்க்கையை என் வழியில் வாழ்கிறேன். நான் மற்றவர்களுக்கு உதவி தான் வருகிறேனே தவிர. தவறான வழியில் வழிநடத்தவில்லை. இது போன்றவை எனக்கு புதியதல்ல. இதை பற்றி நான் கவலை கொள்ள போவதுமல்ல என்கிறார் எய்லீன் கெல்லி.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why This 20-Year-Old Insta Sensation Turns Into A Sex Educator

Why This 20-Year-Old Insta Sensation Turns Into A Sex Educator?
Story first published: Thursday, January 19, 2017, 10:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter