உலகின் மறுபகுதியில் அழிவின் விளிம்பில் நின்றுக் கொண்டிருக்கும் கடைசி பழங்குடியினர்!

Posted By:
Subscribe to Boldsky

இந்த உலகில் மனிதர்கள் மட்டும் வாழவில்லை, பல உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவர்களை காக்க வேண்டும் என பல நாடுகளை சேர்ந்தவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

ஆனால், மனிதர்களியே பல இன பிரிவுகள் இருக்கின்றன. முக்கியமாக வெளியுலகம் அறியாத, தொழில்நுட்பம் பற்றி தெரியாத, இயற்கைமட்டும் நேசித்து கொண்டு, தங்கள் அழிவை நெருங்கிக் கொண்டிருக்கும் பழங்குடியினர் பலர் இருக்கிறார்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தி அசாரோ பழங்குடியினர்!

தி அசாரோ பழங்குடியினர்!

இந்த பழங்குடியினர் பப்புவா, நியூ கினி எனும் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இவர் சீரான இடைவேளையில் தங்கள் முகத்தில் சேறு மாஸ்க் அப்பிக்கொள்ளும் பழக்கம் கொண்டுள்ளனர்.

இதன் மூலம், வெளி கிராம மக்கள் தங்கள் இடத்தினுள் நுழையும் போது அவர்களை அச்சுறுத்துகின்றனர்.

சீன மீன்பிடி பழங்குடியினர்!

சீன மீன்பிடி பழங்குடியினர்!

சீனாவின் குவாங்ஸி எனும் இடத்தில் இந்த சீன மீன்பிடி பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். உலகிலேயே இவர்கள் மட்டும் தான் இன்றளவும் நீர்க்காக்கை எனப்படும் மீன்பிடிக்கும் நுட்பம் அறிந்தவர்கள்.பறவைகள் பெரிய மீன்களை உண்ணாமல் இருக்க இவர்கள் பொறி ஒன்றை பறவைகளில் கட்டு வைத்துவிடுகின்றனர்.

தி மாசாய் பழங்குடியினர்!

தி மாசாய் பழங்குடியினர்!

இவர்கள் தன்சானியா எனும் இடத்தில் வாழ்ந்து வருகின்றனர். உலகில் நீடித்து வரும் பழம்பெரும் போர் கலாச்சாரம் கடைபிடித்து வருபவர்களில் இவர்களும் அடங்குவர்.இந்த பழங்குடியில் இருக்கும் இளம் ஆண்கள் வீரர்களாகும் பொறுப்பு கொண்டுள்ளனர்.

தி நெநெட்ஸ் பழங்குடியினர்!

தி நெநெட்ஸ் பழங்குடியினர்!

யாமல் எனும் இடத்தில் இந்த பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் யாமல் பெனின்சுலா பகுதியில் பயணித்து வருபவர்கள்.

இவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் -50 டிகிரி குளிர் மற்றும் +35 டிகிரி வெளியிலும் வாழும் தன்மை கொண்டுள்ளவர்கள்.

தி மௌரி பழங்குடி மக்கள்!

தி மௌரி பழங்குடி மக்கள்!

இவர்கள் நியூசிலாந்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கடவுளை தொழும் பழக்கம் கொண்டுள்ளனர். மேலும், இவர்களது முன்னோர்கள் பல சக்திகள் கொண்டிருந்ததாக இவர்கள் நம்புகின்றனர்.

தி கோரோகா பழங்குடியினர்!

தி கோரோகா பழங்குடியினர்!

இவர்கள் பப்புவா, நியூ கினி எனும் இடத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களிடத்தில் பல நல்ல உணவுகள், நெருக்கமான குடும்ப உணர்வுகள் மற்றும் இயற்கையை விரும்பும் பண்பு அதிகமாக இருக்கின்றன. வேட்டை, விவசாயம் மட்டுமின்றி, எதிரிகளையும் அரவணைக்கும் பண்பு கொண்டவர்கள் இவர்கள்.

தி ஹுலி பழங்குடியினர்!

தி ஹுலி பழங்குடியினர்!

இவர்களும் பப்புவா, நியூ கினி பகுதியில் தான் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அழிவின் விளிம்பில் வாழ்ந்து வருகின்றனர். பெண்கள், நிலம் மற்றும் பன்றிகளுக்காக இவர்கள் எல்லாம் அதிகம் சண்டையிட்டு கொள்கிறார்கள்.

இவர்கள் முகத்தில் மஞ்சள், சிவப்பு, வெள்ளை நிறங்களால் வரைந்துக் கொள்ளும் பழக்கம் கொண்டுள்ளனர். செயற்கை முடி மற்றும் அலங்கார உபகரணங்கள் செய்வதில் இவர்கள் புகழ் பெற்றவர்கள்.

தி காசக் பழங்குடி மக்கள்!

தி காசக் பழங்குடி மக்கள்!

இவர்கள் துர்கிக், மொங்கோலியா மற்றும் இந்தோ-இரணியன் சந்ததி சார்ந்த பழங்குடியினர். இவர்கள் சைபீரியா மற்றும் கருப்பு கடல் பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். கழுகுகளை வேட்டையாடுவதில் இவர்கள் புகழ் பெற்றவர்கள்.

தி காரோ பழங்குடியினர்!

தி காரோ பழங்குடியினர்!

எத்தியோப்பியாவில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.ஏறத்தாழ இரண்டு லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் பொருட்கள் வணிகம் செய்கிறார்கள். துப்பாக்கி, தோட்டாக்கள் வணிகம் செய்வதில் இவர்கள் புகழ் பெற்றவர்கள்.

தி டசாநேச் பழங்குடியினர்!

தி டசாநேச் பழங்குடியினர்!

இவர்களும் எத்தியோப்பியாவில் தான் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எல்லாரையும் வரவேற்கும் பண்பு கொண்டவர்கள். வேற்று பழங்குடி மக்களையும் சேர்த்து வாழும் பண்பு கொண்டுள்ளனர்.

தி வனுவாட்டு பழங்குடியினர்!

தி வனுவாட்டு பழங்குடியினர்!

இவர் ரஹ் லவா தீவு, டர்பா எனும் மாகாணத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பணமும், செல்வமும் அவர்களது நடனத்தினால் பெற்றுவிட முடியும் என நம்புகிறார்கள். நடனம் தான் இவர்களது கலாச்சாரத்தில் மிக முக்கியமானது.

தி லடாக்கி பழங்குடியினர்!

தி லடாக்கி பழங்குடியினர்!

இவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள். பார்க்க திபெத்தியர்கள் போல இருப்பவர்கள். திபெத் புத்திசம் நம்பிக்கை கொண்டவர்கள். பார்ப்பதற்கு மூர்க்கத்தனமானவர்கள் போல காட்சியளிப்பார்கள்.

தி முர்சி பழங்குடியினர்!

தி முர்சி பழங்குடியினர்!

இவார்கள் எத்தியோப்பியாவை சேர்ந்தவர்கள். இந்த பழங்குடியை சேர்ந்த வீரர்கள் உடம்பில் குதிரை லாடம் போன்ற அச்சுக்கள் இருக்கும். ஆண்களுக்கு வலது கைகளிலும், பெண்களுக்கு இடது கைகளிலும் இந்த அச்சு இருக்கும்.

தி ராபாரி பழங்குடியினர்!

தி ராபாரி பழங்குடியினர்!

இவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள். இவர்கள் பாலைவனத்தில் உலாவுபவர்கள். மேற்கு இந்திய பகுதியில் இவர்கள் வாழ்கிறார்கள்.இந்த பழங்குடியை சேர்ந்த பெண்கள் எம்பிராயிடிங் செய்வதில் திறமையானவர்கள்.

தி சம்புரூ பழங்குடியினர்!

தி சம்புரூ பழங்குடியினர்!

இவர்கள் தன்சானியா பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு ஐந்து, ஆறு வாரத்திற்கு ஒருமுறை இவர்கள் இடம் மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

தி முச்டங் பழங்குடியினர்!

தி முச்டங் பழங்குடியினர்!

இவர்கள் நேபாளத்தில் வாழ்ந்து வருகின்றனர். மிகவும் மதவாதம் கொண்டுள்ளவர்கள். பெரும்பாலானவர்கள் உலகம் தட்டையானது என நம்பி வருகின்றனர். இவர்களும் அழிவின் விளிம்பில் இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Last Standing Tribes In The World!

Check the details of the last existing tribes living on planet earth. Learn about them even before they become extinct!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter