அது கல்லூரி ஹாஸ்டல் அல்ல விபச்சார விடுதி, மாணவிகள் திடுக்கிடும் புகார்!

Posted By:
Subscribe to Boldsky

ஜனனி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அப்பாவின் மரணத்தின் காரணத்தால், 12ம் வகுப்பிற்கு பிறகு தனது படிப்பதை தொடர முடியாமல் போன மாணவி. 2017ல் இவர் தனது தாய் மற்றும் சகோதரனுடன் விழுப்புரம் சென்றார். அப்போது தான் அந்த பாராமெடிக்கல் சயின்சஸ் கல்லூரி பற்றி அவர் முதல் முறையாக அறிகிறார்.

அப்பாவின் மரணம் மற்றும் குடும்ப பொருளாதார சிக்கல் காரணமாக படிப்பை பாதியில் கைவிட்ட ஜனனிக்கு, அந்த கல்லூரியின் மாணவிகள் இலவச படிப்புக் குறித்துப் பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்ததை கண்டு மகிழ்ந்தார்.

அங்கேயே தங்கி படிக்க குடும்பத்துடன் சண்டையிட்ட அதே ஜனனி.... இன்று தான் அந்த கல்லூரிக்கு சீல் வைக்க போராடிய ஏழு மாணவிகளில் ஒருவர்.

நடந்தது என்ன?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வன்கொடுமை!

வன்கொடுமை!

ஜனனி மற்றும் அவரது தோழிகள் கல்லூரியில் உடல் ரீதியாக, மன ரீதியாக, பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்வதாக ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் 10-ம் தேதி புகார் அளித்தார்.

அந்த புகாரில்,"படிக்க வரும் ஏழை மாணவிகளை இலவச படிப்பை காரணம் காட்டி பாலியல் ரீதியாக கொடுமை செய்கிறார்கள். எங்கள் கல்லூரி ஹாஸ்டல் விபசார விடுதி போன்ற உணர்வளிக்கிறது என தி நியூஸ் மினிட் இணையதளத்தில் கூறியுள்ளனர் இந்த மாணவியர்.

வறுமை பின்னணி!

வறுமை பின்னணி!

வறுமையில் வாடும் மாணவியருக்கு இந்த கல்லூரி டி.எம்.எ எனப்படும் டிப்ளமோ இன் மெடிகல் அசிஸ்டன்ஸ் பயில சலுகை அளிக்கிறது. மேலும், அவர்களுக்கு ஹாஸ்டல் வசதிகளும் செய்து தருகிறது.

ஆனால், அன்றாடம் இவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கு மாறாக, பாலியல் வன்முறைக்கு இரையாகி வருகிறார்கள். அக்கல்வி நிறுவனம் கடந்த எட்டு ஆண்டுகளாக இயங்கி வருவதாகவும். இந்த இரண்டு வருட கோர்ஸில் 150 மாணவிகள் கல்வி பயின்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கரஸ்பாண்டன்ட்!

கரஸ்பாண்டன்ட்!

அந்த கல்லூரியை சேர்ந்த கரஸ்பாண்டன்ட் தான் இந்த சம்பவங்களின் முக்கிய குற்றவாளி என ஜனனி மற்றும் புகார் அளித்த இதர மாணவியர் கூறியுள்ளனர்.

கரஸ்பாண்டன்ட் வகுப்பு நேரத்தின் போது இடையே குடி போதையில் வந்து தொந்தரவு செய்வார் என்றும். யாரேனும் மாணவியை அழைத்து தன் அருகில் உட்கார கூறுவார். கையை பிடித்து இழுப்பது, காம பார்வையில் காண்பது, நன்கு உடை அணிந்து வா என கூறுவது என தொந்தரவு செய்து வந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து பேசினால், தவறான முறையில் பேசுவார் என மேலும், மாணவிகள் கூறியுள்ளனர்.

ஆசிரியர்கள் என்ன செய்கிறர்கள்?

ஆசிரியர்கள் என்ன செய்கிறர்கள்?

குடி போதையில் கரஸ்பாண்டன்ட் இப்படி வகுப்பு நடத்தும் போது உள்ளே புகுந்து மாணவிகளிடம் தவறாக நடந்துக் கொள்ளும் வரை வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள்? என்ற கேள்விக்கு.. "அவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். சொல்ல வேண்டும் எனில், கரஸ்பாண்டன்ட்டின் மனைவியும் ஒரு ஆசிரியை தான் என ஜனனி கூறியுள்ளார்.

அவரே, தனது கணவரை வகுப்பு நேரத்தின் போது உள்ளே அனுமதிக்கிறார். அவரது வருகையை யாரேனும் மாணவி ஆட்சேபனை தெரிவித்தால், அந்த மாணவரை அடிப்பார்கள்என்றும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார் மாணவி ஜனனி.

பிரச்சாரம்!

பிரச்சாரம்!

கல்லூரி மாணவிகள் இலவச கல்வி குறித்து பிரச்சாரம் செய்தது, மேலாண்மை நிர்வாகம் வற்புறுத்தி, மிரட்டி செய்ய வைத்தது தான் என்றும் புகாரில் அவர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி கல்லூரிக்காக பிரச்சாரம் செய்யவில்லை எனில், சான்றிதழ்கள் தரப்படமாட்டாது என்றும் மிரட்டியுள்ளனர்.

படிப்பு தான் எல்லாமே!

படிப்பு தான் எல்லாமே!

ஜனனியின் வகுப்பில் பயிலும் மாணவிகள் 50 பேரும் கல்வியை நம்பி தங்கள் வாழ்க்கையை எதிர்கொள்ள காத்திருக்கும் மாணவிகள். கல்வி இல்லை எனில் அவர்களால் வாழ்க்கையை எதிர்த்து போராட முடியாது. ஆனால், இங்கே கல்வி பயிலவே போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என கண்ணீர்மல்க மாணவிகள் தி நியூஸ் மினிட் இணையத்தில் கூறியுள்ளனர்.

இன்டர்ன்ஷிப்!

இன்டர்ன்ஷிப்!

இதைவிட கொடுமை இன்டர்ன்ஷிப் என்ற பெயரில் சென்னைக்கு அனுப்பியுள்ளனர். பயண செலவு மாணவியருடையது தான். ஆனால், அவர்கள் அனுப்பியது சென்னையில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு அல்ல, சில வீடுகளுக்கு.

அங்கே மாணவிகளை வீட்டு வேலை, துணை துவைப்பது போன்ற வேலை செய்ய வைத்துள்ளனர். மேலும், அங்கேயும் சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுயுள்ளனர். பிறகு அவர்களை சென்னையில் அருகே இருந்த மருத்துவமனையில் அனுமதித்தோம் என ஜனனி கூறியுள்ளார்.

அரசிடம் புகார்!

அரசிடம் புகார்!

இதுகுறித்து தமிநாடு நர்ஸிங் கவுன்சிலில் ஆன்லைனில் மாணவிகள் புகார் அளித்துள்ளனர். முதலமைச்சரின் சிறப்பு செல்லுக்கும் இதை கொண்டு சென்றுள்ளனர். ஆனால், தங்கள் மின்னஞ்சலுக்கு எந்த பதிலும் வரவில்லை என இவர்கள் கூறுகிறார்கள்.

கடைசி முடிவாக ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார்கள் மாணவிகள். மாணவிகளின் புகாரை கண்டு அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக முதல் விசாரணை அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும், கரஸ்பாண்டன்ட்'ன் மனைவியை கைது செய்துள்ளனர்.

பெற்றோர் கவலை!

பெற்றோர் கவலை!

இந்த நிறுவனத்தில் படித்த பெரும்பாலான மாணவிகள் மலைவாழ் பழங்குடியினர் ஆவர். இலவச கல்வி என்பதால் தான் பெற்றோர் எங்களை இங்கே சேர்த்தனர். இப்போது இந்த பிரச்சனை பற்றி அறிந்தால், நாங்கள் இனி வீட்டை விட்டு கூட வெளியே வர முடியாது என ஜனனி கூறியுள்ளார்.

அரசாங்கம் தான் எங்களை வேறு நர்ஸிங் கல்லூரியில் சேர்க்க உதவ வேண்டும் என்றும் இவர் கூறியுள்ளார்.

கைவிரித்த அரசு!

கைவிரித்த அரசு!

ஏற்கனவே அனைத்து கல்லூரிகளிலும் சேர்க்கை முடிவடைந்த நிலையில், இனி புதியதாக சேர்க்கைக்கு உதவ இயலாது என அரசு கூறியுள்ளது.

எந்த கல்லூரி எந்த நிலையில் இயங்குகிறது, அவர்களின் தரம் என்ன என்பது கூட அறியாமல் இருந்தது அரசின் தவறு.

அடுத்தது என்ன?

அடுத்தது என்ன?

கல்வியை மட்டுமே மூலதனமாய் நம்பியிருக்கும் ஜனனிக்கு அரசு உதவவில்லை எனில், கல்வி கானல்நீராகிவிடும். "தன்னை முன்னுதாரணமாக கண்ட கிராமத்து மக்கள், இனி, அவரவர் வீட்டு பெண்களை இப்படி இலவச கல்வி என்றாலும் கூட படிக்க அனுப்பமாட்டார்கள்." என குரலுடைந்து சோகத்தில் கூறியுள்ளார் ஜனனி.

நன்றி: தி நியூஸ் மினிட்

கொடுமை!

கொடுமை!

இன்றும் நம் சமூகம் பெண்களை ஒரு உடல் பிண்டமாக தான் கண்டு வருகிறது. அவர்களை பாலியல் இசைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பலவித முகமூடிகள் அணிந்து அவர்களை முன்னேறவிடாமல் தடுத்துக் கொண்டே இருக்கிறது. கல்பனா சாவ்லா, பி.டி. உஷா, சிந்து, கிரண் பேடி, மிதாலி ராஜ் என துறைக்கு ஓரிருவர் மட்டுமே வளர்ந்து சாதித்தால் போதுமா?

இன்னும் எத்தனை காலத்திற்கு பெண்கள் வளர்ந்துவிட்டனர் என்ற போலி மாயைக்குள் வாழ்ந்துக் கொண்டு எண்ணற்ற பெண்களின் வாழ்க்கை சீரழிய வழிவகுக்க போகிறோம்?

சீரான அரசு பெண்களுக்கு எதிராக நடக்கும் இந்த வன்கொடுமைகளுக்கு ஒழித்து அவர்கள் வாழ்வை சீரமைக்க வேண்டும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

We felt like we were in a brothel not a college hostel, Says Student!

We felt like we were in a brothel not a college hostel, Says Student!