For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2015 சென்னை வெள்ளத்தின் மறக்க முடியாத நினைவுகள் - பகுதி 1

2015ஆம் ஆண்டு சென்னையில் பயங்கர ஏற்பட்ட பயங்கர வெள்ளம் ஏற்பட்ட போது நடந்த மறக்க முடியாத நினைவலைகள்.

|

சென்னை வெள்ளம் நினைவிருக்கிறதா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2015ல் சென்னையையே உலுக்கிய மழையை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டோம்.

2015 நவம்பர் டிசம்பர் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யத்துவங்கிய மழை இப்படி கோரத் தாண்டவம் ஆடும் என்று யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிந்ததுடன் பதினெட்டு லட்சம் மக்கள் வரை இடம்பெயர்ந்தார்கள். பல லட்சம் மக்கள் தங்களது வீடு உட்பட எல்லா உடமைகளையும் இழந்தார்கள்.

சாலை,ரயில்,விமானம் என அனைத்து போக்குவரத்தும் முடங்கியது. அடையாறு,கூவம் ஆறு ஆகியவற்றில் வெள்ளம் பெருகியது. செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.

Unforgettable 2015 Chennai flood Memories

தொலைபேசி,மின்சாரம் எல்லாமே துண்டிக்கப்பட்டது. உணவு, தண்ணீர் கூட இல்லாமல் மக்கள் திண்டாடினார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மழை ....

மழை ....

நவம்பர் இறுதி வாரத்திலிருந்து மழை தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. அன்றைக்கு நவம்பர் 29. மதிய உணவின் போது வெளியில் வந்து பார்க்க, பெரும் காற்றுடன் மழை பொழிந்து கொண்டிருந்தது. அலுவலகம் முடித்து மாலையில் வீட்டிற்கு கிளம்ப அப்போதும் மழை.

இடைவிடாது பெய்து கொண்டேயிருந்தது. மாலை 6.30க்கே மேகம் இருட்டிக் கொண்டு வர மழையில் நனைந்து கொண்டே பஸ் ஸ்டாண்டுக்குச் சென்றேன். ஒரு மணி நேரம் ஆகியும் எந்த பஸ்ஸும் வரவில்லை. ஆட்டோ,ஷேர் ஆட்டோ, எதுவும் இல்லை. வரும் ஒன்றிண்டு ஆட்டோக்களிலும் ஆட்கள் நிரம்பியிருந்தார்கள்.

அண்டர்கிரவுண்டில் தண்ணீர் :

அண்டர்கிரவுண்டில் தண்ணீர் :

வரும் வழியில் இருந்த அண்டர்கிரவுண்டில் தண்ணீர் நிரம்பிவிட்டதால் பஸ்கள் இயங்கவில்லை என்றார்கள். சூளைமேட்டிற்கு சென்றாக வேண்டும். அங்கேயும் ஒரு அண்டர்கிரவுண்ட் இருப்பதால் கிடைத்த ஒரு ஆட்டோவும் வர மறுத்து விட்டது.

அங்கிருந்து ஒரு ஸ்டாப் முன்னால் சென்று பார்க்கலாம் என்று நினைத்து கொட்டும் மழையில் தொப்பலாய் நனைந்து கொண்டே நடந்தேன். மூன்று தோழிகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தேன்.

ஆட்டோ :

ஆட்டோ :

அங்கேயும் ஒன்றும் நடக்கவில்லை. மணி எட்டு ஆகிவிட்டிருந்தது. அலுவலகத்தில் இருந்த நண்பனை வரச் சொல்லி காத்திருக்க, முட்டியளவு தேங்கி நிற்கும் தண்ணீரில் பைக்கை இழுத்து வர முடியவில்லை பாதிவழியில் நின்றுவிட்டால் பிரச்சனை அதான் எதாவது வண்டி புடிச்சு ஏத்தி விட்றேன் என்று சொல்லி வந்தான்.

அவனும் என்னோடு சேர்ந்து ஒன்பதரை மணி வரையிலும் காத்திருந்தும் ஒரு ஆட்டோ கூட நிற்கவில்லை. இந்த இரவில் எங்கே செல்ல எப்படியாவது வீட்டிற்குச் சென்றாக வேண்டுமே, ராயப்பேட்டையிலிருக்கும் இன்னொரு நண்பனுக்கு அழைத்தோம்.

500 ரூபாய் :

500 ரூபாய் :

அவன் அருகிலிருக்கும் ஆட்டோ ஸ்டாண்ட்டில் பேசிவிட்டுச் சொல்வதாக கூறி அரை மணி நேரம் கழித்து அழைத்தான். இங்கிருந்து வந்து, உங்கள பிக்கப் பண்ணிட்டு சூலைமேட்ல ட்ராப் பண்றாராம். ஆனா 500 ரூபா கேக்குறாரு என்றான்.

சரி பரவாயில்ல எவ்ளோனாலும்... இன்னும் மழ தூரிட்டு தான் இருக்கு என்று வரச்சொன்னோம். வழியெங்கும் தண்ணீர் வெள்ளம். மெல்ல ஊர்ந்து சென்றது எங்கள் ஆட்டோ வீட்டிற்கு வரும் போது மணி பத்தரை.

மறுநாள் டிசம்பர் 1 :

மறுநாள் டிசம்பர் 1 :

இரவில் மழை விட்டிருந்தது. மறுநாள் காலை எட்டு மணிக்கு மழை தூர ஆரம்பித்து விட்டது. லேசகத்தானே தூறுகிறது கிளம்பிடலாம் என்று சொல்லி குடையை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

பத்து மணிக்கு, பதினோறு மணிக்கு என ஒரு மணி நேரம் ஒரு முறை வெளியில் வந்து பார்க்க மழை விடாது பெய்து கொண்டேயிருந்தது. பன்னிரெண்டு மணிக்கு இன்றைக்கும் மழை அதிகமாக இருக்கும் என்று செய்தி வருகிறது அதனால் பெண்கள் எல்லாம் இப்போதே கிளம்புங்கள் என்று அலுவலகத்தில் சொல்ல உடனேயே கிளம்பினோம்.

மதிய நேரம் தான் என்றாலும் லேசாக மட்டுமே தூரல் இருந்ததால் உடனே ஆட்டோ கிடைத்தது. இரண்டு மணிக்கு வீட்டிற்கு வந்து விட்டேன்.

பவர் கட் :

பவர் கட் :

என்னுடன் தங்கியிருந்த தோழிகளுக்கு போன் செய்தேன் அவர்களும் வந்து கொண்டிருப்பதாய் சொன்னார்கள். மாலை நெருங்க நெருங்க மழையும் அதிகரித்தது சரியாக ஏழு மணிக்கு கரண்ட் கட்டாகிவிட்டது.

தோழி எமர்ஜென்சி லைட்டை ஆன் செய்து வைத்தாள். ஜன்னல் வழியே நாங்கள் மூன்று பேரும் எட்டிப் பார்க்க மழைத்து அடித்து ஊற்றுகிறது. எங்கள் அப்பார்ட்மெண்ட் உள்ளே எல்லாம் தண்ணீர் வந்து விட்டது.

கிரவுண்ட் ஃப்ளோர் :

கிரவுண்ட் ஃப்ளோர் :

தரைத்தளத்தில் இருக்கும் அக்கா எங்களுக்கு நல்ல பழக்கம் எங்கள் வீட்டுச் சாவியை எப்போதும் அவர்களிடத்தில் தான் கொடுத்து விட்டுச் செல்வோம். கரண்ட் வேற இல்ல, ஐஸ் பாப்பா என்ன செய்யுதுன்னு தெர்ல வா போய் பாக்கலாம் என்று அழைத்தாள்.

நானும் தோழியும் கீழ் வீட்டிற்குச் சென்றோம்.

குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு இருக்கிற சாமான்களை எல்லாம் கட்டிலின் மீது,மேஜையின் மீது என்று வைத்துக் கொண்டிருந்தார். பெரிய பை ஒன்றும் தயாராகியிருந்தது.

 என்னக்கா.... இந்த மழைல எங்க கிளம்பிட்டீங்க?

என்னக்கா.... இந்த மழைல எங்க கிளம்பிட்டீங்க?

தரைத்தளத்தில் இருக்கும் அக்கா எங்களுக்கு நல்ல பழக்கம் எங்கள் வீட்டுச் சாவியை எப்போதும் அவர்களிடத்தில் தான் கொடுத்து விட்டுச் செல்வோம். கரண்ட் வேற இல்ல, ஐஸ் பாப்பா என்ன செய்யுதுன்னு தெர்ல வா போய் பாக்கலாம் என்று அழைத்தாள்.

நானும் தோழியும் கீழ் வீட்டிற்குச் சென்றோம்.

குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு இருக்கிற சாமான்களை எல்லாம் கட்டிலின் மீது,மேஜையின் மீது என்று வைத்துக் கொண்டிருந்தார். பெரிய பை ஒன்றும் தயாராகியிருந்தது.

இரண்டே நிமிடத்தில் :

இரண்டே நிமிடத்தில் :

கணவர் வந்ததும் கிளம்பி விடுவோம் என்று சொல்லி எல்லாவற்றையும் தயாராக வைத்து விட்டு காத்திருந்தார்.

குழந்தையை தூக்கி நாங்கள் விளையாட்டு காண்பித்துக் கொண்டிருக்க மெல்ல மெல்ல... மெயின் டோர் படி வழியாக தண்ணீர் உள்ளே ஏறியது. அக்கா தண்ணீ .... என்று அலறினேன். ஐயயோ உள்ள வந்திடுச்சா என்று அவரும் அலற ... எங்களைப் பார்த்து குழந்தை அழத் துவங்கிவிட்டது.

அப்போது தான் குழந்தையின் பால் பாட்டில் இங்கேயே இருக்கிறது என்று சொல்லி அதனை எடுக்க கிட்சனுக்குள் சென்றார். அங்கே பாத்திரம் கழுவும் தண்ணீர் செல்லும் குழாய் வழியாகவும் தண்ணீர் வெளியாகி பாதி கிட்சனுக்கு வந்திருந்தது.

ஏய் கிட்சன் வழியாவும் வந்திருக்கு.... பாத்ரூம் வழியா வருதான்னு பாரு என்று சொல்லி பார்க்க அந்த ஓட்டை வழியாகவும் தண்ணீர். ஒரே நேரத்தில் நாலாபுறத்திலிருந்தும் தண்ணீர் வர ஒரு நிமிடத்தில் காலை நனைக்கும் தண்ணீர் வந்து விட்டது.

இடுப்பளவு தண்ணீர் :

இடுப்பளவு தண்ணீர் :

கணவரை உடனே வரச்சொல்லவேண்டும் என்று சொல்லி அவரது போனுக்கு அழைத்துக் கொண்டிருந்தார் அந்த அக்கா நாங்கள் அவரை வழியனுப்பி வைத்திட வேண்டும் என்று சொல்லி பையையும் குழந்தையையும் பிடித்துக் கொண்டு நின்றிருந்தோம்.

இரண்டு நிமிடம் கடந்திருந்தது. மெல்ல மெல்ல தண்ணீரின் அளவும் அதிகரித்தது. திடிரென்று வாசலில் இருக்கும் இரும்புக் கதவினை யாரோ ஓங்கி தள்ளியது போன்ற ஓர் சத்தம். மடாரென தண்ணீர் இடுப்பளவு உயர்ந்து விட்டது.

அக்கா இனிமே இங்க இருக்குறது சேஃப் இல்ல மேல எங்க வீட்டுக்கு வாங்க பாப்பா வேற இருக்கா.... அண்ணன் வந்ததும் நீங்க கிளம்பலாம் என்று சொன்னோம்.

போன் வேற ரீச் ஆகல, நாங்க மேல இருக்கோம்னு அவருக்கு எப்டி தெரியும்? என்று பயந்து கொண்டே சரி இடுப்பளவுக்கு தண்ணி வந்திடுச்சு என்று சொல்லி மேலே வர ஆயுத்தமானார்.

பின் வாசல் :

பின் வாசல் :

அவர்களது வீடு தரைத்தளத்தின் கார்னரில் இருந்ததால் மெயின் வழியின்று பார்க்கிங் ஏரியாவில் ஓர் வழி என்று இரண்டு வழி இருந்தது. கரண்ட் வேறு இல்லை.

மெயின் கதவை பூட்டினோம். பேக் கேட் வழியா வாங்க அது தான் படியேற வசதியாவும் இருக்கும். இந்த வழில பப்ளிக் யாரும் வர முடியாது சோ சேஃப்டி என்று சொல்லி முன் வாசல் சரியாக பூட்டியிருக்கிறதா என்று சொல்லி செக் செய்து விட்டு மூவரும் கைகளை பிடித்துக் கொண்டே மெல்ல நகர்ந்தோம்.

தண்ணீரின் அளவு அதிகரித்துக் கொண்டே வந்தது. மொபைல் டார்ச் வெளிச்சத்தில் எங்கிருக்கிறோம் எந்தப்பக்கம் செல்ல வேண்டும் என்று எதுவும் தெரியாமல் தட்டுத் தடுமாறி நகர்ந்தோம்.

கழுத்தளவு தண்ணீர் :

கழுத்தளவு தண்ணீர் :

அந்த அக்காவிற்கு கழுத்தளவு தண்ணீர் வந்து விட்டது. பயத்தில் அழ ஆரம்பித்து விட்டார். அக்கா பயப்படாதீங்க இப்போ வெளில போய்டலாம் என்று சமாதனம் சொல்ல அவர் கேட்பதாக இல்லை.... எங்கே தடுமாறி குழந்தையை கீழே போட்டு விடுவாரோ என்று பயந்து குழந்தையை வாங்கிக் கொண்டேன்.

குழந்தையை கழுத்தில் உட்கார வைத்து தலையை இறுக்கமாக பிடித்துக் கொள்ளச் சொன்னேன். என்னுடன் வந்த தோழி ஒரு கையில் அந்த அக்காவின் பையையும் இன்னொரு கையில் அவரையும் பிடித்துக் கொண்டு மெல்ல பின் வாசலை நோக்கி வெளியே வந்தோம்.

ஐயோ அவரோட லேப்டாப், பாப்பா போட்டோ, ஒவ்வொண்ணா போகுதே, டிவி வாங்கி ஒரு மாசம் கூட ஆகல.... பீரோக்குள்ள எல்லாம் தண்ணீ போயிருக்குமா? நக எல்லாம் இருக்கு என்று ஒவ்வொரு பொருளாய் நினைவுப்படுத்திக் கொண்டே வந்தார்.

அழுகை :

அழுகை :

ஒரு வழியாக அந்த அக்காவையும் குழந்தையையும் மீட்டு இரண்டாவது மாடியில் இருந்த எங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டோம்.

தண்ணீ வரும்னு சொன்னாங்க நான் கூட கால் அளவுக்கு வரும்னு நினச்சேன். ஆனா கழுத்தளவு வரும்னு யாரு கண்டா? இவரு வேற எங்க போனாருன்னு தெரில இன்னும் மழ ஊத்துது... இதுல எப்டி நம்ம போக என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

ஏய் ஏ பிளாக் இவங்க மேல கூட்டிட்டு வந்திட்டோம். பி ???

இந்நேரத்துக்கு அவங்க கிளம்பியிருப்பாங்க என்றாள்.

ஏய் அதுவேற லாஸ்ட்டா இருக்கு அந்த சைடு வீடு இருக்குறவங்களத்தவிர வேற யாருமே போகமாட்டாங்க ஜஸ்ட் செக் பண்ணிட்டு வரலமே என்று கேட்க

அப்பவே தண்ணீ கழுத்தளவுக்கு வந்துருச்சு இப்போ போனா நம்ம முழுசா முங்கிடுவோம் சொன்னா கேளு என்று தடுத்தார்கள். அந்த அக்காவும் மிரட்ட உட்கார்ந்து கொண்டேன். நாங்கள் சமைத்ததையே அந்த அக்காவிற்கு சாப்பிட கொடுத்தோம்.

எங்க வீட்டுக்கு வாங்க :

எங்க வீட்டுக்கு வாங்க :

சென்னையில் எங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு போன் செய்து அப்பகுதியின் நிலவரம் குறித்து விசாரித்தோம். வீட்டிற்குள் தண்ணீர் வந்து விட்டது வேறு எங்கே செல்ல என்று தெரியவில்லை என்று முழித்த அலுவலகத்தில் பணியாற்றிய தோழியொத்தியை இங்கே அழைத்தேன்.

இப்போ எப்டி வரமுடியும்னு தெர்ல.... ஆனா வர வழியில்ல எப்டியாவது வர்றோம் என்று சொன்னாள். இன்னொருத்திக்கு அவர்கள் இருக்கும் பகுதியிலேயே யாராவது வீட்டில் இடமிருக்கிறதா என்று கேட்டு அங்கே சென்று தங்க ஏற்பாடு செய்தேன்.

கதவு தட்டுகிறார்கள் :

கதவு தட்டுகிறார்கள் :

இருக்கிற மெழுகு வர்த்தி தீர்ந்து விட்டது. மொபைல் டார்ச் நீண்ட நேரம் இருக்காது. சார்ஜ் வேகமாக குறைந்திடும் என்பதால் அதையும் அணைத்து விட்டு கும்மிருட்டில் உட்கார்ந்திருந்தோம்.

நல்ல வேலை குழந்தை தூங்கிவிட்டிருந்தாள். முழித்திருந்தாள் அவ்வளவு தான்,இருட்டைப் பார்த்து பயந்து அழுதிருப்பாள்.

யாரோ ஓங்கி கதவு தட்டும் சத்தம் கேட்க... ஏய் யாரோ கதவு தட்றாங்க என்றேன்

அது ரொம்ப நேரமா கேட்டுட்டு இருக்கு. கரண்ட் இல்ல... இருட்டுல ஒண்ணுமே தெர்ல எங்க போவ? ஒண்ணு கணக்கா ஒண்ணு ஆகிட்டா சும்மா உக்காரு என்றார்கள். லூசு மாதிரி பேசாத மத்த நேரம்னா பரவாயில்ல இப்பயும் அப்டியே இருக்க முடியுமா என்று சொல்லிவிட்டு மொபைல் டார்ச்சை ஆன் செய்து கீழே இறங்கினேன்.

யாரவது இருக்கீங்களா?

யாரவது இருக்கீங்களா?

எனக்கு அந்த ‘பி' ப்ளாக் வீட்டின் மீது தான் சந்தேகம். அங்கே யாராவது மாட்டிக் கொண்டிருப்பார்களா என்று.... தண்ணீர் இப்போது எனக்கும் கழுத்தளவு வந்துவிட்டது. இறங்கி அப்பார்ட்மெண்ட் கேட் அருகில் வந்துவிட்டேன். அங்கிருந்து இப்போது பி பிளாக் பக்கம் செல்ல வேண்டும்.

வழியில் தான் குழந்தைகளுக்கான பார்க் இருக்கிறது, பார்கிங் ஏரியா இருக்கிறது ஆனால் ஒன்று கூட கண்ணில் தெரியவில்லை முழுமைக்கும் தண்ணீர் தான். எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தேன்.

அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த இடத்தில் மீண்டும் கதவு தட்டும் சத்தம். இம்முறை சற்று பலமாக இருந்தது.

எனக்கே தூக்கி வாரிப்போட்டது.... யாரு? யாராவது இருக்கீங்களா? யாராவது வீட்டுக்குள்ள இருக்கீங்களா? என்று குரல் கொடுத்துக் கொண்டே பி ப்ளாக் பக்கம் நகர்ந்தேன். ஹெல்ப்... உள்ளே ஃபுல்லா தண்ணி டோர் ஓப்பன் பண்ண முடியல யாராவது இருக்கீங்கிளா என்று ஒரு சன்னமான குரல் அருகில் சென்றதும் தான் கேட்டது.

ஹெல்ப் :

ஹெல்ப் :

நானும் அவ்வீட்டருகே சென்று யாராவது இருக்கீங்களா என்று மீண்டும் கேட்க...

நானும் ஓங்கி கதவைத்தட்டி யாரு வீட்ல வெளிய வாங்க....

யாரு.... யாரு இங்க மூணு பேர் இருக்கோம் என்றது ஒரு குரல். கதவருகே சென்றேன்.

டோர் ஓப்பன் பண்ண முடியல ரொம்ப நேரமா ட்ரை பண்ணிட்டு இருக்கேன். பின்னாடி கேட் இருக்கும்ல

அந்த டோர் சாவி எங்கன்னு தெரிலம்மா...

குழந்த எதாவது இருக்கா? யார் யார் இருக்கீங்க

நான் என் வொய்ஃப், மருமக ஷீ இஸ் செவன் மன்த் ப்ரெக்னெண்ட்

ஸ்பேர் கீ :

ஸ்பேர் கீ :

நிலமையின் தீவிரம் புரிந்தது. மூன்று மணி நேரமாக கதவைத் திறக்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார்கள். அம்மா... எப்டியாவது கொஞ்சம் ஹெல்ப் பண்ணுமா அவளுக்கு கால் எல்லாம் சில்லிட்டுப்போச்சு ரொம்ப நேரம் அவளால நிக்க முடியல ப்ளீஸ் என்று அவர் கெஞ்சுவது எனக்கு என்னவோ போல இருந்தது.

இருங்க தாத்தா கண்டிப்பா உங்கள ஹெல்ப் பண்றேன். இவ்ளோ பெரிய கதவ எப்டி ஓப்பன் பண்றது. யாராவது வர்றாங்களா... ஸ்பேர் கீ யார்ட்டயாவது இருக்குமா என்று கேட்டுக் கொண்டிருக்க உள்ளிருந்து ஐயையோ என்னங்க என்று ஓர் குரல்

ஏய் என்னாச்சு.... ஏம்மா எந்திரி கண்ண தெரு என்று சொல்லி அடிக்கும் ஓசை கேட்டது.

நான்.... தாத்தா என்னாச்சு சேஃப் தான என்றேன்

மருமக அன்கான்சியஸ் ஆகிட்டாம்மா...

- தொடரும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync life my story
English summary

Unforgettable 2015 Chennai Flood Memories

Unforgettable 2015 Chennai flood Memories
Desktop Bottom Promotion