மகாபாரதத்தில் சிவனின் அவதாரம் யார் என்று உங்களுக்கு தெரியுமா?

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

உங்கள் பக்தி வழிபாட்டுக்கு என்ற நேரம் வந்துவிட்டது. இந்த ஷ்ரவண மாதம் (ஜீலை மாதம் கடைசியில் தொடங்கி ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் முடியும்) பக்தி வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த காலம். அதிலும் இக்காலத்தில் எம்பெருமான் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த காலமாகும். இந்த மாதத்தில் சிவ பெருமானின் அனைத்து அவதாரங்களையும் மனதில் நினைத்து வழிபட்டால் எல்லா விதமான செளபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சிவ பெருமானின் அவதாரங்கள் :

கடவுள் விஷ்ணு பரமாத்மாவை போன்றே சிவனும் 19 அவதாங்களை கொண்டுள்ளார். இவற்றை பற்றி பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டீர்கள். வீரபத்திர அவதாரம், ருத்ரா, பைரவா, ஹனுமான் போன்ற அவதாரங்களை எடுத்து இவ்வுலகில் நன்மைகளை பொழியச் செய்தார்.

இந்த ஷ்ரவண மாதம் சிவனுக்கு மிகவும் பிடித்த மாதமாகும். இம்மாதத்தில் உலகில் மழை பொழிந்து அவருக்கு அபிஷேகம் பண்ணுவது போல உலகமே வறட்சி இல்லாமல் பசுமை நிரம்பி வழியும்.

எனவே இம்மாதத்தில் சிவனை வேண்டினால் நாடெங்கும் செல்வ செழிப்பும் வீட்டில் மகிழ்ச்சியையும் அள்ளித் தருவார். இக்கட்டுரையில் சிவனின் முக்கியமான மகாபாரத அவதாரம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.

This Shiva Avatar in Mahabharata is never worshiped during Shravan Month

மகாபாரத அவதாரம்

அஸ்வத்தாமன் அவதாரம் பற்றி நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் இந்த அவதாரம் தான் சிவ பெருமானின் ஆசி பெற்று தோன்றிய அவதாரம் ஆகும்.

அஸ்வத்தாமன் சாபம்

மகாபாரத போரின் போது ஒரு அப்பாவி பெண்ணுக்கு செய்த வேதனையால் அஸ்வத்தாமன் கிருஷ்ணனின் பெரும் சாபத்திற்கு ஆளானார்.

சிவபெருமான் அஸ்வத்தாமன் ஆன கதை :

அஸ்வத்தாமன் கிரிபிக்கும் துரணோச்சாரியாருக்கும் மகனாக பிறந்தார். துரணோச்சாரியார் தீவிர சிவன் பக்தர். அவர் கடவுள் சிவபெருமானிடம் நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் என வரம் கேட்டார். அதன்படியே சிவனின் ஆசியுடன் அஸ்வத்தாமன் அவதாரமாக துரணோச்சாரியாருக்கு மகனாக பிறந்தார்.

அப்பொழுது மகாபாரத போர் நடக்க போகும் தருணம் என்பதால் பாண்டவர்களும், கெளரவர்களும் துரணோச்சாரியாரிடம் பயிற்சி பெற்று கொண்டிருந்தனர். அஸ்வத்தாமனும் வில்வித்தை மற்றும் போரில் சிறந்த வீரனாக விளங்கினார். அஸ்வத்தாமன் என்பதற்கு கோபம், சிவன் என்று பொருள்.

This Shiva Avatar in Mahabharata is never worshiped during Shravan Month

அஸ்வத்தாமன் செய்த தவறு :

அஸ்வத்தாமன் கண்களை கோபம் மறைத்து விட்டதால் மகாபாரத போரில் பெரும் தவற்றை செய்துவிட்டார். போரின் போது கெளரவர்கள் பக்கம் நின்று போரிட்டு அப்பொழுது அவர் செய்த தவறு கிருஷ்ணனின் சாபத்தை பெற்றுத் தந்தது.

சிவ பெருமானின் கருத்து :

இந்த அஸ்வத்தாமன் நெற்றியில் இருக்கும் அடையாளம் உங்கள் கோபத்தை எச்சமயத்திலும் அடக்கி ஆள வேண்டும் என்ற மாபெரும் கருத்தை எம்பெருமான் சிவன் முன் வைக்கிறார்.

பாண்டவர் குழந்தைகளை கொல்லுதல் :

மகாபாரத போரின் போது தன் தந்தை துரணோச்சாரியார் கொல்லப்பட்டதை அறிந்த அஸ்வத்தாமன் மிகுந்த கோபமடைந்தார். இதற்கு பழிவாங்கும் விதமாக பாண்டவர்களின் 5 புதல்வர்களையும் போரின் கடைசி இரவில் கொன்று விட்டார்.

This Shiva Avatar in Mahabharata is never worshiped during Shravan Month

அஸ்வத்தாமன் பிரம்மாஸ்திரத்தை எய்தல் :

அதற்கு அப்புறம் அஸ்வத்தாமன் மகாபாரத போரில் பாண்டவர்களை கொல்வதற்காக சக்தி வாய்ந்த ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை எடுத்தார். ஆனால் அதை பயன்படுத்த வேண்டாம் என வியாசர் முனிவர் தடுத்து விட்டார்.

அஸ்வத்தாமன் உத்ரா மற்றும் பரிக்ஷிட் யை கொல்லுதல் :

அஸ்வத்தாமனுக்கு பிரம்மாஸ்திரத்தை திருப்பி வைப்பதற்கான பயிற்சி தெரியாது. எனவே அவர் திருப்பி வைப்பதற்கு தெரியாமல் அப்பாவி பெண்ணான உத்தாராவின் கருவில் வளரும் அபிமன்யுவின் பிறக்காத குழந்தை மீது ஏவினார். இதனால் வயிற்றில் இருந்த குழந்தை இறந்து விட்டது.

அஸ்வத்தாமனின் நெற்றி:

அந்த பிரம்மாஸ்திரம் கடவுள் பிரம்மன் மற்றும் கிருஷ்ணனின் ஆசி பெற்று அஸ்வத்தாமன் நெற்றியையே திருப்பி நுழைத்துவிட்டது. மேலும் இந்த நெற்றியில் ஏற்பட்ட காயம் ஆறாது என்ற சாபத்தையும் பெற்றார்.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் சாபம் :

வயிற்றில் வளர்ந்த குழந்தையை கொன்ற .அஸ்வத்தாமனின் குணத்தை கண்டு கோபமடைந்த கிருஷ்ணர் அஸ்வத்தாமன் செய்த பாவத்தை சுமக்கும் படி சாபம் விட்டு விட்டார்.

அஸ்வத்தாமன் முடிவற்ற காலம் வரை இந்த பூமியில் வலம் வர வேண்டும் என்றும், அவரது நெற்றியில் பிறக்கும் போதே இருந்த ரத்தினக்கல்லை தர வேண்டும் என்றும் போரில் நெற்றியில் ஏற்பட்ட புண் என்றும் ஆறாது என்றும் சாபம் விடுத்தார்.

இந்த மாபெரும் அவதாரம் வாழ்க்கையில் கோபங்களை குறைத்து எந்த பாவச் செயலிற்கும் ஆளாகாமல் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற உபதேசம் செய்கிறது.

English summary

This Shiva Avatar in Mahabharata is never worshiped during Shravan Month

This Shiva Avatar in Mahabharata is never worshiped during Shravan Month
Story first published: Friday, July 21, 2017, 19:00 [IST]