செல்வங்களை அள்ளித் தரும் வரலட்சுமி விரதம் எப்படி இருப்பது?

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

இந்த ஷ்ரவண மாதம் (ஆடி மாதம்) என்பது பக்திக்கு மிகவும் உகந்த மாதமாகும். எனவே தான் இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் தங்களது இஷ்ட தெய்வங்களை இம்மாதத்தில் வழிபட்டு நிறைய வரங்களை வேண்டிப் பெறுகின்றனர். இந்த ஷ்ரவண மாதமானது ஜீலை மாதம் கடைசியில் தொடங்கி ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் முடியும்.

இக்காலம் வட மற்றும் தென் இந்திய மக்கள் வழிபாட்டுக்கென்றே செலவிடும் ரெம்ப சிறப்பான காலமாகும். வட இந்தியர்கள் இம்மாதத்தில் தீஜ் பூஜையையும், தென் இந்தியர்கள் வரலட்சுமி நோன்பையும் மிகவும் சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

Things You Should Know About The Varamahalakshmi Festival

இந்த வரலட்சுமி விரதமானது தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கான மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இதுவே மகாலட்சுமி பூஜை என்ற பெயரில் வட மாநிலங்களான பீகார், மத்திய பிரதேசம், மற்றும் உத்திரப் பிரதேசம் போன்ற இடங்களில் கொண்டாடப்படுகின்றன.

சரி வாங்க இப்பொழுது இந்த வரலட்சுமி விரதத்தை எப்படி கடைபிடித்து வழிபடுவது என்று பார்ப்போம்

எப்போது கொண்டாடப்படுகிறது ?

இந்த வரலட்சுமி பூஜையானது ஒவ்வொரு வருடமும் ஷ்ரவண மாதத்தில் சுக்லாம் பஷ்ட்சா போது முதல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதன் படி இந்த ஆண்டை எடுத்துக் கொண்டால் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரலட்சுமி விரதம் வருகிறது.

வரலட்சுமி விரதம் எதற்காக கொண்டாடப்படுகிறது ?

வரலட்சுமி விரதம் செல்வ அதிபதியான ஸ்ரீ மகாலட்சுமி தேவிக்காக கொண்டாடப்படுகிறது. அம்மாளின் ஆசிகளையும் வரங்களையும் பெறுவதற்காகவே இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

Things You Should Know About The Varamahalakshmi Festival

இந்த விரதத்தை கடைபிடிப்பதால் லட்சுமி தேவியின் அருளுடன் எல்லா ஐஸ்வர்யங்களுடனும் வளங்களுடனும் சீரும் சிறப்புமாக வாழலாம் என்பது எல்லா பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த விரதத்தை முக்கியமாக சுமங்கலிகள் தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், செளபாக்கியமும் பெறவும் கடைபிடிக்க வேண்டும்.

விரதத்தின் போது சொல்ல வேண்டிய மந்திரம் :

வரலட்சுமி விரதத்தின் போது மகாலட்சுமியின் அருளை பெற நிறைய மந்திரங்கள் இருக்கின்றன. இருப்பினும் இரண்டு மந்திரங்கள் இந்த விரதத்திற்கான மிகவும் உகந்த சக்தி வாய்ந்த மந்திரங்களாகும்

அவைகள் லட்சுமி அஷ்டோத்திரம் , லட்சுமி சகாஸ்ரணபம் ஆகும்.

Things You Should Know About The Varamahalakshmi Festival

ஸ்லோகம் :

பத்மாஸனாம் பத்மகராம் பத்மமாலா விபூஷிதாம்

க்ஷீர ஸாகர ஸம்பூதாம் க்ஷீரவர்ண ஸமப்ரபாம்

க்ஷீரவர்ணஸமம் வஸ்த்ரம் ததானாம் ஹரிவல்லபாம்

பாவயே பக்தி யோகேன கலசே அஸ்மின் மனோஹர

வரலக்ஷ்ம்யை நம

வரலட்சுமி விரத முறைகள் :

இந்த விரதம் இருப்பதற்கு உங்கள் உடலை வருத்தி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மனதை ஒரு முகபடுத்தி ஸ்ரீ மகாலட்சுமி தேவியை நினைத்தாலே போதும். இங்கே விரதத்திற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கர்ப்பிணிப் பெண்களும், உடல் நிலை சரியில்லாதவர்களும் உண்ணாமல் விரதம் இருக்கனும் அவசியமில்லை.

வழக்கமாக விரதமானது சூரிய உதயமான நேரத்தில் இருந்து பூஜை நல்லபடியாக முடியும் வரை இருக்க வேண்டும் அல்லது உங்களுக்கு தகுந்த நேரங்களையும் எடுத்துக் கொள்ளலாம். பச்சை வாழைப்பழங்களை இந்த நாளில் சமைக்க கூடாது. சுண்டல் இந்த நாளுக்கான முக்கியமான உணவாக எடுத்து கொள்ளலாம்.

முதலில் விநாயகர் பூஜை தொடங்கி கலச பூஜை, பக்தி பாடல்கள், மகாலட்சுமி பூஜை, பிராத்தனை, ஆர்த்தி என்று வழிபடலாம்.

Things You Should Know About The Varamahalakshmi Festival

பூஜைக்கு வேண்டிய பொருட்கள் :

மஞ்சளால் பிடித்த பிள்ளையார், வாழை இலை, அரிசி, தேங்காய், பழம், பாக்கு, கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, எலும்பிச்சை பழம், குங்குமம், திருநீறு, சந்தனம், மலர்கள், குத்து விளக்கு, நோன்பு கயிறு மற்றும் நிவோதனப் பொருட்களான பொங்கல், பயாசம் உங்களால் முடிந்த உணவுகள் . மேலும் நகை மற்றும் பணம் வைத்து தொட்டு கும்பிடலாம்.

வரலட்சுமி பூஜை செய்ய முடியாத தருணம் :

சில சமயங்களில் உடல்நலம் சரியின்மை , பெண்களுக்கு மாதவிலக்கு போன்ற காரணத்தால் செய்ய முடியாமல் போகலாம். அவர்கள் அடுத்த வார வெள்ளிக்கிழமை அல்லது நவராத்திரி வெள்ளிக் கிழமை நாட்களில் இந்த பூஜையை செய்து அதே பலனை பெறலாம்.

Things You Should Know About The Varamahalakshmi Festival

வரலட்சுமி நோன்பு கயிறு

இந்த விரதத்தின் முக்கிய பொருள் வரலட்சுமி விரத கயிறு. விரதத்தின் முடிவில் மஞ்சள் நூலை(சரடு) கையில் கட்டிக் கொள்வார்கள். எட்டு லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமி என்பதால் அந்த கயிற்றில் ஒன்பது முடிச்சுகளுடன் நடுவில் பூ சுத்தி பூஜையில் வைத்து வழிபட்டு எல்லாரும் தங்களது வலது கைகளில் கட்டிக் கொள்வர்.

வரலட்சுமி பூஜையின் போது செய்யக் கூடாதவை :

யாரையும் இந்த பூஜையை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. ஏனெனில் இந்த பூஜையானது எல்லாரும் மனசார வேண்டி வழிபடுவது முக்கியம்.

இந்த பூஜையை புதிதாக ஆரம்பிக்க போறீங்கள் என்றால் இதை பற்றி தெரிந்தவர்களிடம் அதன் முறைகளை நன்கு கேட்டு தெரிந்து கொண்டு செய்யவும்.

இந்த பூஜையானது சுமங்கலி பெண்கள் செய்யக் கூடிய பூஜை. கல்யாணம் ஆகாத பெண்கள் அவர்கள் அம்மாக்களுடன் சேர்ந்து கலந்து கொண்டு வழிபடலாம்

அமங்களமான நிகழ்ச்சிகள் நடந்து இருந்தால் இந்த பூஜையை 22 நாட்களுக்கு தள்ளி வைப்பது நல்லது.

English summary

Things You Should Know About The Varamahalakshmi Festival

Things You Should Know About The Varamahalakshmi Festival
Story first published: Tuesday, July 25, 2017, 20:00 [IST]