யானைச் சாணத்திலிருந்து கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

யானை ஒன்றிற்கு அதன் மிக பெரிய உடலைப் பொறுத்து ஒரு நாளைக்கு 200 கிலோவிலிருந்து 250 கிலோ உணவு தேவைப்படும். இது ஒரு நாளுக்கு 50 கிலோ அளவிற்கு சாணியிடும்.

ஆபிரிக்க நாட்டில் உள்ள போட்ஸ்வனா என்னும் ஊரில் மிக அதிகப்படியான ஆபிரிக்க யானைகள் வாழ்கின்றன. அவற்றின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்து முப்பது ஆயிரத்தை (1,30,000) தாண்டி விட்டது. அவற்றின் மூலம் சுமார் அறுபத்துஐந்து லட்சம் (65,00,000) கிலோ யானையின் சாணம் தினமும் கிடைக்கிறது.

இந்த மிகப் பெரிய அளவு சாணியை எப்படி மாற்று வழியில் உபயோகித்து தீர்ப்பது என அந்நாட்டின் அரசாங்கம் ஒரு ஆராய்ச்சி செய்து, யானை சாணியின் மூலம் பிற உபயோகமான விடயங்களுக்கு மாற்றுவதற்கு சில குறிப்புகள் கொடுத்திருக்கிறது. அவற்றை பற்றி இங்கே காண்போம்.

கொசு விரட்டி:

யானையின் சாணி ஒரு சிறந்த கொசு விரட்டியாக செயல் படுகிறது. வறட்டி ஆக்கப் பட்ட யானை சாணியை, அது நன்கு காய்ந்ததும் ஒரு சிறு துண்டை எடுத்துக் அதை நெருப்பால் பற்ற வைத்து சிறிது நேரம் விட்டு வைத்தால் போதும்.

கொசுக்கள் இருக்கும் இடம் தெரியாமல் பறந்து போய் விடும். மேலும் ஒரு சிறப்பம்சம், இதை பற்ற வைத்து எரியும் போது இதில் இருந்து எந்த ஒரு நாற்றமும் வராது. இதனால் இவை மற்ற செயற்கை கொசு விரட்டிகள் போல நமது நாசிகளிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை.

Things to know about Elephant Dung

தலை வலி மற்றும் மூக்கின் இரத்தம் வடிதலுக்கான தீர்வு :

ஒரு யானை நாள் முழுவதிலும் எடுத்துக் கொள்ளும் பலவிதமான பழங்கள் மற்றும் தாவரங்களின் விளைவாக, அவற்றின் கழிவுப்பொருட்கள் பாரம்பரிய சிகிச்சை முறைக்கு சிறந்த மருந்தாக பயன் படுகிறது. அவை சிறந்த மருத்துவ குணங்கள் கொண்டதால் சில உடல் உபாதைகளுக்கு மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது .

யானையின் சாணியில் செய்த வரட்டியில் சிறிது துண்டாக எடுத்துக் கொண்டு அது தீயிட்டு அந்த புகையை நுகர்வதால் கடுமையான தலை வலியில் இருந்தும் நிவாரணம் பெறலாம். தலைவலிகளை குணப்படுத்தவும், பல்வலி மற்றும் பல்வகை நோய்களை கட்டுப்படுத்தவும் யானை சாணம் மிகவும் உதவுகிறது.

Things to know about Elephant Dung

குறிப்பாக சைனஸ் போன்ற நோய்களில் இருந்தும் நம்மை காக்கிறது. மேலும் இஃது மூக்கில் இருந்து இரத்தம் வடியும் நோயிலிருந்தும் நம்மை வெகுவாக காக்கிறது. எனவே ஒரு குறிப்பிட்ட வியாதியை குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட மூலிகை அல்லது பட்டையை தேடிப் போகாமல், சில யானைப் வரட்டிகளை பற்றவைத்து அவற்றை சுவாசித்தால் அஃது மிகுந்த பலனை அளிக்க வல்லது.

பயோ காஸ் :

பயோ காஸின் தேவை நாளுக்கு நாள் மிக முக்கியமான வலுத்து வருகிறது. புதை படிவ எரிபொருள் பூகோள வெப்பமயம் ஆதலுக்கு மிக அதிக அளவில் துணை புரிகிறது. ஆனால் எரிபொருள்களின் அதிக எண்ணிக்கையிலான தேவையை கருத்தில் கொண்டு நம்மால் அதை குறைக்க முடிய வில்லை.

ஆதலால் எரிபொருளுக்கான மாற்று வழிகளை கண்டுபிடிக்கும் நேரம் இப்பொழுது வந்து விட்டது. அதிர்ஷ்டவசமாக, சில உயிரியல் பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் அவர்களது விலங்குகளின் சாண வளங்களைப் பயன்படுத்துவதற்குத் தொடங்கிவிட்டன.

Things to know about Elephant Dung

பயோ காஸை சில உயிரணுக்களின் உதவியுடன், கழிவுப்பொருட்களில் பயன்படுத்தி அடுப்பிற்கான வாயு மற்றும் மின்சாரம் ஆகியவற்றை உருவாக்க ஆரம்பித்திருக்கிறார்கள். நமக்கு தேவைப்படும் அதிகப்படியான பயன் பாட்டிற்கு யானை வெளியிடும் அதீத கழிவுப் பொருட்கள் மிகுந்த அளவில் உபயோகப்படுகிறது.

யானை சாணிகளில் இருந்து அதன் கரிம கழிவுகளை பிரித்து எடுக்க வேண்டும். அதிலிருந்து மீத்தேன் மற்றும் கார்பன் டை ​​ஆக்சைடு முதலியவை கிடைக்கும். இதனை வாயு சேகரிக்கும் இயந்திரத்தில் சேகரித்து வைக்க வேண்டும். இந்த வாயுவின் மூலம் நாம் அடுப்புகளுக்கு நெருப்பூட்டலாம். இந்த செயல்முறையின் போது ஊட்டச்சத்து நிறைந்த உயிர்-உரம் உருவாக்கப்படுகிறது, இவற்றை நாம் பயிருக்கு ஒரு சிறந்த உரமாக பயன்படுத்தப்படலாம்.

யானைகள் வசிக்கும் இடங்கள் பொதுவான வாழ்வியலுக்கான இடங்கள் என்று கண்டறியப்பட்டுள்ளன.

யானைகள் விஞ்ஞானிகளால் 'சூழல் அமைப்பு பொறியியலாளர்" என அன்புடன் பெயரிடப்படுகின்றன.. பூச்சிகள், தேள், தேனீக்கள் மற்றும் மில்லிபீட்கள் உட்பட பல வகையான பூச்சிகளின் உருவாக்கத்திற்கு இவை மிகப் பெரிய உதவி புரிகின்றன. ஆதலால் இவற்றின் நன்மைகளை நாம் அறிந்து கொள்வோமாக.

English summary

Things to know about Elephant Dung

Things to know about Elephant Dung and its uses.
Story first published: Friday, September 1, 2017, 19:00 [IST]
Subscribe Newsletter