போலி மருத்துவரின் சிகிச்சையால் வாழ்க்கையையே இழந்த சிறுவன்!

Posted By:
Subscribe to Boldsky

தற்போது எத்தனையோ நோய்கள் கொடிய நோய்கள் உடலைத் தாக்குகின்றன. அப்படி ஒரு அரிய வகை உடல்நல பிரச்சனையால் இந்திய சிறுவன் ஒருவன் அவஸ்தைப்படுகிறான். அதுவும் நியூரோஃபைரோமாடோசிஸ் என்னும் உடல் மற்றும் முகம் முழுவதும் கட்டிகளைக் கொண்ட ஒரு அரிய மரபணு கோளாறால் கஷ்டப்பட்டு வருகிறான்.

இச்சிறுவனுக்கு 16 வயது தான் ஆகிறது. இவனால் மற்றவர்களைப் போல் சாதாரண வாழ்க்கை வாழ முடியவில்லை. இந்த வயதில் நண்பர்களுடன் பள்ளியில் நேரத்தை செலவழிப்பதற்கு பதிலாக, நான்கு சுவர்களுக்குள் அடைப்பட்டு தனிமையான வாழ்வை வாழ்ந்து வருகிறான்.

இச்சிறுவனுக்கு எப்படி இந்நிலை ஏற்பட்டது, எப்பேற்பட்ட வாழ்வை வாழ்ந்து வருகிறான் என்பதை தொடர்ந்து படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
16 வயது

16 வயது

பீகாரில் உள்ள நவாடா மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தான் மிலன். இவன் நியூரோஃபைப்டோமாடோசிஸ் என்னும் அரிய மரபணு கோளாறால் அவஸ்தைப்பட்டு வருகிறான். இந்த கோளாறால் உடல் முழுவதும் சிறிய மற்றும் பெரிய கட்டிகளுடன் பயங்கர தோற்றத்தில் காணப்படுகிறான்.

பேய் சிறுவன்

பேய் சிறுவன்

உள்ளூரைச் சேர்ந்தவர்கள் இச்சிறுவனை பேய் சிறுவன் என்று அழைப்பார்கள். இச்சிறுவனுடன் யாரும் பேசவோ, விளையாடவோ விரும்பமாட்டார்களாம். இதற்கு இச்சிறுவனின் மோசமான தோற்றம் தான் காரணம்.

அஞ்சி ஓடுவார்கள்

அஞ்சி ஓடுவார்கள்

மிலனின் தோற்றத்தைக் கண்டு, அருகில் உள்ள சிறுவர்கள் எல்லாம் அஞ்சி ஓடுவார்களாம். மிலனின் வாய், மூக்கு, கண்கள் போன்ற பகுதிகள் வீங்கி இருப்பதால், இவனால் சரியாக பேசவோ, மூச்சுவிடவோ, ஏன் பார்க்க கூட முடியாதாம். இந்த காரணத்தினாலேயே இவனது படிப்பும் முடங்கிவிட்டது.

பிறப்பிலேயே இல்லை

பிறப்பிலேயே இல்லை

மிலனுக்கு இந்நிலை பிறப்பில் இருந்தே இல்லையாம். பீகாரில் உள்ள ஒரு போலி மருத்துவரின் தவறான சிகிச்சையால் தான், மிலன் இப்படி பாதிக்கப்பட்டுள்ளானாம். அதுவும் ஏற்கனவே தன் உடலில் இருந்த வலிமிக்க ஒரு மச்சத்திற்கு சிகிச்சைப் பெற சென்ற போது நேர்ந்ததாம்.

தந்தையின் ஒரு நாள் வருமானம் ரூ.250

தந்தையின் ஒரு நாள் வருமானம் ரூ.250

மிலனின் தந்தை ஒரு அன்றாட கூலி தொழில் செய்து வருபவர். இவர் ஒரு நாளைக்கு ரூ.250 தான் சம்பாதிப்பாராம். இந்த சம்பளத்தைக் கொண்டு, மிலனின் இந்த மோசமான நிலையைப் போக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்.

சபிக்கப்பட்டவன்

சபிக்கப்பட்டவன்

மிலனின் அக்கம்பக்கத்தினர், இச்சிறுவன் கடவுளால் சபிக்கப்பட்டவனாக நம்புகின்றனர். இச்சிறுவனின் இந்த வலிமிக்க நிலையைப் போக்க, அருகில் உள்ளவர்கள் பல சடங்குகளையும் மேற்கொண்டுள்ளனராம்.

குணப்படுத்த முடியாத நிலை

குணப்படுத்த முடியாத நிலை

நியூரோஃபைரோமாடோசிஸ் என்னும் இந்த நிலை குணப்படுத்த முடியாதது மற்றும் உலகிலேயே 33,000 பேரில் ஒருவருக்கு தான் இம்மாதிரியான கோளாறு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனராம்.

குணப்படுத்த கூடியதே!

குணப்படுத்த கூடியதே!

சில மருத்துவர்கள், இச்சிறுவனின் நிலையை குணப்படுத்த முடியும் என்று கூறுகின்றனராம். ஆனால் அதற்கு இச்சிறுவனுக்கு பல அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறுகின்றனர். மற்றும் இந்த சிகிச்சைகளை செய்வதற்கு குறைந்தது ரூ.3,00,000 தேவைப்படுமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Tragic Story Of A Boy Who Suffers From Tumours On His Face & Body

This is the case of the Indian boy who is suffering from tumours all over his body. Read on to find out his heartbreaking story.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter