Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
பிறந்ததில் இருந்து மனித குரங்குகளுடன் வாழ்ந்து வரும் 8 வயது சிறுமி - வீடியோ!
எட்டு வயது பெண் தனியே காட்டில் குரங்குகளுடன் வசித்து வந்தது தெரிய வந்ததுள்ளது. இவர் குரங்குகள் போலவே வாழ்ந்து வந்துள்ளார். எத்தனை வருடமாக இவர் இப்படி வாழ்ந்து வருகிறார் என யாருக்கும் தெரியவில்லை.
மோக்லி என்ற கதாபாத்திரத்தையும் அதன் சுட்டித்தனத்தையும் யாரால் மறக்க முடியும். இந்தியாவின் தார்சான் மோக்லி. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்த்த மோக்லி நிஜமாகவே இந்தியாவில் இருந்தால் நீங்கள் எவ்வளவு ஆச்சரியப்படுவீர்களோ, அவ்வளவு ஆச்சரியத்தை அள்ளித்தருகிறாள் உத்திரபிரதேசம் - நேபாளம் எல்லையில் வனப்பகுதியில் மனித குரங்குகளுடன் வாழ்ந்து வரும் இந்த சிறுமி.

மனிதரை போல அல்ல...
இந்த சிறுமியால் சாதாரண மனிதர்களை போல நடக்க, பேச முடிவதில்லை. போலிஸ் ரோந்து வாகனத்தின் சோதனையின் போது இந்த ரியல் மோக்லி அவர்களது கண்களில் தென்பட்டுள்ளார். எவ்வளவோ பேச முயன்றும், அவருடன் சரியாக உரையாக முடியாமல் போனது. இவர் குரங்குகளை போல நான்கு கால்களில் தான் நடக்கிறார்.

மனித குரங்குகள் தான் சௌகரியம்!
உத்திரபிரதேசம் - நேபாளம் எல்லையில் அமைந்திருக்கும் கதர்னியாகாட் வனவிலங்கு சரணாலயம் பகுதியில் வாழும் மனித குரங்குகளுடன் வாழ்வதில் தான் இவர் சௌகரியமாக உணர்கிறார்.

முன்னேற்றம் இல்லை!
இரண்டு மாதங்களுக்கு முன் இவரை கண்டெடுத்துள்ளனர். ஆனால், இதுநாள் வரை இவரிடம் எந்த ஒரு முன்னேற்றமும் காணப்படவில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். இரண்டு கால்களில் எப்படி நடப்பது என கற்றுக் கொடுத்தாலும், இவர் நான்கு கால்களில் மனித குரங்குகள் நடப்பது போன்று தான் நடக்கிறார்.
காணொளிப்பதிவு!
ரியல் இந்தியன் மோக்லியின் காணொளிப்பதிவு!

மோக்லி கற்பிக்கும் பாடங்கள்!




Click it and Unblock the Notifications
