வலியின் கடுமையில் இந்தியாவின் மகள் நிர்பயா உதிர்த்த கடைசி வார்த்தைகள்...

Posted By:
Subscribe to Boldsky

"என்ன மன்னிச்சுடுங்க அம்மா, என்னால இந்த வலி தாங்க முடியில, வேதனையாக உள்ளது..." இது தான் நிர்பயா தனது கடைசி மூச்சில் கூறிய வலி மிகுந்த வார்த்தைகள். நிர்பயாவின் இந்த வலி எப்பேர்ப்பட்டது என்பதை இந்தியாவே அறியும். அதனால் தான் நிர்பயா இந்தியாவின் மகளானார்.

எத்தனையோ வன்கொடுமைகள் இன்றளவும் இந்தியாவில், உலகில் பெண்கள் எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால், இந்தியாவை இதற்கு எதிராக தனது குரலை பலமாக எழுப்ப காரணமாக இருந்தது நிர்பயாவின் வழக்கு தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊடகங்கள் பயன்படுத்திய பெயர்கள்!

ஊடகங்கள் பயன்படுத்திய பெயர்கள்!

நிர்பயாவின் வழக்கில் இருந்து தான் ஊடகங்கள் மிகவும் கூடுதலாக தாங்கள் அச்சிடும், பேசும், எழுதும் எந்த ஒரு வார்த்தையும் பாதிக்கப்பட்ட பெண்ணை பாதித்துவிட கூடாது என்ற அக்கறையை அதிகரிக்க செய்தது.

டாமினி, நிர்பயா, அமானத் என அவரது இயற்பெயர் தெரியாத அளவிற்கு வேறு பெயரை பயன்படுத்தியே வழக்கு முழுவதும் நடத்தப்பட்டது. இதில் நிர்பயா பிரபலம் அடைந்தது.

போராட்டம்!

போராட்டம்!

பேருந்தில் வன்கொடுமைக்கு ஆளானதை காட்டிலும், அதிகமாக மருத்துவமனையில் நிர்பயா மிகுந்த வலியில் வாழ்ந்து வந்தார். மருத்துவமனையில் நிர்பயாவிற்கு செயற்கை சுவாச உதவி அளிக்கட்டப்பட்டிருந்தது.

நரகம்!

நரகம்!

டிசம்பர் 26 அன்று சிகிச்சைக்காக சிங்கபூர் அழைத்து செல்லப்பட்டார் நிர்பயா. ஆனால், சிகிச்சை பலனின்றி 13 நாட்கள் வேதனைக்கு பிறகு, "என்ன மன்னிச்சுடுங்க அம்மா, என்னால இந்த வலி தாங்க முடியில, வேதனையாக உள்ளது..." என்ற ரணமான தனது கடைசி வார்த்தைகளுடன் உயிர் பிரிந்தார் மருத்துவ மாணவி நிர்பயா.

ஆவணப்படம்!

ஆவணப்படம்!

நிர்பயாவிற்கு நடந்த அந்த கொடுமையான சம்பவத்தை மையமாக வைத்து இங்கிலாந்தை சேர்ந்த லெஸ்லி உட்வின் என்பவர் ஆவணப்படம் ஒன்று தயாரித்து, அதற்கு இந்தியாவின் மகள் என பெயரிட்டு மகளிர் தினத்தன்று வெளியிட்டார்.

மக்களை ஆக்ரோஷமாக்கிய கருத்து!

மக்களை ஆக்ரோஷமாக்கிய கருத்து!

இந்த வழக்கில் கைதான, ஓட்டுனர் முகேஷ் சிங் என்பவர் சிறையில் இருந்த போது இந்தியாவின் மகள் ஆவணப்படத்திற்கு பேசினார், அதில் "நான் அந்த பெண்ணை கற்பழிக்கவில்லை. பாலியல் வன்கொடுமைக்கு ஆண்களை காட்டிலும் பெண்கள் தான் காரணம். அந்த நேரத்தில் அந்த பெண் எதிர்த்து போராடி இருக்க கூடாது. அமைதியாக இருந்திருக்க வேண்டும்" என்ற சர்ச்சை கருத்தை பதிவு செய்திருந்தார்.

எண்ணற்ற இந்தியாவின் மகள்கள்...

எண்ணற்ற இந்தியாவின் மகள்கள்...

நிர்பயாவின் சம்பவத்திற்கு முன்னும், அதன் பின்னும் என எண்ணற்ற இந்தியாவின் மகள்களின் தோல் உரித்தெடுக்கப்படுகின்றன. மிருகங்களின் பசிக்கு இரையாகி இருட்டுக் கூண்டில் சிலரும், கல்லறை பெட்டியில் பலரும் அடைப்பட்டு கிடைக்கின்றன.

மரண தண்டனை போதுமா?

மரண தண்டனை போதுமா?

நிர்பயாவின் வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம். ஏறத்தாழ நான்கரை ஆண்டுகள் கழித்து இந்த தீர்ப்பு வந்துள்ளது.

முற்றுப்புள்ளி? மூன்று புள்ளி?

முற்றுப்புள்ளி? மூன்று புள்ளி?

இந்த நான்கரை ஆண்டுகளில் எத்தனை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றுக்கு எப்போது தண்டனை கிடைக்கும்.? இவற்றுக்கு தீர்ப்பு வழங்கும் இடைப்பட்ட காலத்திற்குள் இன்னும் எத்தனை இந்தியாவின் மகள்கள் சூறையாடப்படுவார்கள்? சட்டம் அல்லது தீர்ப்பு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமே தவிர மூன்று புள்ளிகளை வைத்து தொடர்கதையாக்கிவிட கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Last Words from Nirbhaya, The Pain of India's Daughter!

The Last Words from Nirbhaya, The Pain of India's Daughter!
Story first published: Saturday, May 6, 2017, 12:40 [IST]
Subscribe Newsletter