For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொடரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், என்ன தான் செய்வது?

இங்கு தொடரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பற்றிய ஒரு சாதாரன மனிதனின் பார்வை கூறப்பட்டுள்ளது.

|

ஓரிரு தினங்களுக்கு முன்னர் 3 வயது குழந்தை, அதற்கும் முன்னர் ஹாசினி எனும் சிறுமி... கல்லூரி சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம் பெண், ஐ.டி கம்பெனியில் இரவு ஷிப்ட் முடிந்து கேபில் கிளம்பிய பெண்....

இவர்கள் மட்டுமல்ல பிரபலங்களும் கூட என பாலியல் வன்முறைகளை தினம் தினம் எதிர் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் எண்ணிலடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது.

Sexual Harassment Against Women - A Common Man's View!

ஓரிரு நாட்களுக்கு முன்னர் பிரபல நடிகை பாலியல் வன்முறைக்கு உள்ளானார். ஒரு நடிகைக்கே இந்த நிலையா? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

உண்மையில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி அது வழக்குக்கு வந்தது தான் இது முதல் முறை. யாருக்கும் தெரியாமல் நான்கு சுவருக்குள்ளும், கேரவனுக்குள் அடங்கியவை பல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வரலக்ஷ்மி!

வரலக்ஷ்மி!

இரு தினங்களுக்கு முன் பிரபல நடிகை தைரியமாக தனக்கு நடந்த கொடுமையை வெளி கூறியதை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த தைரியம் தான், இப்போது பல நாட்களுக்கு முன்னர் வரலக்ஷ்மிக்கு நடந்த கொடுமையை சமூக தளத்தில் பதிவிட வைத்துள்ளது.

முன்னணி டிவி சேனலின் ப்ரோக்ராம் ஹெட்!

ஒரு முன்னணி தொலைக்காட்சியின் ப்ரோக்ராம் ஹெட், நிகழ்ச்சி முடிந்த பிறகு தன்னை தனிமையில் பார்க்க அழைத்ததாகவும், தகாத நடந்துக் கொள்ள முயற்சித்தார் என்றும் வரலக்ஷ்மி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

வெளி கூற தயங்கும் பெண்கள்!

வெளி கூற தயங்கும் பெண்கள்!

சென்ற வருடம் பெங்களூரில் எச்.எஸ்.ஆர் என்ற பகுதியில் வசித்து வந்த ஐ.டியில் பணிபுரியும் பெண் வேனில் வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டார். ஆனால், இது குறித்து அவர் வெளியே கூறவில்லை.

உடன் தங்கியிருந்த தோழிகள் அவரது உடல் நிலை மோசமானதை அடுத்து மருத்துவமனியில் அட்மிட் செய்த போது தான் அவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் தெரியவந்தது.

குறி வைத்து தூக்கும் காமுகன்கள்!

குறி வைத்து தூக்கும் காமுகன்கள்!

இந்த வழக்கில் சிக்கிய டிரைவர்கள் தாங்கள் அழகான பெண்களை தான் குறிவைக்கிறோம் என்றும், அவர்கள் தான் தங்கள் வாழ்க்கையின் எதிர்காலத்தை எண்ணி வெளி கூறுவது இல்லை என்றும் கூறி அதிர வைத்தனர்.

சமூகம் தான் காரணம்!

சமூகம் தான் காரணம்!

எந்த தவறும் செய்யாத பெண் எவனோ ஒரு மிருகத்தால் கற்பழிக்கப்படுகிறார். ஆனால், நமது சமூகம் அந்த பெண்ணை தான் தூரம் ஒதுக்கி வைக்கிறதே தவிர அந்த ஆணை அல்ல.

அந்த ஆண் காலரை தூக்கிவிட்டபடி தான் தெருக்களில் தைரியமாக உலா வருகிறான். பிறகு எப்படி ஒரு பெண் தனக்கு நடந்த இந்த அவலத்தை பற்றி வெளிகூற முன் வருவாள்.

தண்டனை என்ன?

தண்டனை என்ன?

ஒருவர் கொலை செய்தால் அவர்க்கு மரண தண்டனை அளிக்கிறோம். அதுவே ஒரு பெண்ணை கற்பழித்தவனுக்கு என்ன தண்டனை, சில ஆயிரங்கள் அபராதம், ஓரிரு ஆண்டுகள் சிறை தண்டனை. ஏதோ ஒரு சில போலீஸ் அதிகாரிகள் ஆங்காங்கே என்கவுண்டர் செய்து சுட்டு வீழ்த்துகின்றனர். மற்றபடி 100-ல் 99 பேர் சுதந்திரமாக வெளியே ராஜநடை போட்டு திரிகின்றனர்.

என்ன தான் செய்வது?

என்ன தான் செய்வது?

கொலைக்கு எப்படி மரண தண்டனை தகுந்த தண்டனையோ, அப்படி தான் பாலியல் வன்முறைக்கு அந்த கொடூரனின் ஆணுறுப்பை துண்டிப்பது தான் தகுந்த தண்டனை.

ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்தவன், அவன் வாழ்க்கையை இழக்கட்டுமே. இதில் என்ன தவறு. எந்த தவறும் செய்யாத அந்த பெண் வாழ்நாள் முழுக்க அவதிப்படும் போது. எல்லா தவறும் செய்த அவன் அவதிப்படட்டுமே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sexual Harassment Against Women - A Common Man's View!

Sexual Harassment Against Women - A Common Man's View!
Desktop Bottom Promotion