Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க எல்லோருக்கும் பிரச்சினைகளை கொடுப்பதற்காகவே பிறந்த ஆபத்தான ஆன்மாக்களாம் -
2 மாம்பழமும் 6 பிரட்டும் இருந்தா.. ஸ்கூல் விட்டு வர பிள்ளைகளுக்கு 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட் செஞ்சு குடுங்க... -
International Yoga Day 2026: சர்வதேச யோகா தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? இந்த வருட யோகா தினத்தின் சிறப்பு என் -
சனி பகவான் நிலையால் இனி 2027 வரை இந்த 3 ராசிக்காரங்க நல்ல வளர்ச்சியை காண்பார்களாம்! -
ஆந்திரா மெஸ் ஸ்டைல் கோவைக்காய் துவையல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க -
International Yoga Day 2026: முதுகு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த 4 யோகாசனங்களை தினமும் செய்யுங்க.. -
சூரியன் மிதுன ராசி செல்வதால் உருவாகும் ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் கொடுக்கப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 வகை ஆண்களுடன் நட்போ, காதலோ வைத்துக் கொள்ளக்கூடாதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 15-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்கு நிதி, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது!
120 மனைவி, 203 பிள்ளைகள்... கடவுளின் நேரடி உத்தரவு என லீலை புரிந்த ஆப்ரிக்க போதகர்!
பாபா மசாபா என்கிற முகமது பெல்லோ அபூபக்கர். இவர் பெரு ஆப்ரிக்கா போதகர். இவருக்கு 120 மனைவிகளும், 203 குழந்தைகளும் இருக்கின்றனர்.
இந்திய சாமியார்களில் சிலர் பாலியல் வன்கொடுமை செய்யததாக, ஆசிரமத்தில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக கைது செய்யப்பட்ட, வழக்கு பதியப்பட்ட நிகழ்வுகளை நாம் கண்டிருப்போம்.
ஆனால், ஆப்ரிக்காவை சேர்ந்த ஒரு போதகர் கடவளின் நேரடி ஆணை என கூறி 120 பெண்களை திருமணம் செய்து 203 குழந்தைகள் பெற்றுள்ளார்...

யாரு சாமி இவரு?
இவரது இயற்பெயர் முகமது பெல்லோ, அபூபக்கர். ஆனால், இவர் பாபா மசாபா என பரவலாக அழைக்கப்பட்டு வந்தார். அபூபக்கர் நைஜீரியாவை சேர்ந்தவர் இவர் இந்த வருடம் ஜனவரி மாதம் 17ம் தேதி காலமாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

துணையும், பிள்ளைகளும்!
இவர் இறக்கும் முன் வரை 120 திருமணங்கள் செய்திருந்தார். மேலும், இவரது மனைவியர் மூலம் இவருக்கு 203 குழந்தைகள். 120 மனைவிகளில் இவர் 10 பேரை விவாகரத்து செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாம் கம்யூனிட்டி நோட்டீஸ்!
பொதுவாக அதிகபட்சம் இஸ்மால் மதத்தை சேர்ந்த ஒரு நபர் நன்கு திருமணம் செய்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக் கொண்டதால் இவர் மீது ஃபத்வா (fatwa) பிறப்பிக்கப்பட்டது.

2008-ல்..
பாபா மசாபா பற்றி 2008-ல் பிபிசிக்கு அவரது மனைவியர் சிலர் பேட்டி அளித்தனர். அதில், தாங்கள் பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு தீர்வு காண அவரை பார்க்க சென்றோம் என்றும், அவர் எங்களை குணமாக்கினார் என்றும் கூறியிருந்தனர்.

கடவுளின் செயல்!
பாபா மசாபா, "தானாக எந்த ஒரு பெண்ணையும் தேடி செல்லவில்லை என்றும், அவர்களாக என்னை தேடி வந்தார்கள் நான் ஏற்றுக் கொண்டேன். இது கடவுளின் செயல் என்றும் பல பேட்டிகளில் கூறியிருந்தார்.

கணியாட் முகமது பெல்லா!
பாபா மசாபாவை திருமணம் செய்து இருபது ஆண்டுகள் அவருடன் வாழ்ந்த மூத்த மனைவி கணியாட் முகமது பெல்லா, "நான் பள்ளி பயிலும் போது என்னை என் தாய் இவரிடம் அழைத்து சென்றார்.
பிறகு என்னை இவரை திருமணம் செய்துக் கொள்ள கூறினார். நான் இவ்வளவு வயதான நபரை திருமணம் செய்துக் கொள்ள முடியாது என மறுத்தேன். ஆனால், அதற்கு பாபா மசாபா இது கடவுளின் நேரடி உத்தரவு என கூறி திருமணம் செய்துக் கொண்டார்" என பதில் கூறியிருந்தார்.



Click it and Unblock the Notifications