நீயா, நானா ஹெலிகாப்டர் பெண்ணுக்கு வந்த புதிய பிரச்சனை!

Posted By:
Subscribe to Boldsky

சென்ற வாரம் நீயா, நானாவில் திருமணமாக போகும் மகள்கள் மற்றும் அவர்களுடைய அம்மாக்கள் விவாதம் செய்துக் கொண்ட நிகழ்ச்சி ஒளிப்பரப்பு ஆனது.

அதில் மாப்பிள்ளை எப்படி வேண்டும் என்பதில் துவங்கி சொத்து பிரிப்பது, திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்ற ஆசைகள் வர பலவன விவாதம் செய்யப்பட்டன.

Neeya Naana Helicopter Girl and Meme Trolling Issues

அதில் பல பெண்கள் சுவாரஸ்யமாகவும், பலர் அதிரவைக்கும் அளவிற்கும் பேசினர். அதில் ஒரு பெண் தனது திருமணம் வித்தியாசமாக நடக்க வேண்டும் எனவும், திருமண நாளின் போது ஹெலிகாப்டரில் வந்து இறங்க வேண்டும் என்பது போன்ற கருத்தை பதிவு செய்தார்.

இது கடந்த ஒருவாரமாக வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்,, ட்விட்டரில் கேலி, கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. மேலும், அதில் பேசிய அந்த பெண்ணின் புகைப்படம் சேர்த்து கிண்டல் செய்து வருவதால் அந்த பெண் அவதிக்குள்ளாகியுள்ளார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ட்ரால்!

ட்ரால்!

அந்த பெண் திருமணத்திற்கான என்ட்ரி தான் ஹெலிகாப்டரில் வேண்டும் என்று கேட்டிருந்தார். அதுவும் வாடகைக்கு. ஆனால், அந்த கருத்து வடிவேல் சொம்பில் தண்ணி கேட்க, சொம்பு கொடுத்தால் தான் தாலி கட்டுவேன் என்ற கதை போல, ஹெலிகாப்டரில் வந்தால் தான் திருமணம் செய்துக் கொள்வேன் என்பது போல மாறியது.

நிவேதா சுவாமிநாதன்!

நிவேதா சுவாமிநாதன்!

நிவேதா சுவாமிநாதன் கும்பகோணத்தை சேர்ந்த பெண். இவர் தற்போது சென்னையில் ஊடக கல்வி பயின்று வருகிறார்.

ஷோ பார்க்காமல் கிண்டலா?

ஷோ பார்க்காமல் கிண்டலா?

நான் கூறிய கருத்து வேறு, இப்போது அதை கிண்டல் செய்துக் கொண்டிருப்பவர் கூறி கொண்டிருக்கும் கருத்து வேறு. ஷோவை பார்க்காமலேயே தன்னை கேலி, கிண்டலுக்கு ஆளாக்குகின்றனர் என நிவேதா கூறியுள்ளார்.

ஆசை கூடாதா?

ஆசை கூடாதா?

ஒருநாள் ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்து திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை என்று கூறினேன். இது போன்ற ஆசைகள் எல்லா பெண்களிடமும் இருக்கும், என நிவேதா கூறியுள்ளார்.

மீம்ஸ் பிடிக்கும், ஆனாலும்!

மீம்ஸ் பிடிக்கும், ஆனாலும்!

எனக்கும் மீம்ஸ் பிடிக்கும். ஆனால், ஒருவர் கூறாத கருத்தை, கூறியாதாக மீம்ஸ் போட்டு கேலி, கிண்டல் செய்வது தவறு தானே என்றும் நிவேதா கூறியுள்ளார்.

வரதட்சணை!

வரதட்சணை!

மேலும், தான் வரதட்சணைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் பெண் என்பதை தெரியாமல் இவர்கள் இப்படி மீம்ஸ் மூலம் ட்ரால் செய்கிறார்கள் என்றும் நிவேதா கூறியுள்ளார்.

கவலை வேண்டாம்!

கவலை வேண்டாம்!

மேலும், நிவேதாவின் தந்தை , தனது மகள் இது பற்றி கால் செய்து கூறிய போது, வெளியூரில் இருக்கும் பெண் எப்படி இருக்கிறாரோ என்ற அச்சம் ஏற்பட்டதாகவும். பிறகு, இதெல்லாம் சகஜம், ஓரிரு நாளில் வேறு செய்தி வந்துவிட்டால் இது மறைந்துவிடும் என்றும் கூறி சமாதானப்படுத்தியதாக கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Neeya Naana Helicopter Girl and Meme Trolling Issues

Neeya Naana Helicopter Girl and Meme Trolling Issues!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter