For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிழவன், அண்ணன், டியூஷன் டீச்சர், அங்கிள், இன்னும் எத்தனை பேர் திங்க இந்த தேகம்? - My Story #049

கிழவன், அண்ணன், டியூஷன் டீச்சர், அங்கிள், இன்னும் எத்தனை பேர் திங்க இந்த தேகம்? - My Story #049

|

பொதுவாக என்னை சுற்றி இருக்கும் மக்கள் ஏன் நீ மற்ற பெண்களை போல திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதில்லை என கேட்பதுண்டு. சிலர், உனக்கு எந்த ஆண் மீதும் ஈர்ப்பே ஏற்பட்டதில்லையா என்றும் வியப்புடன் கேட்பார்கள்.

அவர்களுக்கு எல்லாம் தெரியாது, நான் ஏன் ரயிலில் உறங்க மிகவும் கடினமாக உணர்கிறேன் என, தினமும் உறக்கத்தின் போது நான் எதிர்க் கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன என்று அவர்களால் புரிந்துக் கொள்ள முடியாது.

இன்று, என்னை நோக்கி கேட்கப்படும் இந்த அனைத்து கேள்விகளுக்கும் ஒவ்வொன்றாக நான் பதிலளிக்க விரும்புகிறேன். அதற்கு முன், எனது வாழ்க்கையை உங்களால் வாழ முடியுமா? என்பது தான் எனது கேள்வி. அனுதினமும் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்ட வாழ்க்கை தான் என்னுடையது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐந்து வயதிருக்கும்...

ஐந்து வயதிருக்கும்...

அப்போது எனக்கு ஐந்து வயது தான் இருக்கும். அன்று எனக்கு நடந்த கொடுமைகளை எதிர்த்து என்னால் நிற்க முடியவில்லை. இன்று 18 வருடங்கள் கழிந்தும் கூட, நான் அதை எதிர்த்து நிற்க தடுமாறிக் கொண்டுதான் இருக்கிறேன்.

இப்போது என் வயது 24. பெங்காலில் வாழ்ந்து வருகிறேன். எனது சிறு வயதில் எனது அப்பாவேறு இடத்தில் பணிசெய்து வந்த காரணத்தால். நான் எனது பள்ளிப்படிப்பை வெளிமாநிலத்தில் பயின்றேன்.

ரயில் பயணம்!

ரயில் பயணம்!

ஒரு நாள் எங்கள் வீட்டில் இருந்து அப்பா வேலை செய்யும் இடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். அங்கே நான் ஒரு முதியவரை கண்டேன். அவருக்கு ஐந்து வயதில் ஒரு பேரன் இருந்தான். அவர் தனது பேரன் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டிருந்தார்.

அவரை கண்ட போது, அந்த முதியவர் மிகவும் அன்பு காட்டும் நபர் என்று தான் எண்ணினேன். எனது பெற்றோரும் கூட, அந்த முதியவர் தனது பேரன் மீது செலுத்தும் அன்பை கண்டு உருகினார்கள்.

இச்சை!

இச்சை!

அவருடன் பழக ஆரம்பித்த போது, நானும் அவரது அன்பை உணர்ந்தேன். எனது தாத்தா போலவே அவரும் என்மீது மிகவும் அன்பு செலுத்தினார். ஆனால், அந்த கிழவன் காட்டியது அன்பு கிடையாது காம இச்சை என்பதை முதலில் நான் அறிந்திருக்கவில்லை.

இரயில் பயணம் இரவை எட்டியது. எங்கள் கம்பார்ட்மெண்டில் அனைவரும் உறங்கிவிட்டனர். திடீரென நான் ஏதோ அசௌகரியமாக உணர துவங்கினேன். உறங்கிக் கொண்டிருந்த எனக்கு, யாரோ என்னை தகாத முறையில் தீண்டுகிரார்கள் என்பதை உணர முடிந்தது. அப்போது எனக்கு வயது வெறும் ஐந்து தான்.

அச்சம்!

அச்சம்!

என்ன கொடுமை நடக்கிறது என அறிய முடிந்த எனக்கு மிகுந்த அச்சமும் இருந்தது. அப்போது எனது அப்பா எழுந்துவிட்டார். நானும் கண்விழித்துக் கொண்டேன். அப்பாவிடம் நான் இருக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என கூறினேன். அது தான் நான் செய்த பெரும் தவறு. நான் கீழ் பர்த்தில் இடம் மாற்றிக் கொண்டேன். இது அந்த கிழவனுக்கு மிக சௌகரியமாக போனது.

கொஞ்சம் நேரம் கழிந்தது... இம்முறை மீண்டும் அதே மாதிரியான தீண்டல். ஆனால், சென்ற முறையை விட மிகவும் மோசமாக. அச்சத்தில் உறைந்துபோன எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பதட்டத்தில் எழுந்து அந்த கிழவனின் கைகளை தட்டிவிட்டேன்.

அழுதேன்!

அழுதேன்!

அந்த கிழவன் மிக மெல்லிய குரலில், கழிவறை செல்ல வேண்டுமா என கேட்டான். நான் அதிர்ந்து, தேவையில்லை என கூறினேன். வீடு திரும்பியதும் மிகவும் அழுதேன். என்னால் எனக்கு எப்படி ஆறுதல் சொல்லிக் கொள்வது என தெரியாத வயது அது.

இதை பற்றி யாரிடம், எப்படி கூறுவது என்றும் தெரியவில்லை. இந்த கொடூரமான நிகழ்வை நான் யாருடனும் பகிர்ந்துக் கொள்ளவில்லை. என் வாழ்வில் முதன் முதலில் நடந்த பாலியல் வன்கொடுமை இது.

அடுத்த முறை...

அடுத்த முறை...

இதுவே முதலும் கடைசியானது இல்லை. அடுத்த முறை எனது சொந்த உறவினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன். என்னுள் ஆண்கள் மீது வெறுப்பு அதிகரிக்க காரணமாக சம்பவம் அது. இதை பற்றி பெற்றோரிடம் எப்படி பேசுவது என்றும் தெரியவில்லை.

அப்போது எனக்கு வயது எட்டு. இது பற்றி பேசினால் அவர்கள் புரிந்துக் கொள்வார்களா? என்னை நம்புவார்களா? என்பது பற்றி எல்லாம் யோசிக்க தெரியாத வயது.

அண்ணன்!

அண்ணன்!

என் அண்ணன் போன்ற உறவில் இருந்த நபர் அவன். அவனது உண்மையான நோக்கம் என்ன என்பது அறியாமல் அவனுடன் பழகி வந்தேன். அவனை முதன் முதலில் நான் சந்தித்த போது எனக்கான சந்தேகங்களுக்கு தெளிவு பெறவே சென்றேன்.

ஆனால், அவன் என்னை பிடித்து இழுத்து, தள்ளி தவறாக நடந்துக் கொள்ள முயன்றான். நான் இது குறித்து அப்பாவிடம் கூற போகிறேன் என கத்தினேன். அதற்கு அவன், "போ, போய் கூறு, உன்னை யாரும் நம்பவும் மாட்டார்கள். நீ கூறுவது குறித்து எனக்கு எந்த அச்சமும் இல்லை என கூறினான்.

நான் அவனது 'அந்த' பகுதியில் உதைத்து விட்டு அந்த இடத்தில் இருந்து ஓடிவிட்டேன்.

நானும் அவனும் ஒரே காலனியில் வசித்து வந்தோம். ஒவ்வொரு முறை நாங்கள் எதிர் எதிரே பார்த்துக் கொள்ளும் போது ஒரு மிருகம் போல சிரிப்பான். ஒவ்வொரு முறை அவன் என்னை சந்திக்கும் போது நான் கையறுநிலையில் இருந்தேன். அப்போது என் வயது 11.

டியூஷன் டீச்சர்!

டியூஷன் டீச்சர்!

இதன் பிறகு எனது டியூஷன் டீச்சர். அவர் தான் என் வாழ்வில் நான் கண்ட மிகவும் கொடிய நபர். ஒவ்வொரு முறையில் எனது தேர்வு தாளை எடுத்து வைத்துக் கொண்டு அவரது அருகே அழைபார். அனைவரின் முன்னிலையில் அவனது கையை எனது மார்பு பகுதியில் வைத்து வலிக்கும்படி கடுமையாக அழுத்துவான்.

அது மிகவும் வலிமிகுந்த தருணம். அந்த நிகழ்வையும், வலியையும் பற்றி என்ன கூறுவது, அது தண்டனையா? அவன் என்னை கொடுமை படுத்துகிறானா என்பதே நான் அறிந்திருக்கவில்லை அந்த வயதில். பிறகு, எப்படியோ அந்த தண்டனையில் இருந்து என்னை தற்காத்துக் கொண்டேன். அப்போது எனக்கு வயது 13.

கல்லூரி!

கல்லூரி!

12ம் வகுப்பு முடித்து நான் கொல்கத்தாவில் ஒரு பிரபல கல்லூரியில் அட்மிஷன் பெற்றேன். ஆரம்பத்தில் அங்கே நான் தங்க ஒரு சரியான இடம் கிடைக்கவில்லை. ஆகையால், தினமும் ரயிலில் கல்லூரிக்கு பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.

ஒருநாள் சூப்பர் பாஸ்ட் ரயிலில் பயணம் செய்துக் கொண்டிருந்த போது, உட்கார இடம் கிடைக்காத காரணத்தால் நின்றுக் கொண்டே பயணம் செய்தேன். ஒரு நடுவயது அங்கிள் எனக்கு உட்கார இடம் கொடுத்தார். நான் இரண்டு ஆண்களுக்கு மத்தியில் உட்கார வேண்டிய சூழல். இருவரும் நடுவயது ஆண்களே.

அந்த கைகள்...

அந்த கைகள்...

என்னை உட்கார அழைத்த அந்த ஆணின் கைகள் என்னை தவறாக தீண்ட துவங்கியது. இருவர் மத்தியில் அமர்ந்த பிறகு கூட்டம் கூடிய காரணத்தால் ஒரு அங்குலம் கூட அசைய முடியாத சூழல் உண்டானது. நான் எவ்வளவு கொடுமைகளை அந்த தருணத்தில் அனுபவித்தேன் என்பதை ஒற்றை வரியில் கூறிவிட முடியாது.

என்னால் முடிந்தது அந்த இரண்டு மிருகங்களையும் கண்டு முறைத்து பார்க்க முடிந்தது மட்டும் தான்.

வலிமை!

வலிமை!

அடுத்த நிலையத்தில் அந்த இருவரும் இறங்கிவிட்டார்கள். ஒரு குழந்தை போல அழுதுக் கொண்டிருந்தேன். என்னை நானே மிகவும் அழுக்காக உணர்ந்தேன். அந்த 17 வயதில் என்ன செய்வது, எப்படி எதிர்ப்பது என அறியவில்லை. இப்படி ரயில் பயணங்களில் நடந்த கொடுமைகள் ஏராளம்.

காலம் கடந்தது, நான் வளர்ந்தேன் முதிர்ச்சி அடைந்தேன். என்னை நானே வலிமையாக்கிக் கொண்டேன். அந்த பொறிக்கிகளை எப்படி கையாள வேண்டும் என கற்றேன். இனி, ஒருவன் என் மீது கை வைக்க முடியுமா? என்ற அளவிற்கு சண்டைக் கட்ட துவங்கினேன்.

அவர்களை எதிர்த்து எப்படி வார்த்தைகள் பிரயோகப்படுத்த வேண்டும் என்பதையும் கற்றேன். இதனால், மற்றவர்களும் எனக்கு என்ன கொடுமை நடக்கிறது என்பதை கவனிக்க துவங்கினார்கள்.

ஆயினும்...

ஆயினும்...

இன்று 24 வயதில் நான் மிகவும் வலிமையான பெண்ணாக என்னை நிலைநிறுத்திக் கொண்டாலும். என் வாழ்வில் நான் கடந்து வந்த ஆண்கள். அவர்கள் எனக்கு இழைத்த அநீதி போன்றவை இன்னும் என் இரவுகளை தின்றுக் கொண்டே தான் இருக்கிறது. இதனால் தான் ஆண்கள் என்றாலே எனக்கு அருவருப்பாக இருக்கிறது. அச்சமும் கூட.

நான் உறக்கம் இழந்த இரவுகளின் எண்ணிக்கை தொடர்ந்துக் கொண்டே தான் இருக்கிறது. அந்த நினைவுகளை கொன்று நான் உறங்க நள்ளிரவு ஆகிவிடுகிறது. கொஞ்சம், கொஞ்சமாக என்னை மாற்றிக் கொள்ள விரும்புகிறேன். நடக்குமா என்று தான் தெரியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

My Story: Now, I Have Learnt To Fight Back When Someone Touches Me Inappropriately!

My Story: Now, I Have Learnt To Fight Back When Someone Touches Me Inappropriately!
Desktop Bottom Promotion